National Investment SchemePost Office Saving

National Savings Certificates (NSC) Post Office

National Savings Certificates (NSC) என்பது நிலையாக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த தேசிய சேமிப்பு பத்திர (NSC) திட்டத்தை எந்த தபால் நிலையத்திலும் (Post office) திறக்க முடியும். இது இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் திட்டம் என்பதால், பாதுகாப்பான மற்றும் ஆபத்து குறைந்த திட்டமாகும். இந்தியாவில் சிறு சேமிப்பு மற்றும் வரியை சேமிக்க இதில் முதலீடு செய்கின்றனர்.

Public Provident Fund (PPF) மற்றும் Post Office Fixed Deposit போன்றவை நிலையான வருமானம் தரும் முதலீட்டு திட்டங்களாகும். அதேபோல் National Savings Certificates திட்டமும், நல்ல வட்டி விகிதத்தை தரும் முதலீட்டு திட்டமாகும். Rs.1.5 Lakh வரை முதலீடு செய்தால், வருமானவரி சட்டத்தின் படி 80C கீழ் வரிவிலக்கு பெறலாம்.

NSC Interest Rate

தற்போது 01-01-2023 to 31-03-2023 காலாண்டிற்கான NSC வட்டி விகிதம் (Interest Rate) 7% ஆகும். ஆனால் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய நிதி அமைச்சகத்தால் திருத்தப்படலாம். NSC முதலீடு திட்டம் கூட்டுவட்டி முறையை கொண்டிருப்பதால், Recurring Deposit (RD) மற்றும் Fixed Deposit (FD)-யை விட சிறந்தது. 

NSC திட்டத்தின் முந்தைய காலாண்டுகளுக்கான வட்டி விகிதம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

PeriodInterest Rate (%)
2022-23 (Jan – Mar)7.0
2022-23 (July – Sep)6.8
2022-23 (April – Jun)6.8
2021-22 (Jan – Mar)6.8
2021-22 (Oct – Dec)6.8
2021-22 (July – Sep)6.8
2021-22 (April – Jun)6.8
2020-21 (Jan – Mar)6.8
2020-21 (Oct – Dec)6.8
2020-21 (July – Sep)6.8
2020-21 (April – Jun)6.8
2019-20 (Jan – Mar)7.9
2019-20 (Oct – Dec)7.9
2019-20 (July – sep)7.9
2019-20 (April – Jun)8
Read  போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

Tax Benefits of NSC Investment

National Savings Certificates (NSC) திட்டத்தில் Rs.1.5 Lakh வரை முதலீடு செய்து, வருமான வரி சட்டம் 80C கீழ் வரிவிலக்கை பெறலாம்.

மேலும் பத்திரங்களின் மூலம் ஈட்டப்படும் வட்டியானது, ஆரம்ப முதலீட்டில் சேர்க்கப்பட்டு வரிசலுகைக்கு தகுதி பெறுகிறது.

உதாரணமாக, நீங்கள்  Rs.10000 மதிப்புள்ள பத்திரங்களை வாங்குகிறீர்கள் என்றால், முதல் ஆண்டில் அந்த ஆரம்ப முதலீட்டு தொகையில் (Initial Investment Amount) வரிவிலக்கை பெற நீங்கள்  தகுதியுடையவராவர்.

இரண்டாம் ஆண்டில், அந்த ஆண்டின் முதலீட்டு தொகை மற்றும் முதல் ஆண்டில் ஈட்டிய வட்டி ஆகியவற்றிற்கு வரிவிலக்கு கோரலாம். ஏனெனில், அசல் தொகையில் வட்டி சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.

