What is MMID Number & How to Generate MMID Code Online
நீங்கள் வங்கிகளின் Mobile Banking மூலம் Money Transfer செய்யும் போது, MMID என்ற வார்த்தையை பார்த்திருப்பீர்கள். அதை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? இதற்கான விளக்கத்தை தான் இந்த இடுகையில் உங்களுடன் பகிரப்போகிறேன். அதாவது MMID என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை பற்றி பார்ப்போம்.
Table of Contents
What is MMID Number?
MMID என்பது Mobile Money Identifier ஆகும். இந்த MMID Number 7 இலக்க தனித்துவ எண்களை கொண்டிருக்கும். இது Interbank பரிமாற்றங்களை அனுமதிக்கிறது.
பொதுவாக நாம் மொபைல் பேங்கிங் மூலம் பணத்தை Transfer செய்யும் போது, Bank Account Number மற்றும் IFSC Code, UPI போன்ற பரிவர்த்தனை முறைகளின் மூலம் Transfer செய்வோம்.
அதே போல் இந்த MMID மூலமாகவும் மற்றொரு நபருக்கு பணத்தை Transfer செய்ய முடியும்.
நீங்கள் Mobile Money Identifier (MMID) முறையின் மூலம் பணத்தை Transfer செய்ய விரும்பினால், நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்புகிறீர்களோ அவருக்கு MMID Number இருக்க வேண்டும். அதே போல் உங்களின் வங்கிக்கணக்கிற்கு மற்றவர்கள் MMID மூலம் பணம் அனுப்ப உங்களுக்கு ஒரு MMID Number இருக்க வேண்டும்.
MMID Code யை Online மூலம் Create & Cancel செய்ய முடியுமா?
நீங்கள் Online மூலமாகவே MMID Code யை Create செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை நீங்கள் வைத்திருந்தால், ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியான MMID யை தான் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, நீங்கள் SBI மற்றும் Indian Bank இல் கணக்குகளை வைத்திருப்பதாக கொள்வோம். இதில் SBI கணக்கில் Mobile Money Identifier எண்ணை உருவாக்கினால், அது அந்த கணக்கிற்கு மட்டுமே பரிவர்தனைகளுக்காக பயன்படுத்த முடியும்.
ஒருவேளை Indian Bank Account க்கு பயன்படுத்த விரும்பினால், அந்த கணக்கிற்க்காக தனியாக MMID நம்பரை உருவாக்க வேண்டும்.
அடுத்ததாக, உங்களுக்கு MMID Code வேண்டாம் என்று நினைத்தால், அதை Cancel செய்யும் வசதியையும் சில வங்கிகள் வழங்குகின்றன. அப்படி Cancel செய்த பிறகு மீண்டும் அதை புதிதாக உருவாக்கிக்கொள்ளலாம்.
How to Create Mobile Money Identifier Number (MMID)
இந்த Code யை உருவாக்குவது கடினமான செயல் அல்ல. நீங்கள் எளிதாகவே இந்த Code யை Create செய்யலாம்.
இங்கு நான் ஒரு SBI வங்கிக்கணக்கிற்கு YONO SBI செயலியின் மூலம் எவ்வாறு MMID யை Generate செய்வது என்று சொல்கிறேன். இதை Generate செய்யும் படிகளில் ஒவ்வொரு வங்கியை பொருத்தும் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் எளிமையானதாக இருக்கும்.
SBI கணக்கிற்கு உருவாக்க பின்வரும் படிகளை பின்பற்றவும்.
Step 1: முதலில் உங்களின் மொபைலில் YONO SBI செயலியை Login செய்யவும்.
Step 2: Service Request என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: இந்த பக்கத்தில் Settings என்ற Option யை கிளிக் செய்க.
Step 4: Payments என்பதற்கு கீழே உள்ள View MMID என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது உங்களின் 7 இலக்க MMID Number தெரிவதை காண்பீர்கள்.
How to Transfer Money Using MMID Code
இப்பொழுது YONO செயலியில் MMID யை பயன்படுத்தி எவ்வாறு பணத்தை Transfer செய்வது என்பதை பற்றி காணலாம்.
Step 1: YONO செயலியை Login செய்து YONO Pay என்பதை அழுத்தவும்.
Step 2: Quick Transfer என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 3: கடைசியாக உள்ள Beneficiary Mobile Number (MMID required) என்பதை தேர்வு செய்க.
Step 4: இதில் நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்புகிறீர்களோ (Beneficiary) அவர்களின் பெயர், MMID, Mobile Number, Amount மற்றும் Remark ஆகியவற்றை நிரப்பி Next என்பதை அழுத்தவும்.
இங்கு Remart என்பதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் Type செய்யலாம்.
Step 5: நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்த்து Next என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP Number யை உள்ளிட்டு Submit செய்தால், வெற்றிகரமாக அனுப்பப்படும்.
முக்கிய குறிப்பு:
இதில் மொபைல் நம்பர் என்ற இடத்தில், நீங்கள் பணத்தை அனுப்பும் Beneficiary இன் வங்கிக்கணக்கில் எந்த மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த மொபைல் எண்ணை தான் Enter செய்ய வேண்டும். ஏனெனில் MMID மற்றும் Mobile Number இவற்றின் சரியான Combination இருந்தால் மட்டுமே பணத்தை Transfer செய்ய முடியும்.
ஒருவேளை நீங்கள் வேறு மொபைல் நம்பரை Enter செய்தால் பணத்தை Transfer செய்ய முடியாது.
சுருக்கம்
இந்த இடுகையில் Mobile Money Identifier என்றால் என்ன மற்றும் அதை எப்படி Generate செய்து பணத்தை பரிமாற்றம் செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் அதை கீழே தெரிவிக்கவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள இடுகைகளை வெளியிடும்போது அதற்கான அறிவிப்புகளை பெற கீழே பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.
Frequently Asked Questions (FAQ)
What is MMID Number?
MMID என்பது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கிகளால் வழங்கப்படும் 7 இலக்க தனித்துவ Mobile Money Identifier ஆகும்.
MMID நம்பர் எதற்காக பயன்படுகிறது?
நீங்கள் IMPS மூலம் பணத்தை பெறுவதற்கு இந்த MMID எண் பயன்படுகிறது.
இந்த MMID Number யை எங்கு பெறுவது?
உங்களின் Mobile Banking மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்றோ உருவாக்கலாம்.
MMID யை பெறுவதற்கு என்ன தேவைப்படும்?
உங்களின் வங்கிக்கணக்கில் Mobile Number மற்றும் Email Id யை பதிவு செய்திருக்க வேண்டும்.