PAN Card Missing: How to Apply for PAN Card in Tamil
PAN Card Missing How to Apply Tamil: PAN Card என்பது ஒவ்வொரு நபருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும். ஏனெனில் நிதி பரிவர்தனைகளில் பான் கார்டு கட்டாயமாக தேவைப்படுகிறது. ஒருவேளை உங்களின் PAN Card யை நீங்கள் தொலைத்துவிட்டிருந்தால், மேலும் பான் நம்பரையும் மறந்துவிட்டால் என்ன செய்வது? அந்த பான் அட்டையை பெற ஏதாவது வழி இருக்கிறதா? இதற்கான தீர்வு என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
நீங்கள் PAN Card Apply செய்து பெற்றுவிட்டால், வாழ்நாள் முழுமைக்கும் அந்த பான் எண்ணை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு நபர் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க முடியும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தின் படி குற்றமாகும். இவ்வாறு வைத்திருந்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில் உங்களின் பான் கார்டை நீங்கள் இழக்க நேரிடலாம். மேலும் அந்த பான் கார்டின் நம்பரையும் மறந்திருக்கலாம். இப்படியான ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டால் என்ன செய்வது என்று குழப்பமடையலாம்.
இந்த மாதிரியான சூழ்நிலையை நானும் எதிர்கொண்டேன். இதிலிருந்து நான் எப்படி வெளியே வந்து பழைய பான் கார்டை மீட்டெடுத்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Table of Contents
PAN Card யை எளிதாக மீட்டெடுக்க முன்பே நீங்கள் செய்ய வேண்டியவை
பான் கார்டையும், பான் எண்ணையும் தொலைத்த பிறகு அதை மீட்டெடுப்பது எப்படி என்பதை பற்றி உங்களுக்கு சொல்வதற்கு முன்பு, இந்த சூழல் வராமல் எப்படி தடுப்பது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
முடிந்தவரை உங்களின் பான் கார்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை Original PAN Card யை தொலைத்துவிட்டால் அதை மீட்டெடுப்பதற்க்கான ஒரு வழியை நீங்கள் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
அது என்னவென்றால், உங்களின் PAN Card இன் ஜெராஸ்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்களின் பான் கார்டை போட்டோ எடுத்து Google Drive, Drobox போன்ற ஆன்லைன் சேமிப்பு தளங்களில் சேமித்து வையுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களின் பான் கார்டை திரும்ப பெறுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில் உங்களின் PAN Number தெரிந்தாலே போதும். அதை Reprint செய்வதற்கு Apply செய்து புதிய பான் அட்டையை பெறலாம்.
PAN Card யையும், PAN Number யையும் Miss செய்துவிட்டால் அதை எப்படி மீட்பது?
நீங்கள் பான் அட்டையை இழந்துவிட்டு மேலும் பான் நம்பரை மறந்துவிட்டிருந்தால், பின்வரும் செயல்முறை பின்பற்றி அதை Recover செய்துகொள்ளுங்கள்.
இதற்க்கு நீங்கள் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். முதலாவதாக, உங்களின் பான் எண்ணை தெரிந்துகொள்ள வேண்டும் (Know PAN Number). இரண்டாவதாக, பான் கார்டை Reprint செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
How to Know PAN Number
இதற்க்கு முன்பு பான் நம்பரை அறிந்து கொள்ள https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தில் ஒரு Option இருந்தது.
அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்றவற்றை Enter செய்தால் உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit செய்தால் பான் நம்பர் தெரியும்.
ஆனால் தற்போது அந்த Option யை நீக்கிவிட்டனர்.
வேறென்ன செய்வது என்றால்,
Step 1: நீங்கள் 1800 180 1961 என்ற Customer Care எண்ணிற்கு Call செய்ய வேண்டும்.
Step 2: பிறகு உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.
Step 3: Customer Care நிர்வாகியை தொடர்பு கொண்டவுடன், அவர்களிடம் உங்களின் பிரச்னையை கூறவும்.
அதாவது, அவரிடம் என்னுடைய பான் அட்டை தொலைந்துவிட்டது மேலும் பான் நம்பரும் மறந்துவிட்டேன். இப்பொழுது பான் அட்டையை Reprint க்கு Apply செய்வதற்கு என்னுடைய பான் நம்பர் தெரிய வேண்டும் என்று கூறுங்கள்.
Step 4: Customer care நிர்வாகி உங்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர் போன்ற தகவல்களை கேட்பார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் சரியாக கூறிய பின்பு உங்களின் பான் நம்பரை கூறுவார்கள். அதை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் சரியான தகவல்கள் சொன்னால் மட்டுமே உங்களிடம் பான் நம்பரை கூறுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
PAN Card Missing How to Apply Tamil | Reprint PAN Card
இப்பொழுது உங்களின் PAN Number யை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். இதை வைத்து மறுபதிப்புக்கு (Reprint) விண்ணப்பிக்கலாம்.
அதற்கான செயல்முறையை பின்வருமாறு விளக்கியுள்ளேன்.
Step 1: https://www.pan.utiitsl.com/ என்ற லிங்க்கை கிளிக் செய்தால் பின்வரும் இணையப்பக்கம் திறக்கும்.
Step 2: அதில் Reprint PAN Card என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது தோன்றும் தேர்வுகளில் Reprint Pan Card என்பதை தேர்வு செய்யவும்.
Step 4: உங்களின் PAN Number, Aadhaar Number, Date of Month, and Year போன்றவற்றை Enter செய்து Submit செய்யவும்.
Step 5: Check Box யை டிக் செய்துவிட்டு Get OTP என்பதை அழுத்தவும்.
Step 6: இப்பொழுது பான் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number யை Enter செய்து Submit செய்யவும்.
Step 7: அடுத்து Payment செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். இதற்க்கு நீங்கள் Rs.50 செலுத்த வேண்டும். இதை உங்களின் Net Banking, ATM Card, UPI போன்ற வழிகளில் செலுத்தலாம்.
நீங்கள் பணத்தை செலுத்திய பின்பு புதிய பான் கார்டு ஆனது இரு வாரங்களுக்குள் உங்களின் முகவரிக்கு வந்துவிடும்.
முடிவுரை
பல நபர்கள் அவர்களின் பான் கார்டை தொலைத்து மற்றும் பான் நம்பரையும் மறந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த முறையை பயன்படுத்தி எளிதாக புதிய பான் அட்டையை பெறலாம். நீங்கள் பான் எண்ணை தெரிந்துகொண்ட பின்பு, அதை Reprint செய்ய நெட் சென்டருக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ஏனெனில் நீங்களே ஆன்லைன் மூலம் எளிதாக Reprint செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ஒருவேளை இந்த மாதிரியான பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டிருந்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
FAQ
பான் கார்டு தொலைந்த பிறகு, மற்றொரு புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
முடியாது. ஒரு நபர் ஒரு பான் எண்ணை மட்டுமே பெற முடியும்.
பான் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
உங்களின் பான் எண்ணை கொண்டு Reprint க்கு விண்ணப்பிக்கலாம்.
பான் நம்பரையும் மறந்துவிட்டால் அதை எப்படி தெரிந்துகொள்வது?
1800 180 1961 என்ற Customer Care யை தொடர்பு கொண்டு உங்களின் பான் நம்பரை தெரிந்துகொள்ளலாம்.
பான் கார்டை Reprint செய்ய விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணம் எவ்வளவு?
Reprint கு விண்ணப்பிக்கும் போது Rs.50 ரூபாய் செலுத்த வேண்டும்.
Reprint க்கு விண்ணப்பித்த பிறகு எத்தனை நாட்களுக்குள் புதிய பான் அட்டை பெற முடியும்?
சுமார் இரண்டு வாரங்களுக்குள் புதிய பான் அட்டையை தபால் மூலமாக பெறுவீர்கள்.