How to Apply for Pan Card Online in Tamil: Step by Step Guide
நீங்கள் புதிய Pan Card க்கு Online மூலம் Apply செய்ய விரும்புகிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஒரு பான் அட்டைக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான முழு தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்த கட்டுரையை நீங்கள் முழுமையாக படித்த பின்பு பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களையும் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
சரி வாருங்கள் தொடங்குவோம்.
Table of Contents
பான் அட்டை என்றால் என்ன
பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவ இலக்கங்களை கொண்ட அட்டையாகும். இந்த 10 இலக்கங்களில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருக்கும். உதாரணமாக, பான் எண்ணானது GDHGN9612R என்ற வடிவில் இருக்கும்.
தற்போது பான் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கிகள், தபால் நிலையங்கள், முதலீடுகள் போன்ற பணம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் பான் அட்டை தேவைப்படுகிறது.
ஒரு தனிநபர் மற்றும் நிறுவனங்களின் அனைத்து பணம் சார்ந்த செயல்களிலும் பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் எண்ணை கொண்டு தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையால் கண்காணிக்க முடியும்.
இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த PAN Card யை அனைவரும் பெற்றிருப்பது அவசியமாகும். ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் அதை சுலபமாக நீங்களே Online மூலம் Apply செய்துகொள்ளலாம். அதற்கான வழிகாட்டியாக இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
PAN Card க்கு Apply செய்ய தேவையான Documents
New PAN Card க்கு Apply செய்ய என்னென்ன Document கள் தேவைப்படும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த ஆவணங்களை எல்லாம் தயாராக வைத்துக்கொண்டு பிறகு விண்ணப்பிக்க தொடங்கலாம்.
பின்வருவனவற்றை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- அடையாள சான்று (Identity Proof)
- முகவரிக்கான சான்று (Address Proof)
- வயதுக்கான சான்று (Date of Birth Proof)
- பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள் (2 Passport Size Photos)
- மின்னஞ்சல் முகவரி (Email Address)
- மொபைல் நம்பர்
மேற்கண்டவற்றில் Email ID மற்றும் Mobile Number உங்களிடம் நிச்சயமாக இருக்கும். ஒருவேளை உங்களிடம் Email ID இல்லையென்றால், உங்களின் குடும்ப உறுப்பினர்களின் ஒருவரது Email ID யை பயன்படுத்தலாம். அல்லது நீங்களே வெறும் 5 நிமிடத்தில் உங்களுக்கான Email ID உருவாக்கலாம்.
ஏனெனில் நீங்கள் ஆன்லைன் மூலம் PAN Card க்கு Apply செய்யும்போது, Email Id கட்டாயமாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பம் Approve செய்யப்பட்டால், முதலில் e Pan Card யை உங்களின் Email ID க்கு அனுப்புவார்கள். பிறகு Original PAN Card யை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.
ஈமெயில் ஐடி என்பது yourname@gmail.com என்ற வடிவத்தில் இருக்கும்.
இப்பொழுது அடையாள சான்று, வயதுக்கான சான்று மற்றும் முகவரிக்கான சான்றுகளாக எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.
1. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்
- Aadhaar Card (Copy)
- Driving License (Copy)
- Passport (Copy)
- Ration Card Having Photo of Applicant (Copy)
- Voter ID Card (Copy)
2. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம்
- Aadhaar Card (Copy)
- Electricity Bill
- Driving License (Copy)
- Passport (Copy)
- Post Office Passbook
நீங்கள் மின்சார கட்டண பில்லை முகவரி ஆவணமாக பயன்படுத்தும்போது கடைசி 3 மாதங்களுக்குள்ளாக இருக்கக்கூடிய பில்லை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
3. பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்தலாம்
- Aadhaar Card (Copy)
- Birth Certificate (Copy)
- Driving License (Copy)
- Marriage Certificate (Copy)
- Mark Sheet (Copy)
- Passport (Copy)
- Voter ID Card (Copy)
மேற்கண்ட அனைத்து ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை பொதுவாக உள்ளது. அதாவது அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகிய அனைத்திற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்க்கு பதிலாக பட்டியலில் உள்ள வேறு ஒரு ஆவணத்தை வழங்கலாம். ஆதார் அட்டையில் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அனைத்து சான்றுகளுக்கும் அதை ஒன்றையே வழங்கலாம்.
பான் அட்டைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு செலவு ஆகும்
ஒரு புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கும் அல்லது ஏற்கனவே இருக்கும் பான் அட்டையில் PAN Correction மேற்கொள்வதற்கும் ஒரே தொகையாகும்.
இதற்காக நீங்கள் Rs.107 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டியதிருக்கும்.
இந்த பணத்தை உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து ATM Card, Net Banking, UPI மற்றும் Google Pay போன்றவற்றின் மூலம் செலுத்தலாம்.
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான தபால் செலவு 30 முதல் 40 ரூபாய் வரை ஆகலாம்.
Steps to Apply for Pan Card Through Online in Tamil
பொதுவாக PAN Card க்கு Online மூலம் Apply செய்யும் போது UTIITSL மற்றும் NSDL என்ற இரண்டு போர்டல்கள் மூலமாகத்தான் விண்ணப்பிப்பார்கள். இங்கு நான் பான் அட்டையை UTIITSL என்ற Portal மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றி தான் பகிரப்போகிறேன்.
இப்பொழுது விண்ணப்பிப்பதற்கான படிகளை தொடங்கலாம்.
Step 1: முதலில் https://www.pan.utiitsl.com/ என்ற UTIITSL Portal யை பார்வையிடவும்.
Step 2: முதலில் உள்ள PAN Card as an Indian Citizen/NRI என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: இப்பொழுது Apply for new PAN Card (Form 49A) என்பதை தேர்வு செய்க.
Step 4: புதிய பான் அட்டையை விண்ணப்பிப்பதற்கான Form 49A பக்கம் திறக்கும். இங்கு Physical Mode என்று ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள்.
Step 5: Status of the Applicant என்ற இடத்தில் Individual என்பதை தேர்வு செய்யவும். இதன் பொருள் தனிநபர் ஆகும்.
Step 6: Pan Card Mode என்ற இடத்தில் முதலாவதாக உள்ள Both physical PAN Card and e-PAN என்பதை தேர்வு செய்யவும். இதன் மூலம் நீங்கள் e-PAN Card மற்றும் Physical PAN Card ஆகிய இரண்டையும் பெற முடியும்.
Step 7: கீழே கடைசியில் உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.
Step 8: இப்பொழுது திரையில் தெரியும் Reference Number யை குறித்துக்கொண்டு Ok என்பதை அழுத்தவும்.
Personal Details
Step 9: ஆதார் அட்டையில் இருப்பதை போன்று உங்களின் Full Name யை Enter செய்ய வேண்டும்.
முதலில் Name Title யை தேர்வு செய்யவும். அதில் மூன்று தேர்வு இருக்கும். அவற்றில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவும். அவற்றிற்கான அர்த்தத்தை கீழே கொடுத்துள்ளேன்.
KUMARI – திருமணம் ஆகாத பெண்கள்
SHRI – ஆண்கள்
SMT – திருமணம் ஆகிய பெண்கள்
அடுத்து உங்களின் முழு பெயரையும் Enter செய்யவும். உங்களின் பெயர் Selvam Ganapathi என்ற வடிவில் இருந்தால் First Name என்ற இடத்தில் Selvam என்றும் Last Name / Surename என்ற இடத்தில் Ganapathi என்றும் Type செய்யவும்.
ஒருவேளை உங்களின் பெயர் G Selvam என்று இருந்தால் அதை Last Name / Surename என்ற இடத்தில் மட்டும் Type செய்தால் போதுமானது ஆகும்.
Name on Card என்ற இடத்தில், உங்களுடைய பான் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு Print ஆக வேண்டுமோ அதை Enter செய்யவும்.
Step 10: Have you been known by other name என்ற இடத்தில் No என்பதை தேர்வு செய்யவும். பிறகு Gender, Date of Birth போன்றவற்றை நிரப்பவும்.
Step 11: Address for Communication என்பதில் Residence என்று தேர்வு செய்து Residence State இல் Tamilnadu என்று Select செய்க.
Step 12: உங்களின் Aadhaar Number யை சரியாக உள்ளிட்டு, உங்களின் பெயர் ஆதார் கார்டில் உள்ளதை போன்று Type செய்யவும்.
பிறகு Next Step என்பதை அழுத்தவும்.
Document Details
Step 13: இந்த பக்கத்தில் Identity Proof, Address Proof மற்றும் Date of Birth Proof போன்றவற்றிக்கு எந்த ஆவணங்களை வழங்குகிறீர்களோ அவற்றை தேர்வு செய்யவும்.
இங்கு நான் அனைத்திற்கும் ஆதார் என்று தேர்வு செய்துள்ளேன்.
தேர்வு செய்த பிறகு Next Step என்பதை கிளிக் செய்யவும்.
Contact & Parent Details
Step 14: Telephone ISD Code இல் India என்பதை தேர்வு செய்யவும். பிறகு உங்களின் Mobile Number மற்றும் Email ID யை Enter செய்யவும்.
Step 15: No என்பதை டிக் செய்து Father Name யை Type செய்யவும். Select the name of either father or mother which you may likr to be printed on PAN Card என்பதில் Father Name என்பதை தேர்வு செய்க.
பிறகு Next Step என்பதை அழுத்தவும்.
Address Details
Step 16: Residential Address என்பதில் உங்களின் ஆதார் கார்டில் உள்ளது போன்ற முழு முகவரியையும் Enter செய்க.
Source of Income இல் உங்களின் வருவாய் ஆதாரத்தை டிக் செய்யவும்.
டிக் செய்த பிறகு Next Step யை அழுத்தவும்.
Other Details
Step 17: உங்களுக்கான AO Code யை நிரப்பவும். AO Code உங்களுக்கு தெரியவில்லை என்றால், Get AO Details என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது ஒரு Pap Up திரையில் பரிந்துரைக்கப்பட்ட AO Code வரும். அதில் Ok என்ற பட்டனை அழுத்தினால் தானாகவே நிரப்பிக்கொள்ளும்.
Himself/Herself என்பதை தேர்வு செய்து Verification Place என்ற இடத்தில் உங்கள் ஊரின் பெயரை நிரப்பவும்.
அனைத்தும் நிரப்பிய பின்பு Next Step யை அழுத்தவும்.
Documents Upload
Step 18: இந்த பக்கத்தில் நீங்கள் எந்த ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. ஏனெனில் நாம் ஆவணங்களை தபால் மூலமாக தான் அனுப்ப போகிறோம்.
பிறகு கடைசியாக Submit என்பதை கிளிக் செய்யவும்.
Payment For PAN Application
Step 19: பான் அட்டை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த Make Payment என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது Payment Gateway பக்கத்திற்கு Redirect ஆகும்.
Step 20: இதில் PayU மற்றும் Bill Desk என்ற இரண்டு வகையான Payment Gateway கள் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
நான் இங்கு PayU என்பதை தேர்வு செய்துள்ளேன். பிறகு Confirm Payment என்பதை அழுத்தவும்.
Step 21: இப்பொழுது பணத்தை செலுத்துவதற்காக ATM Card, Net Banking, UPI, Google Pay போன்ற Option கள் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
நான் இங்கு ATM Card என்ற Option யை தேர்வு செய்துள்ளேன்.
Step 22: இதில் உங்களின் ATM Card இல் அச்சடிக்கப்பட்டிருக்கும் 16 இலக்க நம்பர், Expiry Date, CVV Number (ATM இன் பின் புறத்தில் 3 இலக்க எண் இருக்கும்) மற்றும் ATM அட்டையின் மேல் உள்ள உங்களின் பெயர் போன்றவற்றை Enter செய்து Proceed என்பதை அழுத்தவும்.
Step 23: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Complete Payment என்பதை அழுத்தவும்.
தற்போது பான் விண்ணப்பத்திற்கான கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கும். கட்டணத்தை செலுத்திய பிறகு வேறொரு பக்கத்திற்கு Redirect ஆகும்.
PAN Card படிவத்தை Download செய்தல்
இப்பொழுது நீங்கள் ஆன்லைனில் வெற்றிகரமாக Apply செய்துவிட்டீர்கள். இருப்பினும் உங்களின் வேலை முழுமையாக முடியவில்லை.
ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கும் போது ஏதாவது தவறாக உள்ளிட்டிருந்தால், இந்த பக்கத்தில் உள்ள Edit என்பதை கிளிக் செய்து அதை திருத்தம் செய்துகொள்ளலாம். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Edit என்பதை கிளிக் செய்ய தேவையில்லை.
Step 24: Download PDF Form என்பதை கிளிக் செய்தவுடன் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த Form 49A Download ஆகும்.
Step 25: இப்பொழுது நீங்கள் திரையில் காணும் பணம் செலுத்தியதற்கான PAN Application Acknowledgment Receipt யையும் Print எடுக்க வேண்டும். அதில் உள்ள Print என்பதை கிளிக் செய்து Print எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவேளை Print என்பதை கிளிக் செய்தும் வேலை செய்யவில்லை என்றால் Control + P என்பதை அழுத்தி அதை PDF வடிவில் சேமிக்கவும்.
Step 26: தற்போது உங்களிடம் நீங்கள் Download செய்த Form 49A மற்றும் Acknowledgment Receipt என்ற இரண்டு PDF File கள் உள்ளது. அதை ஜெராஸ் கடைக்கு சென்று Print எடுத்துக்கொள்ளவும்.
How to Regenerate Online PAN Application
நீங்கள் பதிவிறக்கம் செய்த Form 49A மற்றும் Acknowledgment Receipt ஆகிய இரண்டும், சில நேரங்களில் தொலைந்துவிடலாம் அல்லது Delete ஆகிவிடலாம். அந்நிலையில் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அந்த ஆவணங்களை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதற்கான படிகள் பின்வருமாறு:
Step 1: https://www.pan.utiitsl.com/PAN/newA.html என்ற பக்கத்திற்கு செல்லவும்.
Step 2: Regenerate Online PAN Application (Form 49A) என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: Application Number அல்லது Reference Number இவற்றில் ஏதாவது ஒன்றை Type செய்யவும்.
Step 4: Date of Birth யை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது இதற்க்கு முன்பு வந்தது போன்ற பக்கம் தோன்றும். இதில் Download PDF Form என்பதை கிளிக் செய்து Form 49A வையும், Print என்பதை கிளிக் செய்து Ackonwledgment சீட்டையும் பதிவிறக்கம் செய்யலாம்.
பான் விண்ணப்பத்தை தயார் செய்தல்
நீங்கள் Download செய்த இரண்டையும் Print எடுத்த பிறகு அதை தயார் செய்ய வேண்டும்.
Form 49A இன் முதல் பக்கத்தில் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்களை ஒட்ட வேண்டும்.
அதில் இடது புறத்தில் உள்ள போட்டோவின் மீது உங்களின் கையெழுத்தை போட வேண்டும். கீழே காட்டியுள்ளபடி நீங்கள் போடும் கையெழுத்தானது போட்டோவின் மீது பாதியும் மற்றும் படிவத்தின் மீது பாதியும் இருக்குமாறு போட வேண்டும்.
படிவம் 49A இல் மூன்று கையெழுத்தும், Acknowledgment Receipt இல் ஒன்றும் மற்றும் ஆதார் ஜெராக்ஸில் ஒன்றும் ஆக மொத்தம் 5 கையெழுத்துகளை போட வேண்டும்.
பிறகு இந்த மூன்றையும் ஒரு போஸ்ட் கவரில் வைத்து அதை பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
PAN Card Application யை அனுப்ப வேண்டிய முகவரி: PAN PDC Incharge – Chennai region |
இப்பொழுது நீங்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை முழுமையாக நிறைவடைந்தது. 20 நாட்களுக்குள் புதிய பான் அட்டை தபால் மூலம் உங்களின் முகவரிக்கு வந்துவிடும்.
PAN Application யை எவ்வாறு Track செய்வது
நீங்கள் PAN Application யை தபால் மூலம் அனுப்பிய பிறகு, சில நாட்கள் கழித்து அதை Track செய்யலாம். அதாவது அந்த விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ள முடியும்.
விண்ணப்பத்தின் நிலையை பின்வரும் படிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Step 1: நீங்கள் https://www.trackpan.utiitsl.com/PANONLINE/#forward என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
Step 2: PAN Application Number யை உள்ளிட்டு உங்களின் Date of Birth யை தேர்வு செய்யவும். பிறகு Captcha எண்ணை Type செய்து Submit செய்யவும்.
Step 3: இந்த பக்கத்தில் உங்களின் PAN Application Status இருப்பதை காண்பீர்கள். அந்த Status இல் YOUR APPLICATION IS PROCESSED SUCCESSFULLY PAN IS ALLOTTED என்று இருந்தால், உங்களுக்கான PAN Number வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
உங்களுக்கான பான் நம்பர் ஒதுக்கப்பட்ட பிறகு e -PAN Card யை உங்களின் Email முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள். அதை Download செய்து தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அசல் பான் அட்டை அச்சடிக்கப்பட்டு சில நாட்களில் உங்களின் முகவரிக்கு அனுப்பப்படும்.
How to Download e-PAN Card
உங்களுக்கான பான் எண் ஒதுக்கப்பட்டவுடன் e-PAN அட்டையை மின்னஞ்சலிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று கூறினேன். அதை எவ்வாறு Download செய்வது என்று பார்க்கலாம்.
