How to Change Photo in PAN Card
உங்களின் PAN Card இல் உள்ள Photo மற்றும் Signature ஆகியவற்றை Online மூலம் எவ்வாறு Change செய்வது என்பதை பற்றிய விவரங்களை Step by Step ஆக நான் உங்களுக்கு விளக்கப்போகிறேன். இந்த கட்டுரையை நீங்கள் முழுமையாக படித்த பின்பு, PAN Card இல் Correction செய்வதை பற்றிய புரிதலை பெற்றிருப்பீர்கள்.
PAN Card என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) ஆகும். இது ஒவ்வொரு தனிநபர் அல்லது நிறுவனங்களின் நிதி பரிமாற்றத்தை கண்காணிக்க உதவுகிறது.
பான் அட்டையை அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தலாம். எனவே இந்தியாவின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இந்த பான் அட்டை உள்ளது.
Table of Contents
பான் அட்டையில் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஏன் மாற்ற வேண்டும்?
பொதுவாக பான் அட்டையில் புகைப்படம், பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, கையெழுத்து மற்றும் QR Code போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த அட்டையானது நிதி பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பதால், அதில் உள்ள தகவல்களை துல்லியமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் பான் கார்டை பெற்று பல வருடங்கள் ஆகியிருக்கலாம். இதனால் அதை தற்போதைய புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒப்பிடும் போது வேறுபாடு இருக்கலாம். இது எதிர்காலத்தில் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
எனவே பான் கார்டில் உங்களின் Photo மற்றும் Signature யை Update செய்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு நீங்கள் Update செய்ய விரும்பினால், நீங்களே வீட்டில் இருந்தவாறு Online மூலம் அப்டேட் செய்துகொள்ளலாம்.
தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
நீங்கள் பான் கார்டில் புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்ற வேண்டுமென்றால் கீழ்கண்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
1. Passport Size Photo: உங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை Scan அல்லது மொபைல் கேமராவில் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அந்த புகைப்படத்தை சரியான அளவில் Cut செய்து அதன் அளவு 50 KB க்கும் குறைவாக இருக்கும்படி குறைக்க வேண்டும். இதற்கான இலவச இணையதளங்கள் நிறைய உள்ளன.
மேலும் அந்த புகைப்படம் JPEG வடிவில் இருக்க வேண்டும். இதை மாற்றுவதற்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன.
2. Signature: ஒரு வெள்ளை பேப்பரில் உங்களின் கையெழுத்தை போட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். இதையும் 50 KB க்கு குறைவாகவும் மற்றும் JPEG வடிவத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
3. Aadhaar Card: உங்களின் ஆதார் கார்டை போட்டோ எடுத்தோ அல்லது Online மூலம் Download செய்யப்பட்ட e-Aadhaar கார்டையோ Upload செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணத்தை PDF வடிவில் மற்றும் 300 KB க்கும் குறைவாக இருக்கும்படி மாற்றிக்கொள்ளவும்.
4 .Pan Card: உங்களின் பான் கார்டையும் PDF மற்றும் 300 KB க்கும் குறைவாக இருக்கும்படி மாற்றிக்கொள்க.
How to Change Photo & Signature in PAN Card
பான் அட்டையில் புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றுவதற்கான செயல்முறைகளை Step by Step ஆக கீழே விளக்கியுள்ளேன்.
Step 1: நீங்கள் https://www.onlineservices.nsdl.com/ என்னும் இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Application Type என்ற இடத்தில் Change or Correction in Existing PAN Data என்பதையும், Category என்ற இடத்தில் INDIVIDUAL என்பதையும் தேர்வு செய்க.
Step 3: பிறகு Title, Last Name / Surname, Date of Birth, Email ID மற்றும் PAN Number போன்ற தகவல்களை Enter செய்யவும்.
Whether Citizen of India என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்க.
அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பின்பு Check Box யை டிக் செய்து Submit என்பதை கிளிக் செய்க.
Step 4: இப்பொழுது Token Number உருவாகும். அதை குறித்துக்கொண்டு Continue with PAN Application Form என்பதை அழுத்தவும்.
Personal Details
Step 5: இந்த பக்கத்தில் முதலில் உங்களின் KYC ஆவணங்களை எந்த முறையில் சமர்ப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இங்கு நான் Submit Scanned images through e-Sign என்பதை தேர்வு செய்துள்ளேன்.
Step 6: Aadhaar Number என்ற இடத்தில் உங்களின் கடைசி 4 இலக்க ஆதார் நம்பரை Type செய்ய வேண்டும்.
Step 7: Name As per Aadhaar என்ற Option இல் உங்களின் பெயர் ஆதார் அட்டையில் எப்படி இருக்கிறதோ அதே போன்று இங்கு Type செய்யவும்.
Step 8: Name that you would like printed on PAN Card இல் உங்களின் பெயர் பான் கார்டில் எப்படி Print என்பதை Enter செய்யவும். இதில் நீங்கள் Type செய்யும் பெயர் தான் பான் கார்டின் முன்பக்கத்தில் Print ஆகும்.
Step 9: Gender மற்றும் Father Name Type செய்துவிட்டு Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Contact & Other Details
Step 10: Residence என்பதை தேர்வு செய்து உங்களின் முழு முகவரியையும் Enter செய்ய வேண்டும்.
பிறகு Country Code யை தேர்வு செய்து Next யை கிளிக் செய்க.
Document Details
Step 11: Proof of Identity, Address மற்றும் Date of Birth ஆகியவற்றில் Aadhaar Card என்பதை தேர்வு செய்க.
Proof of PAN என்ற Option இல் Copy of PAN Card யை Select செய்க.
Step 12: Declaration என்ற இடத்தில் உங்களின் பெயர், இணைக்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை (இங்கு ஆதார் மற்றும் பான் கார்டு தேர்வு செய்துள்ளதால் 2 என்பதை குறிப்பிட்டுள்ளேன்) மற்றும் இடம் போன்றவற்றை Enter செய்க.
Step 13: இப்பொழுது நீங்கள் தயாராக வைத்திருக்கும் Photo, Signature போன்றவற்றை Upload செய்யவும்.
மேலும் அதற்க்கு கீழே உள்ள Upload Supporting Document என்ற இடத்தில் ஆதார் மற்றும் பான் கார்டை ஒன்றன் பின் ஒன்றாக Upload செய்யவும்.
பிறகு கடைசியாக உள்ள Submit பட்டனை அழுத்தவும்.
Step 14: இந்த பக்கத்தில் நீங்கள் Enter அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் தோன்றும். இதில் Aadhaar Number என்ற இடத்தில் உங்களின் முதல் 8 இலக்க ஆதார் நம்பரை Enter செய்யவும்.
இந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்கள் சரிபார்த்த பின்பு Proceed என்பதை கிளிக் செய்யவும்.
Step 15: இதில் நீங்கள் பணம் செலுத்துவதற்கான Option யை தேர்வு செய்யவும்.
Step 16: நீங்கள் இதற்க்கு 106.90 ரூபாய் செலுத்த வேண்டும். i agree என்பதை கிளிக் செய்து Proceed to Payment என்பதை அழுத்தவும்.
Step 17: Pay Confirm என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்தவும்.
Step 18: இந்த Option களில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் செலுத்திய பின்பு உங்களின் விண்ணப்பம் வெற்றிகரமாக Submit செய்யப்படும். நீங்கள் Submit செய்த 20 நாட்களுக்குள் புதிய பான் அட்டை வீட்டு முகவரிக்கு வந்துவிடும். நீங்கள் ஏற்கனவே குறித்துக்கொண்ட Token Number யை கொண்டு PAN Application Status யை அறியலாம்.
மேலும் படிக்க – How to Get Instant PAN Through Aadhaar in 5 Minutes
முடிவுரை
மேற்சொன்ன செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்களே உங்களின் PAN Card இல் Photo மற்றும் Signature யை Change செய்துகொள்ள முடியும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை பற்றிய கருத்து ஏதேனும் இருந்தால் அதை Comment பிரிவில் பதிவிடவும். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை வெளியிடும்போது அதை அறிவிப்புகளாக பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.