Post Office Saving

How to Generate IPPB Virtual Rupay Debit Card in Online

India Post Payment Bank ஆனது IPPB என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த செயலியின் மூலம் Post Office இல் உள்ள உங்கள் வங்கிக்கணக்கின் பரிவர்த்தனைகளை, மொபைல் மூலமாகவே மேற்கொள்ள முடியும். மேலும் அந்த செயலியில் தற்போது Virtual Rupay Debit Card என்ற சேவையை தொடங்கியுள்ளது. இந்த டெபிட் அட்டையை எவ்வாறு Generate செய்வது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் விவரிக்கபோகிறேன்.

What is the IPPB Virtual Debit Card?

Virtual Debit Card என்பது ஆன்லைனில் தோராயமாக உருவாக்கப்பட்ட Virtual Number மற்றும் CVV Number கொண்டதாகும். இது உங்களின் வங்கிக்கணக்குடன் Mapping செய்யப்பட்டிருக்கும். இதை பயன்படுத்தி நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யலாம்.

நீங்கள் இந்த கார்டை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கலாம் மற்றும் Cancel செய்யலாம். இதை தமிழில் மெய்நிகர் டெபிட் கார்டு என்றும் அழைக்கலாம்.

Read  How to Register Dakpay UPI App of India Post Payment Bank

பொதுவாக ATM Center இல் நீங்கள் பணத்தை Withdrawal செய்வதற்கு பயன்படுத்தும் டெபிட் கார்டானது, Physical டெபிட் கார்டு ஆகும். இதை உங்களால் தொட்டுப்பார்க்க முடியும். ஆனால் IPPB வழங்கும் Virtual டெபிட் கார்டை உங்களால் பார்க்க மட்டும் தான் முடியும். 

Benefits of Virtual Debit Card 

இந்த வகையான கார்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை பெறுவீர்கள். ஏனெனில் மெய்நிகர் டெபிட் கார்டு ஆனது ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஏற்றதாகும்.

தற்போது உங்களின் Physical டெபிட் அட்டையை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும்போது, அதன் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆனால் Virtual அட்டையை எப்போது வேண்டுமானாலும் Generate மற்றும் Cancel செய்துகொள்ளலாம் என்பதால், இதில் திருட எதுவும் இல்லை.

உங்களின் மெய்நிகர் டெபிட் அட்டையின் தகவல்கள் மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது, மேலும் அவர்கள் அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அதை ரத்து செய்து புதியதை உருவாக்கிக்கொள்ளலாம்.

Read  போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

How to Generate IPPB Rupay Virtual Debit Card

நீங்கள் மெய்நிகர் அட்டையை உருவாக்குவதற்கு முன்பு பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

  • நீங்கள் ஒருமுறை மெய்நிகர் அட்டையை உருவாக்கினால் அதற்க்கு Rs.25 ரூபாய் செலுத்த வேண்டும். இது உங்களின் Post Payment Bank இல் இருந்து தானாகவே கழிக்கப்படும்.
  • இந்த அட்டையை இந்தியாவிற்குள் நடக்கும் ஆன்லைன் பரிவர்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • மொபைல் செயலி மூலமாகவே Usage Limit, Block / Unblock மற்றும் Card Generation போன்றவற்றை செய்யலாம்.
  • இதன் செல்லுபடியாகும் காலம் 60 மாதங்கள் ஆகும்.

மெய்நிகர் அட்டையை உருவாக்குவதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: உங்களின் மொபைலில் IPPB Mobile Banking செயலியை செய்து Login செய்யவும்.

Step 2: Login செய்த பிறகு Cards என்பதை தேர்வு செய்யவும். 

Click Cards for IPPB Mobile Banking App

Step 3: Virtual Debit Card என்பதின் மீது கிளிக் செய்யவும்.

Click Virtual Debit Card- IPPB

Step 4: Request Virtual Debit Card என்பதை அழுத்தவும்.

Read  Post Office Monthly Income Scheme - மாத வருமான திட்டம்

Click For Request

Step 5: இப்பொழுது Rupay Virtual Card என்று ஏற்கனவே தேர்வாகி இருக்கும். Check Box யை டிக் செய்து Continue என்பதை கிளிக் செய்க.

Press to Continue

Step 6: Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Click Confirm for IPPB Virtual debit card

Step 7: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.

Enter OTP and Submit

Step 8: தற்போது உங்களின் மெய்நிகர் டெபிட் கார்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுவிட்டது.

Now Successfully generated ippb virtual debit card

இந்த அட்டையை பயன்படுத்தி நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole