DakPay: India Post Payment Bank Launched Digital Payment App
India Post Payment Bank ஆனது சமீபத்தில் Dakpay என்ற UPI Digital Payment App யை அறிமுகப்படுத்தியது. இதற்கான அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நிதி பரிவர்த்தனையை கொண்டு செல்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்கள் எளிமையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொருட்டு UPI செயலிகளை அறிமுகம் செய்தன.
இந்த வரிசையில் தபால் நிலையமும் தற்போது இணைந்துள்ளது. IPPB அறிமுகப்படுத்தியுள்ள DakPay என்ற செயலியானது UPI Payment அடிப்படையில் செயல்படுவதாகும்.
DakPay UPI Payment App
டாக் பே செயலியானது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு மட்டும் உருவாக்கப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து Post Office Network மூலம் IPPB டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது.
இதன் மூலம் உங்களின் IPPB கணக்கில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்றவர்களின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை Transfer செய்ய முடியும்.
இந்த செயலியை Register செய்வது மிகவும் எளிதாகும். இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, முதலில் Profile Creation யை உருவாக்க வேண்டும். இதில் உங்களின் பெயர், மின்னஞ்சல், பிறந்த தேதி மற்றும் பாஸ் கோடு போன்றவற்றை உள்ளிட்டு Profile Creation யை உருவாக்கலாம்.
பிறகு உங்களின் வங்கிக்கணக்கை Add செய்தால் DakPay App தயாராகிவிடும். இனி இந்த செயலி மூலம் நீங்கள் UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இந்த செயலியில் உள்ள அம்சங்கள் என்ன ?
- நீங்கள் எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு பணத்தை Transfer செய்ய முடியும்.
- நீங்கள் ஒரு கடையில் பொருட்களை வாங்கும்போது அதற்கான தொகையை வணிகர்களுக்கு QR Code யை Scan செய்து Pay செய்யலாம்.
- உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் இருந்தால் அவை அனைத்தையும், இந்த செயலியில் Link செய்யலாம்.
- இந்த செயலியில் Biometric வசதி உள்ளது
இந்திய தபால் துறையின் இந்த செயலியானது மற்ற UPI செயலிகளை போன்று சிறந்த சேவையை வழங்கும் என்பதில் மறுப்பதற்கில்லை.