Step 1: நீங்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது ஒரு மின்னஞ்சலை கொடுத்து இருப்பீர்கள். அந்த மின்னஞ்சலை திறந்து UTIITSL இல் இருந்து வந்திருக்கும் மெயிலை திறக்கவும்.
Step 2: அந்த மெயிலின் கடைசியில் இருக்கும் PDF File யை Download செய்யவும்.
Step 3: பதிவிறக்கம் செய்த File யை திறக்கவும். இப்பொழுது திறப்பதற்கான Password யை கேட்கும். இதற்கான Password ஆனது உங்களின் பிறந்த தேதி ஆகும்.
உங்களின் Date of Birth ஆனது 18/05/1995 ஆக இருந்தால் அதை 18051995 என்றவாறு Type செய்யவும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
Step 4: இப்பொழுது உங்களின் e-PAN Card வெற்றிகரமாக Open செய்யப்படும். இதில் உள்ளது போன்று தான் அசல் பான் அட்டையில் அச்சிடப்பட்டு உங்களின் முகவரிக்கு அனுப்புவார்கள்.
முடிவுரை
ஒரு புதிய PAN Card க்கு Online மூலம் எவ்வாறு Apply செய்வது என்பதை பற்றிய முழுமையான தகவல்களையும் Tamil மொழியில் தெரிந்துகொண்டீர்கள். இந்த கட்டுரையில் கூறியுள்ள அனைத்து தகவல்களும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
FAQ’s – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. பான் அட்டைக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாமா?
அனைத்து இந்திய குடிமக்களும் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
2. பான் அட்டைக்கு நெட் சென்டர்கள் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டுமா?
இல்லை. யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இணைய இணைப்பு உள்ள மொபைல் அல்லது லேப்டாப் இருந்தாலே விண்ணப்பிக்கலாம்.
3. பான் அட்டை விண்ணப்பிப்பதற்கான கட்டணம் எவ்வளவு?
பான் அட்டைக்கான கட்டணம் Rs.93 + GTS = 107 ரூபாய் ஆகும். வெளிநாட்டு Communication Address ஆக இருந்தால் Rs.864 + GST ஆகும்.
4. பான் அட்டைக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது?
Netbanking, ATM Card மற்றும் UPI Payment ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பான் கட்டணத்தை செலுத்தலாம்.
5. பான் அட்டையில் திருத்தங்களை செய்ய முடியுமா?
நிச்சயமாக முடியும். பெயர், பிறந்த தேதி, முகவரி, தந்தையின் பெயர், போட்டோ, கையெழுத்து, மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்றவற்றில் திருத்தங்கள் செய்யலாம்.
6. PAN Card க்கு எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?
NSDL அல்லது UTIITSL இணையதளத்தில் PAN Card யை Online மூலம் Apply செய்யலாம்.
7. பான் அட்டையை எனக்கு எப்படி Delivery செய்வார்கள்?
நீங்கள் பான் அட்டையில் கொடுத்திருக்கும் Communication Address க்கு தபால் மூலம் அனுப்புவார்கள்.
8. நான் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கலாமா?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் நம்பர்களை கொண்ட அட்டைகளை வைத்திருப்பது வருமான வரி சட்டத்திற்கு எதிரானதாகும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு வைத்திருந்தால் அதை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
9. PAN Card இன் Validity என்ன?
நீங்கள் ஒருமுறை பான் அட்டையை வாங்கிவிட்டால் அது வாழ்நாள் முழுமைக்கும் செல்லுபடியாகும். அதை Renewal செய்ய தேவையில்லை.
10. பான் கார்டை தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
உங்களின் பான் எண்ணை கொண்டு Reprint செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
11. பான் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு?
புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணமோ அதே தொகை தான் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் செலுத்த வேண்டும். அதாவது Rs.93 + GST = 107 ரூபாய்.
12. e-PAN Card என்றால் என்ன?
e-PAN Card என்பது அசல் பான் அட்டையை போன்றே இருக்கும் மின்னணு பான் அட்டையாகும். நீங்கள் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதோ அல்லது ஏற்கனவே உள்ள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளும் போதோ e-Pan அட்டையை உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.
Respected sir, Good morning, i have a agency ID, how to apply a PAN card by agency id? please send the details to my mail id sir.
Mail ID : 9681sivakumar@gmail.com
NAME : S.Sivakumar
Sorry. i have not agency id. So I don’t know to apply for pan card by agency id
very usefull to me and very easy to understand sir.
Thank You