இனி Driving License யை பெறுவதற்கு புதிய விதிமுறை

Driving License யை பெறுவதற்கான புதிய விதிமுறையை (New Rule) ஜூலை 1 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி இனி ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமத்தை பெறலாம்.

இந்தியாவில் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு Driving License யை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

ஒரு நபர் ஓட்டுநர் உரிமத்தை பெற வேண்டும் என்றால், அவர் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இருந்தாலும் RTO Office இல் ஓட்டிக்காட்ட வேண்டும். இருசக்கர வாகனம் என்றால் 8 வடிவில் ஓட்ட வேண்டும். மற்ற வாகனங்கள் என்றால் அதற்கேற்ற விதிமுறைப்படி ஓட்டிக்காட்ட வேண்டும்.

அப்பொழுது தான் ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார்கள். இதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும்.

Driving License யை பெறுவதற்கு புதிய விதிமுறை (New Rule)

தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெரும் நபர்களுக்கு தேர்வு இல்லாமலே ஓட்டுநர் உரிமத்தை வழங்கலாம்.

அதாவது இவர்களுக்கு தேர்வில் (Driving Test) பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்படும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள், பயிற்சி அளிப்பதற்கு பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி தொடங்களை  கொண்டிருக்கும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான அனைத்து போக்குவரத்து விதிகளும் கற்றுக்கொடுக்கப்படும்.

இதன் மூலம் நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஓட்டுனர்களை உருவாக்க முடியும். 

இவ்வாறு ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் RTO அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வாகனத்தை ஓட்டிக்காட்ட தேவையில்லை.

புதிய விதிமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 

இந்த புதிய விதிமுறையானது அடுத்த மாதம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read  tnresults.nic.in 11th Public Exam Result 2022 Tamilnadu

இந்த புதிய விதிமுறையின் நோக்கம் என்னவென்றால், போக்குவரத்து விதிமீறல் மற்றும் போதிய திறன் இல்லாமல் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புதிய விதிமுறையால் License பெரும் வழிமுறையும் எளிதாகும்.

மேலும் படிக்க – How to Download Driving License in DigiLocker Mobile App

Leave a Reply

Your email address will not be published.