Post Office Saving

Kisan Vikas Patra (KVP): Post Office – Eligibility, Interest, Benefits

Kisan Vikas Patra (KVP) என்பது இந்திய தபால் நிலையங்களில் பத்திரங்கள் வடிவில் கிடைக்கும் சேமிப்பு திட்டமாகும். இது தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு, உங்களின் முதலீட்டை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

Kisan Vikas Patra திட்டமானது ஒரு நிலையான சிறு சேமிப்பு திட்டமாகும். உதாரணமாக, KVP திட்டத்தில் நீங்கள் Rs.10,000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்திற்கு பிறகு Rs.20,000 கிடைக்கும்.

Kisan Vikas Patra (KVP) – கிசான் விகாஸ் பத்திரம் 

இந்திய Post Office-களில் Kisan Vikas Patra-வை ஒரு சிறிய சேமிப்பு திட்டமாக 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் நீண்ட கால நிதி ஒழுக்கத்தை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 

ஆரம்பத்தில் விவசாயிகளின் நீண்ட கால சேமிப்பிற்காக இந்த KVP திட்டம் வடிவமைக்கப்பட்டது. இப்போது இந்த திட்டம் அனைவருக்கும்  கிடைக்கிறது.  இது இந்திய அரசின் உத்தரவாதத்தின் காரணமாக, ஆபத்து இல்லாத திட்டமாக கருதப்படுகிறது.

KVP திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையானது,120 மாதங்களுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இது பத்து ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு சமமாகும். அவ்வப்போது KVP திட்டத்தின் வட்டி விகிதத்தை நிதியமைச்சகம் மாற்றும்போது , சில மாதங்கள் அதிகரிக்கலாம். தற்போது முதிர்வு காலம் 120 மாதங்கள் (10 வருடங்கள்) ஆகும். 

Read  Post Office Recurring Deposit (RD) Scheme, Interest Rate 2023

இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டு பண மோசடி நோக்கங்களுக்காக நிறுத்தப்பட்டது. பின்னர், பண மோசடி செய்யும் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தும் மாற்றங்களுடன் 2014-ல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்கள் மூலம் முதலீடு செய்யலாம்.

Kisan Vikas Patra Interest Rate

Kisan Vikas Patra திட்டத்திற்கான வட்டி விகிதம் (Interest Rate) நிதி அமைச்சகத்தின் அறிவிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது மாறக்கூடும். KVP-யின் தற்போதைய வட்டி விகிதம் 7.2% ஆகும். இந்த வட்டி விகிதம் 120 மாதங்களில் உங்களின் முதலீட்டு தொகையை இரட்டிப்பாக்கும்.

வட்டி விகிதம் மாறக்கூடும் என்றாலும், முதிர்வு காலத்தின் முடிவில் முதலீட்டாளர் பெரும் வருமானம் சான்றிதழின் தொடக்க காலத்தில் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

நீங்கள் முதலீடு செய்யும் நேரத்தில் இருக்கும் வட்டியின் அடிப்படையில் முதிர்வு தொகை கணக்கிடப்படுகிறது. பிறகு கணக்கிடப்பட முதிர்வு தொகையை KVP பத்திரம் வாங்கும்போதே அச்சிடப்படுகிறது. இதன் பொருள் என்னெவென்றால், முதிர்வு நேரத்தில் வட்டி விகிதம் மாறினாலும், உங்களின் வருமானம் பாதிக்கப்படாது. எனவே KVP முதலீடு பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

KVP-யில் கூட்டு வட்டி மூலம் ஆண்டுதோரும் கணக்கிடப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்திரத்தில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

Quarterly Period Interest Rate %
2022–23 (Jan-Mar)7.2% (Maturity – 120 Months)
2022–23 (Jul-Sep)6.9% (Maturity – 124 Months)
2022–23 (April-June)6.9% (Maturity – 124 Months)
2020–21 (April-June)6.8% (Maturity – 124 Months)
2019–20 (Oct-Dec)7.6% (Maturity – 113 Months)
2019–20 (July-Sep)7.6% (Maturity – 113 Months)
2019–20 (Jan-Mar)7.6% (Maturity – 113 Months)
2019-20 (April- Jun)7.7% (Maturity – 112 Months)
2018-19 (Oct-Dec)7.7% (Maturity – 112 Months)
2018-19 (Jul-Sep)7.3% (Maturity – 118 Months)
2018-19 (Jan-Mar)7.7% (Maturity – 112 Months)
2018-19 (April-Jun)7.3% (Maturity – 118 Months)
Read  How to Open IPPB Mobile Banking: India Post Payments Bank

Eligibility for KVP Investment

KVP திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகள்:

  • முதலீட்டாளர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • பெற்றோர் அல்லது பாதுகாவலர் மைனரின் சார்பாக முதலீடு செய்யலாம்.
  • Kisan Vikas Patra திட்டத்தில் NRI மற்றும் HUF போன்றவர்கள் முதலீடு செய்ய முடியாது.
  •  KVP பத்திரங்களை தனி நபராகவோ அல்லது இரண்டு பேர் சேர்ந்தோ வாங்கலாம்.

Features of KVP

KVP திட்டத்தின் அம்சங்கள் பின்வருமாறு:

  • கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.1000 முதல் முதலீடு செய்யலாம்.
  • பத்திரங்களை Rs.1000-களின் மடங்குகளில் வாங்கலாம். மேலும் Rs.1000, Rs.5,000, Rs.10,000 மற்றும் Rs.50,000 போன்ற மதிப்புகளில் இருக்கின்றன.
  • இத்திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச உச்ச வரம்பு ஏதும் இல்லை.
  • இதற்கான விண்ணப்பங்கள் இந்திய தபால் நிலையங்கள் , ஆன்லைன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கின்றன.
  • Nomination செய்யும் வசதியும் இதில் உள்ளது.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, முன்கூட்டியே திரும்ப பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.
  • கிசான் விகாஸ் பத்திரத்தை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக மாற்றலாம்.
Read  How to Open PPF Account in Post Office

Benefits of KVP

  • KVP பத்திரங்களுக்கு அரசாங்க ஆதரவு இருப்பதால் வருமான உத்தரவாதம் கிடைக்கிறது.
  • கிசான் விகாஸ் பத்திரம் 10 வருட நீண்ட கால முதலீடாகும். இது உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது.
  • இதை வங்கிகளில் பிணையமாக வைத்து கடன்களை வாங்கலாம்.
  • நீங்கள் வேறு இடத்திற்கு குடிபெயறும்போது, உங்களுக்கு அருகில் உள்ள Post Office-க்கு மாற்றிக்கொள்ளும் வசதியை கொடுக்கிறது.

How to Open Kisan Vikas Patra Account in Post Office

  • உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியிலோ சென்று கணக்கை திறக்கலாம்.
  • இதற்கான Form-A விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து நிரப்பலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
  • அதாவது அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று போன்றவைகளை இணைக்க வேண்டும்.
  • உங்களின் அசல் சான்றிதல்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். தபால் அலுவலக ஊழியர்கள் உங்களின் ஆவணங்களை சரிப்பார்த்து KYC Verification-யை முடிப்பார்கள்.
  • நீங்கள் பணம் செலுத்தியவுடன் அதற்க்கான KVP பத்திரங்களை வழங்குவார்கள். நீங்கள் பத்திரங்களை பெற்றதும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இந்திய தபால் நிலையங்கள் தற்போது பத்திரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் வழங்குகிறது. எனவே சேமிப்பு பத்திரங்களை மின்னஞ்சல் மூலமாக வழங்க தபால் ஊழியரை கேட்டுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole