ரூ.50000க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை பான் கார்டு இல்லாமலே செய்யலாம்
ரூ.50000க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகளை PAN Card இல்லாமல் அதற்கு பதிலாக ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் நீங்கள் ரூ.50000க்கு அதிகமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதற்கு பான் கார்டு என்ற நிரந்தர கணக்கு எண் தேவைப்பட்டது.
மேலும் வருமானவரி தாக்கல் செய்யவும் இதுபோன்ற பல இடங்களில் PAN Card ஆனது கட்டாயம் தேவைப்பட்டது.
ஆனால் தற்போது வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக பான் எண்ணிற்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விகளுக்கு வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறும்போது,
தற்போது நாடு முழுவதும் 120 கோடி ஆதார் அட்டைகளை வைத்திருக்கிறார்கள். அதில் 41 கோடி பேர் மக்கள் மட்டுமே பான் அட்டையை வைத்துள்ளனர். அதில் 22 கோடி பேர் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்துள்ளனர்.
பல பேருக்கு பான்கார்டு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் அவற்றை பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை.
ஒருவர் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் தகவல்களை கொடுக்க வேண்டும். எனவே ஆதார் அட்டையை நேரடியாக பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
பொதுவாக வங்கிகள், வருமான வரித்துறை, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குதல் போன்ற இடங்களில் பான் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது.
பான் கார்டு கட்டாயம் தேவைப்படும் இடங்களில், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்படியென்றால் பான்கார்டு இனி தேவைப்படாத என்ற சந்தேகம் வரலாம். வரி செலுத்துதலை எளிமைப்படுத்தவும், வரி செலுத்துவோரின் வசதிக்காகவும் மட்டும்தான் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் மற்றும் பான் அட்டை இவை இரண்டும் உபயோகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த வசதியாக இருக்கும். இன்னும் சிலருக்கு பான் கார்டு பயன்படுத்த வசதியாக இருக்கும். எனவே இந்த இரண்டில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படியுங்கள் – How to Get Instant PAN Through Aadhaar in 5 Minutes