How to Change Name in PAN Card as per Aadhaar: PAN Correction
Change Name in PAN Card as per Aadhaar: சில நேரங்களில் நீங்கள் உங்களின் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கும்போது பெயர் பொருந்தவில்லை என்ற Error செய்தி வரலாம். இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்றால், ஆதார் கார்டில் இருப்பதை போன்றே பான் அட்டையில் உங்களின் பெயரை வேண்டும். இதை Online மூலம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் விளக்குகிறேன்.
இன்றைய காலத்தில் ஆதார் அட்டை என்பது அனைத்து ஆவணங்களினும் முதன்மை ஆகிவிட்டது. தற்போது ஒவ்வொரு ஆவணத்தையும் ஆதார் அட்டையுடன் இணைத்துக்கொண்டு வருகிறோம். எனவே ஆதார் அட்டை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
அப்படி மற்ற ஆவணங்களை ஆதார் அட்டையுடன் இணைக்கும்போது, Aadhaar Card இல் உள்ள தகவல்களும் மற்றும் அதனுடன் இணைக்கப்படும் ஆவணத்தின் தகவல்களும் சரியாக பொருந்தினால் மட்டுமே அவ்விரண்டையும் Link செய்ய முடியும்.
எடுத்துக்காட்டாக, PAN Card யை எடுத்துக்கொள்வோம். இந்த PAN Card யை ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு மற்றும் PF Account போன்றவற்றில் இணைக்கும்போது பெயர் பொருந்தவில்லை (Name Mismatch) என்ற செய்தி வருவதை கண்டிருப்பீர்கள்.
இதற்க்கு காரணம் என்னவென்றால் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரும், PAN Card இல் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட நபர் பான் தரவு தளத்தில் (PAN Database) தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஆதார் அட்டையில் S Shanmugam என்றும் பான் அட்டையில் Shanmugam S என்றும் இருந்தால் அது பொருந்தாது. ஆதார் அட்டையில் எப்படி உள்ளதோ அப்படியே பான் கார்டிலும் இருக்க வேண்டும். அதாவது 100% சதவீதம் பொருந்தினால் மட்டுமே பான் கார்டு Link ஆகும்.
ஒருவேளை உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பான் கார்டில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் அதற்க்கு கவலைப்பட வேண்டாம். ஆதார் அட்டையில் இருப்பதை போன்று பான் கார்டில் பெயர் மாற்றம் (Name Change) செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.
அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்கமாக சொல்ல போகிறேன்.
How to Change Name in PAN Card as per Aadhaar Online
பொதுவாக NSDL மற்றும் UTIITSL என்ற இரண்டு இணையதளங்களின் மூலம் PAN Card இல் Correction மேற்கொள்ளலாம். இதில் NSDL இணையதளம் மூலம் எவ்வாறு PAN Card இல் Name Correction செய்வது என்பதை பற்றி காணலாம்.
Step 1: நீங்கள் முதலில் https://www.onlineservices.nsdl.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Application Type என்ற இடத்தில் Changes or Correction of Existing Data என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: Category என்ற இடத்தில் INDIVIDUAL என்பதை தேர்வு செய்க.
Step 4: Application Information என்ற பிரிவில் உள்ள Title, Name, Date of Birth, Email ID, Mobile Number மற்றும் PAN Card போன்ற அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
பிறகு கடைசியாக உள்ள Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது Token Number யை குறித்து கொள்ளவும். மேலும் Continue with PAN Application Form என்பதை கிளிக் செய்யவும்.
Guidelines
Step 6: நீங்கள் எந்த வழியில் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த Option யை தேர்வு செய்யவும்.
நான் இரண்டாவதாக உள்ள Submit scanned images through e-Sign என்பதை தேர்வு செய்துள்ளேன்.
Step 7: உங்களின் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்க நம்பர் மற்றும் ஆதார் கார்டில் உள்ளபடி பெயர் போன்றவற்றை Type செய்யவும்.
Step 8: Full Name of Applicant என்பதை டிக் செய்யவும். பிறகு Name that you would like printed on PAN card என்ற இடத்தில் உங்களின் ஆதார் கார்டில் இருக்கும் பெயரை Enter செய்யவும். மேலும் Gender என்னும் இடத்தில் உங்களின் Gender யை தேர்வு செய்க.
Step 9: Father Name யை Enter செய்து Next என்பதை அழுத்துக.
Personal Details
Step 10: Residence என்பதை தேர்வு செய்து உங்களின் முழு முகவரியையும் Enter செய்க.
Step 11: Country Code யை Select செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.
Contact & Others Details
Step 12: Proof of identity, address, date of birth என்ற இடத்தில் ஆதார் என்பதை தேர்வு செய்க. Proof of PAN என்பதில் Copy of PAN Card என்பதை தேர்வு செய்யவும்.
Declaration இல் உங்களின் பெயர், இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் Place போன்றவற்றை Fill செய்யவும்.
Step 13: உங்களின் புகைப்படம், Signature மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை Upload செய்து Submit செய்யவும்.
Documents Details
Step 14: Next என்பதை கிளிக் செய்யவும்.
Step 15: உங்களின் முதல் 8 இலக்க ஆதார் நம்பரை Enter செய்யவும்.
Step 16: நீங்கள் Type செய்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பின்பு Proceed என்பதை அழுத்தவும்.
Step 17: இந்த பக்கத்தில் நீங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான Option வரும். இதில் நீங்கள் எதன் மூலம் பணத்தை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த Option யை தேர்வு செய்யவும்.
இங்கு நான் Online payment through Bill Desk என்பதை தேர்வு செய்துள்ளேன்.
Step 18: PAN Correction செய்வதற்கு Rs.107 ரூபாயை செலுத்த வேண்டும். I Agree என்பதை டிக் செய்து Proceed to Payment என்பதை கிளிக் செய்யவும்.
Step 19: Pay Confirm என்ற பட்டனை அழுத்தவும்.
Step 20: இப்பொழுது பணத்தை செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Option களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பணத்தை செலுத்தலாம்.
நான் இங்கு ATM Card என்ற Option யை தேர்வு செய்துள்ளேன்.
Payment செலுத்திய பின்பு உங்களின் PAN Correction/ Update Form வெற்றிகரமாக Submit செய்யப்பட்டுவிடும்.
Token Number யை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் நிலையை (Status) அறியலாம்.
மேலும் படிக்க – How to Get Instant PAN Through Aadhaar in 5 Minutes
இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை தமிழ் மொழியில் பெறுவதற்கு Subscribe செய்யவும்.