How to Link Aadhaar with PAN Card Online in Tamil

நீங்கள் உங்களின் Pan Card யை Aadhaar Card உடன் இன்னும் Link செய்யவில்லையா? கவலை வேண்டாம். உங்களின் மொபைல் அல்லது கணினியின் மூலம் வெறும் 5 நிமிடங்களில் உங்களின் Pan card யை Aadhaar உடன் இணைக்கலாம்.அதற்கான செயல்முறையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பான் நம்பர் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் எழுத்துக்கள் (Letters) மற்றும் எண்களை (Numbers) கொண்ட 10 இலக்கங்களை கொண்டதாகும். வருமான வரியை தாக்கல் செய்வதற்கு PAN Number கட்டாயம் ஆகும். 

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், வருமான வரிக்கு விண்ணப்பிக்கும்போதும், பதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயம் என்று கூறியுள்ளது. மேலும் வருமான வரி சட்டத்தின் படி, பான் அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆதலால், சமீப காலமாக பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்க்கான காலக்கெடுவை வழங்கி அதை பலமுறை நீட்டித்துள்ளது.

PAN Card யை ஆதாருடன் இணைக்கவிட்டால் அபராதம்

கடந்த வாரம் மக்களவையில் நிதி மசோதா 2021 யை நிறைவேற்றியது. அதன் படி, ஒரு நபர் PAN Card உடன் Aadhaar Card யை இணைக்கவிட்டால் Rs.1000 ரூபாயை தாமத கட்டணமாக செலுத்த வேண்டும். 

Read  New Debit and Credit Card Rules For Security: RBI New Rules

அபராத கட்டணத்தை தவிர்க்க நீங்கள் உடனே PAN Card யை Aadhaar Card உடன் Link செய்ய வேண்டும். 

இவ்வாறு இணைப்பதற்கு நீங்கள் எங்குமே போகவேண்டிய தேவையில்லை. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே வெறும் 5 நிமிடங்களில் பான் கார்டை Link செய்ய முடியும். இதற்க்கு ஸ்மார்ட் போன் அல்லது கணினி இருந்தாலே போதுமானது ஆகும்.

இதையும் படியுங்கள் 

How to Apply for Pan Card Online in Tamil: Step by Step Guide

Steps to Link Aadhaar with PAN Card Online in Tamil

இப்பொழுது பான் எண்ணை ஆன்லைன் மூலம் எப்படி ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பதற்கான செயல்முறையை பற்றி காண்போம்.

பின்வரும் செயல்முறை பின்பற்றி எளிதாக உங்களின் பான் எண்ணை லிங்க் செய்ய முடியும்.

Step 1: நீங்கள் முதலில் வருமான வரித்துறையின் இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அல்லது www.incometax.gov.in/iec/foportal என்ற லிங்க்கை கிளிக் செய்வதின் மூலமாகவும் நீங்கள் வருமான வரித்துறை இணையதளத்திற்கு செல்ல முடியும்.

Step 2: இப்பொழுது வருமான வரித்துறையின் முகப்பக்கம் (Home Page) திறக்கும். அதில் Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.

Link aadhaar with pan in tamil

Step 3: தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் 10 இலக்க PAN Number, 12 இலக்க Aadhaar Number, ஆதார் அட்டையில் இருப்பதை போன்று உங்களின் பெயர் மற்றும் Mobile Number ஆகியவற்றை Type செய்ய வேண்டும்.

Enter PAN Number and Aadhaar Number For Link

பிறகு உங்களின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் இருந்தால், I Have Only Year of Birth in aadhaar Card என்ற Check Box யை டிக் செய்யவும். ஒருவேளை உங்களின் ஆதார் கார்டில் பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு ஆகிய மூன்றும் இருந்தால், அதை டிக் செய்ய தேவையில்லை.

Read  What is Gratuity? Gratuity Calculation, Eligibility, Formula

இரண்டாவதாக உள்ள I agree to Validate my Aadhaar Details என்ற Check Box யை கட்டாயமாக டிக் செய்யவும்.

கடைசியாக Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Step 4: இப்பொழுது நீங்கள் Enter செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Validate என்ற பட்டனை கிளிக் செய்யவும். 

OTP For PAN Aadhaar Linking

Step 5: தற்போது Aadhaar Pan Linking Completed Successfully என்ற செய்தி வரும். 

Pan and Aadhaar Linked Successfully

இப்பொழுது உங்களின் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் லிங்க் செய்யப்பட்டது.

How to Check PAN Aadhaar Link status online

நீங்கள் மேற்சொன்ன செயல்முறையை பின்பற்றி பான் எண்ணை லிங்க் செய்த பிறகு, PAN மற்றும் Aadhaar Link Status யை Check செய்யலாம்.

அதற்கான செயல்முறை என்ன என்பதை பார்ப்போம்.

மேலும் நீங்கள் பான் அட்டையை ஏற்கனவே லிங்க் செய்துள்ளீர்களா என்பதை தெரிந்துகொள்வதற்கும் இந்த செயல்முறையை பயன்படுத்தலாம். 

Step 1: வருமான வரித்துறையின் இணையத்தளமான www.incometax.gov.in/iec/foportal க்கு செல்லவும்.

Step 2: Link Aadhaar Status என்பதை அழுத்தவும்.

Link Aaadhaar Pan Status in Tamil

Step 3: PAN Number மற்றும் Aadhaar Number யை Enter செய்து View Link Aadhaar Status என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Read  Savings Account vs Current Account in Tamil: எது சிறந்தது?

Check PAN aadhaar link status

Step 4: இப்பொழுது Your PAN is Already linked to given Aadhaar என்ற செய்தி வந்தால் நீங்கள் உங்களின் பான் நம்பரை ஆதார் என்னுடன் வெற்றிகரமாக இணைத்துவிட்டீர்கள்.

Aadhaar Pan Link Online in Tamil

எனவே இதற்க்கு பிறகு இதை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில் உங்களின் பான் நம்பர் லிங்க் செய்யப்பட்டுவிட்டது.

முடிவுரை 

பான் நம்பர் ஆதார் அட்டையுடன் லிங்க் செய்வது என்பது கடினமான விஷயம் அல்ல. நீங்கள் இதற்க்கு வெறும் 5 நிமிடங்களை ஒதுக்கி நீங்களே ஆன்லைன் மூலம் லிங்க் செய்யலாம். எனவே உடனடியாக பான் நம்பரை லிங்க் செய்து அபராத தொகையினை தவிர்க்கலாம். 

இந்த கட்டுரையை உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் லிங்க் செய்ய சொல்லுங்கள். இதைப்பற்றிய சந்தேகங்களுக்கு கீழே பதிவிடுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

PAN Card மற்றும் Aadhaar Card யை Link செய்வது கட்டாயமா?

ஆம். வருமான வரி சட்டத்தின் படி பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

பான் மற்றும் ஆதார் எண்ணை லிங்க் செய்யவில்லை என்றால்?

ஒருவேளை நீங்கள் லிங்க் செய்யவில்லை என்றால் Rs.1000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும்.

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் எங்கு இணைக்கலாம்?

நீங்களே ஸ்மார்ட் மொபைல் அல்லது கணினியில் ஆன்லைன் மூலம் இணைக்கலாம். மேலும் ஒரு நெட் சென்டருக்கு சென்றும் இணைக்கலாம்.

லிங்க் செய்ய என்னென்ன தேவைப்படும்?

பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் மொபைல் நம்பர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *