Ponniyin Selvan Part 1 Tamil Teaser Launch | PS 1 Movie

Ponniyin Selvan Part 1 Tamil Teaser Launch: மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் Teaser PS 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் படம் இயக்குனர் மணிரத்தினத்தால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இதன் Teaser மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக இன்று பிரம்மாண்டமான அரங்கில் Teaser வெளியிடப்பட்டது.

Summary of Ponniyin Selvan Movie:

Movie Name Ponniyin Selvan Part 1
Director Mani Ratnam 
Budget 500 Cores 
Author Amarar Kalki Krishnamoorthy
Teaser Release Date 08-07-2022
Movie Release Date30-09-2022

சுமார் 500 கோடி செலவில் பொன்னியின் செல்வன் படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்களான நடிகர்களான ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

Read  SBI-ல் இனி Minimum Balance பராமரிக்க தேவையில்லை - Waive

இந்த படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் யூடூபில் வெளியிடப்பட்டுள்ளது. PS 1 டீசரானது தென்னிந்தியாவில் சோழ பேரரசின் அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. டீசரின் ஒவ்வொரு காட்சியும் பிரமிக்கும் வகையில் மிரட்டுகிறது.

 விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போரில் இருப்பதை போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. இது சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட போரை பறைசாற்றுகிறது. நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு வரும் ஐஸ்வர்யாராய் மற்றும் குந்தவையாக நடிக்கும் திரிஷா நேர் எதிராக சந்திக்கும் வகையில் டீசரில் காட்டியுள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் முரட்டுத்தமான மற்றும் வீரம் மிக்கவராக காட்டியுள்ளனர். நகைசுவை கதாபாத்திரத்தில் வரும் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பி வேடத்தில் வருவார். 

Ponniyin Selvan Movie Teaser in Tamil | PS 1 Watch Here 

Leave a Reply

Your email address will not be published.