ஜனவரி 14-ல் Windows 7 முடிவுக்கு வருகிறது – Microsoft
நீங்கள் இன்னமும் Windows 7 ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துபவராக இருந்தால் ஜனவரி 14 முதல் அதை பாதுகாப்பாக பயன்படுத்த முடியாது. ஏனெனில், விண்டோஸ் 7 -க்கான தனது அதிகாரப்பூர்வ ஆதரவை நிறுத்திக்கொள்வதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.
Table of Contents
Windows 7 OS
கணினிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயக்குதளமாக (OS) Windows 7 திகழ்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 1985 ஆம் ஆண்டு முதலில் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு பல வெர்சன்களில் விண்டோஸ் இயங்குதளத்தை வெளியீட்டு இன்று வரை கணினி உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இடைப்பட்ட ஆண்டுகளில் விண்டோஸ் 95, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 போன்ற வெர்சன்களில் இயக்குதளங்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது கடைசியாக விண்டோஸ் 10 -யை அறிமுகப்படுத்தியது.
அடுத்தகட்ட நகர்விற்காக, உலக அளவில் கணினி மற்றும் மடிக்கணிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் windows 7 ஆபரேட்டிங் சிஸ்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Windows 10 Upgrade
தற்போது windows 7-யை பயன்படுத்தும் அனைவரும் விண்டோஸ் 10 -க்கு Upgrade செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. Windows 10-ல் மேம்படுத்தப்பட்ட பல சேவைகளை வழங்குகிறது.
நீங்கள் விண்டோஸ் 10 -க்கு மாற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இரண்டு வழிகள் உள்ளது.
- Windows 10-யை Download செய்து பிறகு இன்ஸ்டால் செய்யலாம்.
- Windows 7-லிருந்து 10 க்கு நேரடியாகவே Upgrade செய்யலாம்.
Windows 10-யை Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
இனி விண்டோஸ் 7-யை பயன்படுத்த முடியாதா ?
ஜனவரி 14 ஆம் தேதியில் இருந்து விண்டோஸ் 7 இயக்குதளத்தை முழுவதுமாக பயன்படுத்த முடியாதா என்ற கேள்வி எழலாம்.
நீங்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்தலாம். ஆனால், இந்த இயக்குதளத்திற்கு Microsoft நிறுவனத்தின் ஆதரவு (Support) கிடைக்காது. அதாவது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் ஏதாவது பிழைகள் (Bugs) கண்டறியப்பட்டால் அதை சரி செய்ய இயலாது.
தொடர்ச்சியாக விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
ஜனவரி 14 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாதுகாப்பு அப்டேட்கள் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளும். எனவே ஹேக்கர்கள் எளிதில் ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஒருவேளை, ஹேக்கர்கள் உங்களின் கணினியை ஹேக் செய்துவிட்டால், உங்களின் அனைத்து டேட்டாக்களும் அவர்களின் கைகளுக்கு சென்றுவிடும்.
இதற்க்கு முன்பு வரை விண்டோஸ் 7 இயக்குதளத்தில் ஏதாவது மால்வேர் நுழைந்துவிட்டால், அதை நீக்கிவிடுவார்கள். மேலும் மால்வேர் நுழைவதற்கான வழிகளை கண்டறிந்து அதை அடைத்து விடுவார்கள். ஆனால் இனிமேல் அதுபோல் செய்ய மாட்டோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
யாரெல்லாம் விண்டோஸ் 7-யை பயன்படுத்தலாம் ?
விண்டோஸ் 7 -யை பயன்படுத்துபவர்கள் இணையத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், ஹேக்கர்கள் இணையம் மூலமாகத்தான் உங்களின் தகவல்களை திருட முடியும். நீங்கள் இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால் ஹேக்கர்களால் திருட முடியாது.
CD, Pendrive மற்றும் Memory Card போன்றவைகளை கணினியில் இணைக்கும்போது Virus -கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் கணினியில் இணைக்கும் Device-களில் Virus-கள் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கணினியில் இணைக்கும் Device-களின் மூலம் Virus-கள் பரவினால், உங்களின் டேட்டாக்கள் மற்றும் இயங்குதளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாம் இணையத்தை உபயோகிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இயக்குதளங்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தும்போது Crack Version-கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவ்வப்போது இயக்குதளங்களின் பாதுகாப்பு அப்டேட்களை Update செய்ய வேண்டும்.