SBI-ல் இனி Minimum Balance பராமரிக்க தேவையில்லை – Waive

SBI வங்கியானது குறைந்தபட்ச இருப்பை (Minimum Balance) பராமரிக்காத கட்டணத்தை தள்ளுபடி (Waive) செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI ஆனது, 44.51 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

SBI வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் Minimum Balance-யை பராமரிக்க வேண்டும். அதன்படி தற்போது Metro நகரங்களில் Rs.3000, Urban மற்றும் Semi-Urban-களில் Rs.2000, Rural-களில் Rs.1000 பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வங்கிக்கணக்குகளுக்கு Rs.5 முதல் 15 வரை அபராதம் மற்றும் அதனுடன் GST-யை செலுத்த வேண்டும்.

SBI Minimum Balance Waive

இப்பொழுது SBI வங்கி குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை தள்ளுபடி (Waive) செய்கிறது. இனி எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பூஜ்யம் இருப்புத்தொகையுடன் உபயோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் SMS கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த அறிவிப்பு SBI வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். இந்த முயற்சி எஸ்.பி.ஐ வங்கியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்புவதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Read  இனி Driving License யை பெறுவதற்கு புதிய விதிமுறை

மேலும் படிக்க:

Leave a Reply

Your email address will not be published.