News

What is Gratuity? Gratuity Calculation, Eligibility, Formula

ஒரு நிறுவனம் தகுதியுள்ள பணியாளர்களுக்கு Gratuity தொகையை வழங்குகிறது. இந்த Gratuity தொகை என்றால் என்ன? Gratuity தொகையை பெறுவதற்கான தகுதி (Eligibility) என்ன? மற்றும்  இதை எப்படி Calculate செய்கிறார்கள்? இதை பற்றிய விவரங்களை இங்கே தெளிவாக காணலாம்.

What is Gratuity?

பணிக்கொடை அல்லது Gratuity Amount என்பது ஊதியம் செலுத்தும் சட்டம் 1972 இன் கீழ், ஒரு நிறுவனம் ஊழியருக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையாகும். 

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, ஊழியரின் சேவையை பாராட்டும் விதமாக நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒரு தொகை ஆகும்.

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கே Gratuity தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும், 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாகவே ஊழியர் இறந்தாலோ அல்லது விபத்து அல்லது நோய் காரணமாக ஊனமுற்றாலோ Gratuity தொகையை வழங்கலாம்.

Eligibility Criteria for Receive Gratuity

ஒரு Employee Gratuity Amount-யை பெறுவதற்கு பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும்.
  • வேலையிலிருந்து வெளியேறும்போது பணிக்கொடையை செலுத்துவார்கள் 
  • விபத்து அல்லது நோய் காரணமாக இறந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ வழங்குவார்கள்.
  • வயதான காரணத்தினால் பணியில் இருந்து விடுபடும்போது.
Read  Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை முழு விவரங்கள்

How to Calculate Gratuity Amount?

Gratuity Act 1972 இன் கீழ் வரும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு Gratuity தொகையை Calculate செய்வதற்கு ஒரு Formula-வை பயன்படுத்துகின்றன. இருப்பினும், ஒரு நிறுவனம் கிராஜிவிட்டி Formula மூலம் கணக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு அதிகமாக கொடுக்கக்கூடாது என்று எந்த சட்டமும் கூறவில்லை. அதாவது, நிறுவனம் விரும்பினால் தங்களின் பணியாளர்களுக்கு Formula மூலம் கணக்கீடு செய்யப்படும் தொகையை விடவும் அதிகமாக வழங்கலாம்.

Gratuity Formula-வை பின்வருமாறு எழுதலாம் 

Gratuity Formula  = S / 26 x 15 x Y

 S – கடைசியாக பெறப்பட்ட சம்பளம் (Last Drawn Salary)

26 – ஒரு மாதத்தில் ஒரு நிறுவனத்தின் மொத்த வேலை நாட்கள் (Total Working days in a Month)

15 – அரை மாதத்திற்கான சம்பளத்தை கணக்கிடுதல் (Calculation of Half Salary)

Y – ஊழியரின் சேவை காலம் (Number of  Service Years)

குறிப்பு 

இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி ( DA) ஆகும்.

For Example:

எடுத்துக்காட்டாக ஒரு ஊழியரின் சம்பளம் 12,000 மற்றும் சேவைக்காலம் 8 வருடங்கள் மற்றும் 7 மாதங்கள் என்று எடுத்துக்கொள்வோம்.

இதற்கான Gratuity Amount-யை Calculate செய்வோம்.

ஒரு ஊழியரின் சேவைக்காலம் 6 மாதங்களுக்கு அதிகமாக இருக்கும்போது, அது ஒரு வருடமாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 

Read  How to Create New Gmail Account in Tamil: முழு விளக்கம்

இங்கு தொழிலாளியின் சேவைக்காலம் 8 வருடங்கள் மற்றும் 7 மாதங்களாக இருப்பதால், அது 9 வருடங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

S = Rs.12,000       Y = 9 Years 

Gratuity Amount = 12,000 / 26 x 15 x 9 

                               = Rs.62,308

கிராஜிவிட்டி தொகையின் அதிகபட்ச உச்ச வரம்பு 20 லட்சம் ஆகும். அதாவது கிராஜிவிட்டி தொகையை Calculate செய்யும்போது 20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவேளை கணக்கீடு செய்யப்பட்ட பணிக்கொடை தொகை 25 லட்சமாக இருந்தால், அதில் 5 லட்சத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.

Calculation of gratuity in case of death

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் Employee இறந்தால், பின்வருமாறு கிராஜிவிட்டி தொகை கணக்கிடப்படுகிறது.

ஊழியரின் சேவைக்காலம் கிராஜிவிட்டிக்கு செலுத்த வேண்டிய தொகை 
1 வருடத்திற்கும் குறைவாக இருக்கும்போது 2 x அடிப்படை சம்பளம் 
1 வருடத்திற்கு மேலாக மற்றும் 5 வருடத்திற்குள்ளாக 6 x அடிப்படை சம்பளம் 
5 வருடங்களுக்கும் மேலாக மற்றும் 11 வருடங்களுக்குள்ளாக 12 x அடிப்படை சம்பளம் 
11 வருடங்களுக்கு மேலாக மற்றும் 20 வருடங்களுக்குள்ளாக 20 x அடிப்படை சம்பளம் 
20 வருடங்களுக்கு மேலாக பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் அடிப்படை சம்பளத்தின் பாதி. அதிகபட்சம் 33 மடங்கு ஊதியம்.
Read  Money Saving Tips in Tamil: பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்

 

Tax on Gratuity

ஒரு ஊழியரால் பெறப்படும் பணிக்கொடை தொகை, அவரின் சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். இது ஏற்கனவே சட்டங்களின் படி வரி விதிப்புக்கு உட்படுகிறது. இருப்பினும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெறப்படும் கிராஜிவிட்டி தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

(i) கிராஜிவிட்டி தொகையை பெரும் நபர் Government Employees ஆக இருந்தால் 

கிராஜிவிட்டி தொகையை பெரும் நபர் அரசாங்க ஊழியராக இருந்தால், அவர் பெரும் பணிக்கொடை தொகைக்கு 100% வரிவிலக்கு உண்டு. அதாவது அவரின் மொத்த தொகைக்கும் எந்த வரியும் விதிக்கப்படாது.

(ii) கிராஜிவிட்டி தொகையை பெரும் நபர் Private Sector Employees ஆக  இருந்தால் 

தனியார் துறை ஊழியர்கள் பெரும் Gratuity Amount ஆனது, ஊதியம் செலுத்தும் சட்டம் 1972 இன் கீழ் வ்ருகிறதா என்பதை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

சட்டத்தின் கீழ் வரும் Private Sector Employees 

பின்வருவனவற்றில் குறைந்த தொகைக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

  • கிராஜிவிட்டி தொகை 20 லட்சம் அல்லது 
  • ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்களுக்கான சமமான சம்பளம் அல்லது 
  • பெறப்பட்ட உண்மையான கிராஜிவிட்டி தொகை 

Gratuity தொகையானது வரி விலக்கை மீறும் சந்தர்ப்பங்களில் நிபந்தனைகளுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.

சட்டத்தின் கீழ் வராத Private Sector Employees 

சட்டத்தின் கீழ் வராத ஊழியர்களுக்கும் சில விலக்குகள் அளிக்கப்படுகிறது.

பின்வருவனவற்றில் குறைந்த தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

  • கிராஜிவிட்டி தொகை 10 லட்சம் 
  • ஓவ்வொரு ஆண்டு சேவைக்கும் அரைமாத சம்பளத்திற்கான சமமான தொகை 
  • பெறப்பட்ட உண்மையான கிராஜிவிட்டி தொகை 

மேற்குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச வரம்பை மீறிய தொகைக்கு வரி விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest