Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை முழு விவரங்கள்
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை யாருக்கு வழங்கப்படும், யாருக்கு வழங்கப்பட மாட்டாது, உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன மற்றும் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் போன்ற பல தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் | Kalainar Urimai Thogai Scheme
குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. அதை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாத மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இதற்காக 2023-2024 நிதியாண்டில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல்கள்:
திட்டத்தின் பெயர் | கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் |
மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் நாள் | செப்டம்பர் 15, 2023 |
ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் உரிமை தொகை | Rs.1000 |
இந்த திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி | Rs. 7000 கோடி |
எத்தனை பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது | 1 கோடி மகளிர் |
எதிர்பார்க்கப்படும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை | 1.5 கோடி விண்ணப்பங்கள் |
இந்த திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரி | இளம்பகவத் IAS |
மகளிர் உரிமை தொகை தொடர்பான அரசு செய்தி வெளியீடு | செய்தி வெளியீடு இணைப்பு |
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள் | Eligibility for Magalir Urimai Thogai Scheme
கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கு சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அது என்ன தகுதிகள் என்று பார்ப்போம்.
- இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 21 யை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 15, 2002 ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- உச்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படும்.
- ஆண்டுக்கு 2.5 லட்சதிற்கு கீழ் குடும்ப வருமானமுள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- நன்செய் (நஞ்சை) நிலம் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் புன்செய் (புஞ்சை) நிலம் 10 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஒரு ஆண்டிற்கு 3600 யூனிடுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள்.
- திருமணம் ஆகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். எனவே அவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
யாரெல்லாம் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது | Ineligible For Magalir Urimai Thogai
கீழ்கண்டவர்கள் கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
- 2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
- குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
- ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்பு ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஒய்வுதியதாரர்கள் உரிமை தொகையை பெற முடியாது.
- கார், ஜீப், ட்ராக்டர் மற்றும் கனரக வானம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் இந்த திட்டத்தின் பயனை பெற முடியாது.
- ஏற்கனவே பெற்று வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களான முதியோர் ஓய்வூதிய திட்டம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெரும் குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியாது.
- அரசிடமிருந்து ஓய்வூதியம் பெரும் குடும்பங்களும் உரிமை தொகையை பெற விண்ணப்பிக்க முடியாது.
கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற எப்படி விண்ணப்பிப்பது | How to Apply for Kalainar Magalir Urimai Thogai Scheme
குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்பு மேற்கண்ட தகுதிகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுள்ள குடும்ப தலைவிகள், பொது விநியோக நியாய விலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
அதாவது உங்களின் ரேஷன் கார்டு எந்த நியாய விலை கடையில் உள்ளதோ அங்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது.