New Debit and Credit Card Rules For Security: RBI New Rules
Debit Card மற்றும் Credit Card-களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு Reserve Bank of India (RBI) புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் வழங்கும் Debit மற்றும் Credit Card-களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை Phishing, Fake Apps மற்றும் Skimmer போன்ற கருவிகளின் மூலம் திருடுகின்றனர்.
ஹேக்கர்கள் அந்த தகவல்களை கொண்டு பண மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்களை தங்களின் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடிகளை தடுப்பதற்காக RBI வங்கியானது புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் மார்ச் 16-ல் இருந்து அமலுக்கு வருகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு இந்த விதிகள் உதவும்.
மார்ச் 16 ஆம் தேதிக்கு பிறகு, வங்கிகள் புதிய Debit Card-களை வழங்கும்போது, அவற்றை இந்திய ATM இயந்திரங்கள், Swipe Machine மற்றும் POS -களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
டெபிட் கார்டுகளை இனி ஆன்லைனில் பயன்படுத்த முடியாது. நீங்கள் டெபிட் கார்டை கொண்டு ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய விரும்பினால், அதற்கான சேவையை வங்கிகளில் இருந்து பெற வேண்டும்.
வங்கிகளானது, Contactless டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் பின் நம்பர் இல்லாமல் Rs.2000 வரை பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், RBI-யின் புதிய விதிப்படி, பின் நம்பர் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்துகொள்ளலாம்.
டெபிட் அட்டைகளை பயன்படுத்தி ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் வரம்பு மற்றும் வெளிநாடுகளில் பணம் எடுக்கும் வரம்பு போன்றவற்றை வாடிக்கையாளர்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
இப்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள், Contactless பரிவர்த்தனை மற்றும் International பரிவர்த்தனை போன்றவை இனி வாடிக்கையாளரின் கோரிக்கையின் மூலம் பெற முடியும்.
Credit Card-யை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் கார்டின் மூலம் இதுவரைக்கும் ஆன்லைன் பரிவர்த்தனை, Contactless பரிவர்த்தனை மற்றும் International பரிவர்த்தனை போன்றவற்றை மேற்கொள்ளவில்லை என்றால் அந்த சேவைகள் மார்ச் 16-ல் தானாகவே நிறுத்தப்படும்.
வங்கி வாடிக்கையாளர்கள், அவர்களின் கார்டுகளில் ஏதேனும் மாற்றம் செய்தாலோ அல்லது முயற்சித்தாலோ SMS மற்றும் Email மூலம் எச்சரிக்கை செய்யப்படும்.
அனைத்து வங்கிகளும் மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் சேவையை 24*7 வழங்க வேண்டுமென RBI கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்: