பான் கார்டு என்றால் என்ன? | PAN Card Meaning in Tamil

பான் அட்டையை பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பான் அட்டை என்றால் என்ன? எதற்காக நாம் பான் அட்டையை பயன்படுத்துகிறோம்? போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

 இன்று பான் கார்டை பயன்படுத்தாதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் பான் அட்டை இல்லாமல் யாராலும் நிதி பரிவர்தனையை மேற்கொள்ள முடியாது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை (Transactions) செய்வதற்கு பான் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மக்களும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றை கட்டாயமாக வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் பான் கார்டையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

இவ்வளவு முக்கியம் வாய்ந்த PAN Card யை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் பான் அட்டையை பற்றிய புரிதல் ஏற்படும்.

பான் அட்டையின் சுருக்கம்:

Department  Income Tax Department, Govt. of India
Mode of Apply  Online & Offline 
PAN Validity  Life Time 
Cost of PAN Card  Rs.110
Purpose of PAN  Track Taxpayers and Prevent Tax evasion
PAN Cutomer Care  020-2721 8080
PAN Card Portals  NSDL, UTIITSL
Read  How to Apply for Pan Card Online in Tamil: Step by Step Guide

இதையும் படியுங்கள்:  How to Apply for Pan Card Online in Tamil

PAN Meaning in Tamil 

PAN – Permanent Account Number 

பான் – நிரந்தர கணக்கு எண் 

வேறு பெயர்கள்:

பான் அட்டை, வருமான வரித்துறையால் வழங்கப்படும் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை 

பான் கார்டு என்றால் என்ன?

பான் கார்டு என்பது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்கங்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் ஆகும். இந்த பான் அட்டையில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்கள் சேமிப்படுகின்றன.

ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒரே ஒரு பான் கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பெறவோ மற்றும் பயன்படுத்தவோ முடியாது.

Read  How to Get Instant PAN Through Aadhaar in 5 Minutes

விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் பான் அட்டையையை பெறலாம். இந்த அட்டை வருமான வரித்துறையினரால் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அட்டையாக தபால் துறை மூலம் வழங்கப்படும். 

PAN Number Meaning in Tamil 

PAN Card இல் 10 இலக்க எண்களே PAN Number ஆகும். இந்த பான் எண்ணிற்கு ஒரு அர்த்தம் உள்ளது. அதற்கான விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

PAN Number Meaning in Tamil

பொதுவாக அனைத்து PAN Number களும் ABCTY1234D என்ற வடிவத்தில் இருக்கும். அதாவது முதல் ஐந்து ஆங்கில எழுத்துக்களாகவும், அடுத்த நான்கு எண்களாகவும், கடைசி பத்தாவதாக ஒரு ஆங்கில எழுதும் இருக்கும்.

இந்த பான் எண்ணை 5 பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்.

முதல் மூன்று எழுத்துக்களானது AAA முதல் ZZZ வரையிலான எழுத்துக்களுக்கு இடையில் உள்ள அகர வரிசை தொடராகும்.

நான்காவது எழுத்தானது பான் அட்டையை வைத்திருப்பவரின் நிலையை குறிக்கிறது. அதாவது தனிநபருக்கு P, அறக்கட்டளைக்கு T, நிறுவனத்திற்கு C, அரசாங்கத்திற்கு G என்றவாறு குறிக்கிறது.

ஐந்தாவது எழுத்தானது பான் அட்டையை வைத்திருக்கும் நபரின் கடைசி பெயரின் (Last Name) முதல் எழுத்தை குறிக்கிறது.  எடுத்துக்காட்டாக Devaraj Pandiyan என்ற பெயருக்கு P என்று இருக்கும்.

Read  How to Change Photo in PAN Card

அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 க்கு இடையே உள்ள அகர வரிசை எண்களாகும்.

கடைசியாக உள்ள எழுத்தானது A முதல் Z வரையில் உள்ள ஆங்கில எழுத்தாகும்.

இதையும் படியுங்கள்:  How to Change Photo in PAN Card

பான் கார்டில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

ஒருவரது பான் அட்டையில் கீழ்கண்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

  • Photo 
  • PAN Number 
  • Name 
  • Father’s / Mother’s Name 
  • Date of Birth 
  • Signature 
  • QR Code 

FAQ

பான் எண் எத்தனை இலக்கங்களை கொண்டிருக்கும்?

பான் கார்டு 10 தனித்துவ எண்களை கொண்டிருக்கும்.


பான் அட்டைக்கான செலவு எவ்வளவு?

புதிய பான் அட்டை அல்லது ஏற்கனவே உள்ள பான் அட்டையில் திருத்தங்கள் செய்ய Rs.110 ரூபாய் ஆகும்.


பான் அட்டை எதற்க்காக பயன்படுகிறது?

நாட்டில் உள்ள வரி செலுத்துவோரை கண்காணித்து, வரி ஏய்ப்பை தடுப்பது முக்கிய நோக்கமாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *