How to Open PPF Account in Post Office
Table of Contents
What is PPF Account?
PPF (Public Provident Fund) என்பது பொது வருங்கால வைப்பு நிதியாகும். இது இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இந்த PPF திட்டமானது வரிவிலக்கு மற்றும் அதிக வட்டி விகிதத்தினை கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலமாக PPF Account-யை Open செய்ய முடியும்.
தபால் நிலையங்கள், நாட்டின் தொலைதூர பகுதிகளில் கூட தங்களின் சேவைகளை வழங்குகின்றன. இதனால் சேமிப்பு திட்டங்கள் Post Office-களின் மூலம் எளிதாக மக்களுக்கு சென்றடைகிறது.
Eligibility for opening a PPF account in post office
ஒரு PPF Account-யை Open செய்வதற்கு பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இதுபோன்ற எந்த வகையை சேர்ந்தவராக இருப்பினும், அவர்கள் Post Office-ல் PPF கணக்கினை திறக்கலாம்.
- ஒரு தனிநபர் ஒரு PPF கணக்கினை மட்டுமே Open செய்ய வேண்டும்.
- ஒருவேளை, அந்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட PPF கணக்குகளை திறந்தால், இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட கணக்குகளில் உள்ள அசல் பணத்தை, வட்டியில்லாமல் திருப்பி வழங்கப்படும். மேலும் அந்த PPF கணக்குகள் மூடப்படும்.
- இரண்டு நபர்கள் சேர்ந்து Joint Account ஆக திறக்க முடியாது.
- தாய் அல்லது தந்தை இவர்களில் யாராவது ஒருவர், மைனர் குழந்தையின் பெயரில் கணக்கினை Open செய்ய முடியும்.
- மைனர் குழந்தையின் பெயரில் கணக்கினை Open தாய் அல்லது தந்தை இறந்துவிட்டால், அந்த கணக்கினை தொடர முடியாது. மேலும் அந்த கணக்கினை மூடிவிட்டு பணமானது திருப்பி தரப்படும்.
- குடியுரிமை பெறாத இந்தியர்கள் (NRI) PPF கணக்கினை திறக்க அனுமதி இல்லை. அவர்கள் இந்தியாவில் வசிக்கும்போது கணக்கு திறக்கப்பட்டால், 15 ஆண்டுகள் அதாவது முதிர்வு காலம் வரை கணக்கு செயலில் இருக்கும்.
PPF Interest Rate
இத்திட்டத்திற்கு இந்திய அரசின் ஆதரவு இருப்பதால், அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் PPF வட்டி விகிதம் (Interest Rate) ஒரே மாதிரியாக பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை மாற்றலாம்.
தற்போது 01-04-2022 to 30-06-2022 காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1% என்று நிர்ணயிக்கப்படுகிறது.
முந்தைய காலாண்டு வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Office PPF Account Calculator
PPF Account Opening Procedure in a Post Office
தபால் நிலையத்தில் PPF Account-யை திறக்க பின்வரும் செயல்முறையை பின்பற்ற வேண்டும்.
- தனிநபர்கள் Account-யை Open செய்யும் Form-யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள Post Office-ல் பெற்றுக்கொள்ளலாம்.
- Account Opening Form-யை முழுமையாக நிரப்பி அதில் Passport Size புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அதனுடன் KYC Document-களையும் இணைத்து Post Office-ல் கொடுக்க வேண்டும்.
- ஆவணங்களை சரிப்பார்க்க Original Document-களையும் உடன் கொண்டு செல்ல வேண்டும்.
- நீங்கள் PPF Account-யை Open செய்யும்போது, ஆரம்ப தொகையாக (Intial Deposit) Rs.100 செலுத்த வேண்டும். ஆனால் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.500 ரூபாயாவது Deposit செய்ய வேண்டும்.
- தனிநபர் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சமாக Rs.1,50,000 வரை செலுத்தலாம்.
- நீங்கள் அனைத்து ஆவணங்களையும், Intial Deposit உடன் Submit செய்தவுடன் PPF கணக்கிற்கான Passbook-யை கொடுப்பார்கள். அந்த Passbook-ல் Account Holder Name, PPF Account Number மற்றும் Deposit Amount போன்ற தகவல்கள் இருக்கும்.
Documents required
- Permanent Account Number (PAN)
- Aadhaar Card, Driving Licence, Passport, Voter Card இவற்றில் ஏதாவது ஒன்று
Features of PPF Account
Post Ofice-ல் Open செய்யும் PPF கணக்கில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஒரு Post Office PPF கணக்கில், ஒரு ஆண்டில் ஒரே தவணையாக மொத்தமாக அல்லது அதிகபட்சம் 12 தவணைகளில் செலுத்தலாம்.
- PPF கணக்கில் Deposit செய்யப்பட்ட அசல் தொகை மற்றும் வட்டி இவை இரண்டிற்கும் வரிவிலக்கு உண்டு.
- கணக்கை செயலில் (Activate) வைத்திருக்கு ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் Rs.500 ரூபாய் செலுத்த வேண்டும்.
- Post Office PPF கணக்கில் வட்டியை (Interest) ஆண்டுதோறும் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்கில் செலுத்தப்படும்.
- PPF தொகையின் முதிர்வு காலம் (Maturity Amount) 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்ச்சி அடைந்த ஒரு வருடத்திற்குள் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
- முதிர்வு தொகையை நீட்டிப்பு இல்லாமல் மற்றும் வைப்பு இல்லாமல் வைத்திருக்க முடியும்.
- PPF Account-யை 15 ஆண்டுகளுக்கு முன்பே Close செய்ய முடியாது.
- கணக்கு திறந்து 7-வது நிதியாண்டில்(Financial Year) இருந்து ஒவ்வொரு ஆண்டும் Withdrawal அனுமதிக்கப்படுகிறது.
- 3-ம் நிதியாண்டில் இருந்து Loan வசதி கிடைக்கிறது.
- PPF கணக்கை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு Transfer செய்துக்கொள்ளலாம்.
- நியமனதாரரை (Nomination) நியமிக்கும் வசதியும் இதில் உள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
- Post Office Bank Account – Eligibility, Features & Interest Rate
- Post Office Monthly Income Scheme – மாத வருமான திட்டம்
- Recurring Deposit (RD) Interest Rate in Post Office