How to Fill Magalir Urimai Thogai Form in Tamil | Sample Form
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தற்போது அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்தை தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும்.சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட முகாம் 24-07-2023 அன்று தொடங்குகிறது.
விண்ணப்பம் மிகவும் எளிமையான வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது விண்ணப்பத்தை எளிதாக நிரப்பும் வகையில் சில முக்கியமான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருப்பதால், அனைவரும் எளிதாக நிரப்பலாம்.
இருப்பினும் விண்ணப்பத்தை நிரப்பும்போது சிலருக்கு சில சந்தேகங்கள் எழலாம். மேலும் ஒரு Sample Form அதாவது மாதிரி விண்ணப்பம் இருந்தால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்களுக்கு சுலபமாக இருக்கும். எனவே Kalainar Magalir Urimai Thogai விண்ணப்பத்தை எப்படி Fill செய்வது மற்றும் அதற்கான மாதிரி விண்ணப்பத்தையும் இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
How to Fill Magalir Urimai Thogai Form
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் மொத்தம் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கேள்விகளுக்கு எழுத வேண்டியதிருக்கும் மற்றும் சில கேள்விகளுக்கு டிக் செய்ய வேண்டியதிருக்கும்.
- முதலாவதாக, விண்ணப்பதாரரின் 12 இலக்க ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
- பிறகு இரண்டாவதாக அதற்கு கீழே விண்ணப்பதாரரின் பெயரை எழுத வேண்டும். இங்கு விண்ணப்பதாரர் என்பவர் 21 வயது நிரம்பிய பெண் ஆவர். சில குடும்பங்களில் 21 வயது நிரம்பிய ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கலாம். அந்நிலையில் அவர்களுள் ஒரு நபரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
- மூன்றாவதாக குடும்ப அட்டை எண் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் ஏற்கனவே விண்ணப்பம் வழங்கிய நபரால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே அதை நீங்கள் நிரப்ப தேவையில்லை.
- 4 மற்றும் 5 வது கேள்விகளில் முறையே திருமண நிலை மற்றும் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும். இதில் மொபைல் எண் என்பது விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நிரப்புக.
- ஆறாவது கேள்வியில் நீங்கள் வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை டிக் செய்யவும். பிறகு நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவும். அடுத்து மின் இணைப்பு எண்ணை நிரப்ப வேண்டும். மின் இணைப்பானது விண்ணப்பதாரரின் பெயரில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது குடும்பத்தில் யாராவது ஒருவரது பெயரில் இருந்தால் போதுமானது ஆகும்.
- மின் இணைப்பு எண்னை நிரப்பும்போது நீங்கள் கட்டணம் செலுத்திய இரசீதில் உள்ளவாறு நிரப்ப வேண்டும். ஏனெனில் மின் கட்டண அட்டையில் மாவட்ட குறியீட்டு எண் இருப்பதில்லை. எனவே ஏற்கனவே கட்டணம் செலுத்திய இரசீதில் இருப்பதை போன்று நிரப்ப வேண்டும்.
- 7,8 மற்றும் 9 ஆவது கேள்விகளில் முறையே விண்ணப்பதாரரின் வங்கியின் பெயர், வங்கிக்கிளையின் பெயர் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இவை அனைத்தும் வங்கி பாஸ் புத்தகத்தில் இருக்கும்.
- பத்தாவது கேள்வியில் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில், மாத வருமானம் மற்றும் வருமான வரி செலுத்துபவரா போன்றவற்றை குறிப்பிட வேண்டும். 18 வயதிற்கு குறைவாக உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க தேவையில்லை.
- 11 வது கேள்வியில் உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். ஆம் எனில் அந்த வீட்டிற்கு அரசு திட்டத்தின் மூலம் நிதிஉதவி பெறப்பட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
- 12 வதில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா என்பதை தெரிவு செய்து, ஆம் எனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
- கடைசியாக குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கார், ஜீப் ட்ராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
- அடுத்து கொடுக்கப்பட்டுள்ள 11 உறுதிமொழிகளை ஒருமுறை படித்துவிட்டு விண்ணப்பதாரரின் கையொப்பத்தை இட வேண்டும். அவ்வளவு தான் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்க்கான விண்ணப்பத்தை நிரப்பிவிட்டீர்கள்.
விண்ணப்பத்துடன் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
Magalir Urimai Thogai Form யை Fill செய்த பிறகு டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தை கொண்டு செல்ல வேண்டும். அதனுடன் கீழ்கண்ட அசல் ஆவணங்களை அதாவது ஒரிஜினல் ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- வங்கி பாஸ் புத்தகம்
- மின் இணைப்பு இரசீது
மேற்கண்ட அசல் ஆவணங்களை சரிபார்த்த பிறகு மீண்டும் விண்ணப்பதாரரிடமே வழங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை
சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தன்னார்வலர்களின் ஸ்மார்ட் போன்களில், Kalaignar Magalir Urimai Scheme என்ற செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். அந்த செயலியை Login செய்வதற்கான Username மற்றும் Password யை அவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள். அதை கொண்டு Login செய்த பிறகு பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய தொடங்குவார்கள்.
நீங்கள் உங்களின் விண்ணப்பத்தை அதை பதிவு செய்பவர்களிடம் கொடுத்த பிறகு, அவர்கள் படிவத்தில் உள்ள ஆதார் எண்ணை உள்ளிட்டு பயோ மெட்ரிக் அல்லது OTP மூலம் Verification செய்வார்கள். Verification செய்த பிறகு ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைன் படிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பிறகு படிவத்தில் உள்ள திருமண நிலை, மின் இணைப்பு எண், வங்கித்தகவல்கள், சொத்து விவரங்கள் போன்ற மற்ற தகவல்களை என்டர் செய்வார்கள். அனைத்து தகவல்களும் என்டர் செய்த பிறகு கடைசியாக ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார்கள்.
இப்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது மற்றும் அதற்கான செயல்முறையை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.