Features of National Savings Certificates (NSC)

  • தேசிய சேமிப்பு பத்திரத்தில் (NSC) முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை Rs.100 ஆகும். அதேநேரத்தில் அதிகபட்ச முதலீடு வரம்பு ஏதும் இல்லை.
  • Rs.100-க்களின் மடங்குகளில் பத்திரங்களை வாங்கலாம். Rs.500, Rs.1000, Rs.5000, Rs.10000 போன்ற மதிப்புகளிலும் சேமிப்பு பத்திரங்களை வாங்கலாம். 
  • NSC முதலீடுகளின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • Nomination செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஒருவேளை, முதலீட்டாளர் காலமானால், அவரால் நியமிக்கப்பட்ட Nominee இதன் பலனை பெறமுடியும்.
  • ஆரம்பத்தில் NSC IX மற்றும் NSC VIII ஆகிய இரண்டு வகையான பத்திரங்கள் வழங்கப்பட்டன. டிசம்பர் 2015-ல் இந்திய அரசு NSC IX வகை பத்திரங்களை வழங்குவதை நிறுத்தியது. எனவே, தற்போது NSC VIII வகை பத்திரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
  • NSC பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடன்களை (Loan) வாங்க முடியும்.
Read  How to Pay Money in Sukanya Samriddhi Account (SSA) Online

Advantages of NSC

  • NSC திட்டத்தில் முதலீடு செய்வதால், வரிச்சலுகைகளை பெறலாம்.
  • பல நபர்கள் NSC திட்டத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில், இத்திட்டத்தின் மூலம் அவர்கள் ஒய்வு பெற்றவுடன், வழக்கமான வருமானத்தை வழங்க முடியும்.
  • தனிநபர்கள் (individuals) அசல் பத்திரங்களை இழந்துவிட்டால், நகல் (Duplicate) பத்திரங்களை பெற முடியும். இதற்கான கட்டணமாக Rs.5 செலுத்த வேண்டும்.
  • NSC பத்திரங்களை ஒரு நபரின் பெயரில் இருந்து, இன்னொரு நபருக்கு Transfer செய்ய முடியும். ஆனால், 5 வருட Locking Period-ல் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
  • NSC பத்திரங்களை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு Transfer செய்துகொள்ளலாம்.

Premature Withdrawal in NSC

NSC திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையை 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன்பாகவே Withdrawal செய்ய முடியாது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் தொகையை முன்கூட்டியே திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது.

NSC திட்டத்தில் முன்கூட்டியே Withdrawal செய்ய அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள்:

  • பத்திரங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர் காலமானால், அவரின் Nominee, முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம்.
  • முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், முன்கூட்டியே Withdrawal செய்யலாம்.
Read  Kisan Vikas Patra (KVP): Post Office - Eligibility, Interest, Benefits

National Savings Certificates Eligibility

முதலீட்டாளர்கள் NSC-ல் முதலீடு செய்ய பின்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

  • முதலீடு செய்யும் தனிநபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • சேமிப்பு பத்திரங்களை வாங்க தனிநபர்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
  • குடியுரிமை பெறாத இந்தியர்கள் (NRI) NSC திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.
  • தனிநபராகவும் அல்லது மற்றவருடன் சேர்ந்து Joint Account ஆகவும் NSC திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் மைனர் சார்பாகவும் NSC -யில் முதலீடு செய்யலாம்.

How to open NSC Account in Post Office

  • நாட்டில் எந்த Post Office-லும்  NSC கணக்கை திறக்க முடியும்.
  • Post Office-ல் கொடுக்கப்படும் Form-யை முழுமையாக நிரப்ப வேண்டும்.
  •  நீங்கள் நிரப்பிய Form உடன் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • மேலும் Passport அளவுள்ள 2 புகைப்படங்களையும், அசல் சான்றிதல்களையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
  • சேமிப்பு பத்திரங்களை வாங்குவதற்கான தொகையை பணம், வரைவு  அல்லது காசோலையில் செலுத்தலாம்.

நீங்கள் ஒரு பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு பல விருப்பங்கள் உள்ளன. அதில் தேசிய சேமிப்பு பத்திரங்களும் ஒன்றாகும். குறுகிய காலத்திற்கு நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்க்கு NSC ஒரு சிறந்த திட்டமாகும். ஆனால், நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு PPF  சிறந்த திட்டமாகும். PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

தொடர்புடைய கட்டுரைகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole