PAN Card

How to Get Instant PAN Through Aadhaar in 5 Minutes

தற்போது நீங்கள் புதிய பான் கார்டை பெறுவதற்கு வெறும் 5 நிமிடங்களே போதுமானது ஆகும். உங்களின் Aadhaar Card யை Online மூலம் KYC Verification செய்யும்போது, உடனடியாக Instant PAN Card Generate ஆகிவிடும். அந்த பான் கார்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

PAN Card (Permanent Account Number) என்பது ஒரு இந்திய குடிமகனுக்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்து எண்ணாகும்.

இந்த அட்டையானது வரி நோக்கங்கள் மற்றும் அடையாள ஆவணமாக பயன்படுகிறது. இந்த பான் அட்டையை பெறுவதற்கு Online மற்றும் Offline ஆகிய இரண்டு வழிகளில் விண்ணப்பிக்க முடியும்.

மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்கள், 2020 நிதியாண்டிற்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தினார். இந்த வசதியின் மூலம் தனிநபர்கள் எந்தவொரு படிவத்தையும் நிரப்பாமல் ஆதார் அட்டையின் மூலம் பான் கார்டை பெறலாம்.

இதன் மூலம் வெறும் 5 நிமிடங்களில் புதிய e-PAN Card யை பெறமுடியும். இது Aadhaar Card இன் மூலம் KYC Verification செய்யப்பட்டதால், இந்த e-PAN Card ஆனது நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு பெறப்படும் பான் அட்டைக்கு சமம் ஆகும்.

இந்த e-PAN கார்டை நீங்கள் இலவசமாக Download செய்யலாம். மேலும் அனைத்து நோக்கங்களுக்காகவும் இந்த மின் பான் கார்டை பயன்படுத்தலாம்.

Requirement for Instant Pan Card

Instant Pan Card யை உருவாக்குவதற்கு கீழ்கண்ட ஆவணங்கள் இருந்தாலே போதுமானது ஆகும்.

  • விண்ணப்பதாரர் உடனடி பான் கார்டை பெற விரும்பினால், இதற்க்கு முன்பு பான் அட்டையை பெறாதவராக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே பான் கார்டை பெற்றிருந்தால் இந்த முறையின் மூலம் மீண்டும் பான் கார்டை பெற முடியாது.
  • விண்ணப்பதாரரின் Aadhaar Card இல் மொபைல் நம்பர் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை உங்களின் ஆதார் அட்டையில் மொபைல் நம்பரை பதிவு செய்யவில்லை என்றால், உடனடி பான் கார்டை பெற முடியாது.
  • ஆதார் மூலம் KYC சரிபார்ப்பு நடைபெறுவதால், விண்ணப்பதாரர் எந்தவொரு KYC ஆவணங்களையும் சமர்ப்பிக்கவோ அல்லது பதிவேற்றவோ தேவையில்லை.
  • ஒருவர் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 272B(1) இன் படி அபராதம் விதிக்கப்படும்.\
Read  PAN Card Missing: How to Apply for PAN Card in Tamil

பான் கார்டில் என்னென்ன தகவல்கள் இருக்கும்

ஒரு பான் அட்டையில் கீழ்கண்ட தகவல் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

  • 10 இலக்க PAN Number 
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)
  • பெயர் (Name)
  • பிறந்த தேதி (Date of Birth)
  • தந்தையின் பெயர் (Father Name)
  • விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature)
  • QR Code 

Instant Pan card இல் தந்தையின் பெயர் மற்றும் விண்ணப்பதாரரின் கையெழுத்து இருப்பதில்லை. இருப்பினும் ஆதார் மூலம் KYC சரிபார்க்கப்பட்டதால் அனைத்து நோக்கங்களுக்கும் செல்லுபடியாகும்.

How to Apply For Instant PAN Through Aadhaar 

பின்வரும் படிகளை பின்பற்றி Instant PAN கார்டை பெறலாம். 

Step 1: வருமான வரித்துறையின் இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home  என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: தற்போது வருமான வரித்துறை இணையதளத்தின் முகப்பக்கம் திறக்கும். அதில் Quick Links என்பதின் கீழே உள்ள Instant PAN Through Aadhaar என்ற Option யை கிளிக் செய்யவும்.

Click Instant PAN Through Aadhaar

Step 3: இப்பொழுது Get New PAN என்பதை கிளிக்செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு Redirect ஆகும்.

Read  பான் கார்டு என்றால் என்ன? | PAN Card Meaning in Tamil

Click Get New PAN

Step 4: உங்களின் 12 இலக்க Aadhaar Number மற்றும் Captcha வை Enter செய்யவும். பிறகு I confirm that என்ற Check Box யை டிக் செய்து Generate Aadhaar OTP என்பதை கிளிக் செய்க.

Generate Aadhaar OTP

Step 5: இப்பொழுது உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number யை பெறுவீர்கள். அந்த OTP எண்ணை Enter செய்க. பிறகு Check Box யை டிக் செய்து Validate Aadhaar OTP and Continue என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Validate Aadhaar OTP and Continue

Step 6: இந்த பக்கத்தில் உங்களின் ஆதார் கார்டில் உள்ள Name, Date of Birth, Gender, Photo மற்றும் Address போன்ற தகவல்கள் தெரியும். I Accept that என்ற Check Box யை டிக் செய்துவிட்டு Submit PAN Request என்பதை அழுத்தவும்.

Click Submit PAN Request - Instant PAN Through Aadhaar

Step 7: தற்போது நீங்கள் ஒரு Acknowledgement Number யை பெறுவீர்கள். உங்களின் PAN Card Status யை தெரிந்துகொள்ள உங்களின் ஆதார் நம்பரை பயன்படுத்தலாம்.

Now Get Acknowledge Number

How to Check PAN Status / Download Instant PAN Card

மேலே சொல்லப்பட்ட செயல்முறைகளின் மூலம் உடனடி பான் அட்டைக்கு வெற்றிகரமாக Apply செய்துவிட்டீர்கள். இப்பொழுது அதன் Status யை Check செய்து பான் கார்டை எவ்வாறு Download செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

Read  How to Apply for Pan Card Online in Tamil: Step by Step Guide

Step 1: வருமான வரித்துறையின் இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

Step 2: Instant PAN Through Aadhaar என்ற Option யை கிளிக் செய்யவும்.

Instant PAN Through Aadhaar

Step 3: இந்த பக்கத்தில் Check Status / Download PAN என்பதை அழுத்தவும்.

Check Status and Download PAN

Step 4: உங்களின் ஆதார் நம்பர் மற்றும் Captcha வை Enter செய்து Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Enter Aadhaar number and click submit

Step 5: இப்பொழுது உங்களின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit செய்யவும்.

Validate Aadhaar OTP and Continue

Step 6: உங்களின் PAN Card Generate ஆகியிருந்தால் Download PAN என்ற பட்டன் தெரிவதை காண்பீர்கள். அந்த பட்டனை கிளிக் செய்தால் PDF வடிவத்தில் Download ஆகும்.

Download e PAN - Enter OTP - Instant PAN Through Aadhaar

ஒருவேளை Generate ஆகவில்லை என்றால் PDF link will be enabled after 10 minutes என்ற செய்தி செய்தி தோன்றும்.

பான் கார்டு ஆனது அதிகபட்சம் 10 நிமிடத்திற்குள் Generate ஆகிவிடும். ஆனால் பெரும்பாலும் 5 நிமிடத்திற்குள்ளாகவே உருவாகிவிடும். நான் Apply செய்தபோது எனக்கு 2 நிமிடத்தில் உருவாகிவிட்டது. 

Step 7: Download செய்யப்பட்ட PDF கோப்பை கிளிக் செய்து ஓப்பன் செய்யவும். இப்பொழுது Password யை Enter செய்ய வேண்டும். 

Password என்பது உங்களின் Date of Birth ஆகும். எடுத்துக்காட்டாக, உங்களின் பிறந்த தேதி 08/03/1998 என்றால் நீங்கள் 08031998 என்று Type செய்ய வேண்டும்.

Step 8: நீங்கள் Password யை Enter செய்தவுடன் e-PAN Card Open ஆகிவிடும். இதை நீங்கள் Print எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Now Open Instant PAN Card

முடிவுரை 

மேற்சொன்ன செயல்முறையின் மூலம் பான் அட்டையை பெறுவதற்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. உங்களுக்கு உடனடியாக பான் கார்டு தேவைப்படும் பட்சத்தில் இந்த முறையில் பெறலாம். இதில் e-PAN Card மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு Physical PAN Card தேவைப்படும் பட்சத்தில் அதை NSDL அல்லது UTIITSL இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest