How to Pay Money in Sukanya Samriddhi Account (SSA) Online
Sukanya Samriddhi Account (SSA) என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு கணக்கில், Post Office க்கு போகாமல் Online மூலமாக எப்படி பணத்தை செலுத்துவது (Pay Money) என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டம் ஆகும்.
இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்பதால் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
வங்கிகளில் இருக்கும் சேமிப்பு திட்டங்களுக்கு கொடுக்கப்படும் வட்டியை (Interest) விட, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
இந்த SSA கணக்கை ஒரு Post Office க்கு சென்று பெண் குழந்தையின் பெயரில் திறக்கலாம். அப்படி Open செய்த பிறகு அந்த கணக்கிற்கான பாஸ் புத்தகத்தை வழங்குவார்கள்.
பிறகு ஒவ்வொரு மாதமும் அந்த கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Table of Contents
Indian Post Payment Bank (IPPB)
செல்வமகள் சேமிப்பு கணக்கில் நீங்கள் தபால் நிலையத்திற்கு சென்றோ அல்லது Online மூலமாகவோ பணத்தை செலுத்த முடியும்.
நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்த விரும்பினால் அதற்க்கு முதலில் Indian Post Payment Bank (IPPB) கணக்கை திறக்க வேண்டும். இதை IPPB App என்ற மொபைல் செயலி மூலமாகவோ அல்லது தபால் நிலையத்திற்கு சென்றோ திறக்கலாம்.
IPPB கணக்கை திறந்தவுடன் உடனடியாக உங்களுக்கு Account Number மற்றும் Customer ID கிடைக்கும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை பயன்படுத்தி IPPB செயலியில் Register செய்ய வேண்டும். ஏனெனில் அப்போது தான் IPPB கணக்கை Login செய்ய முடியும்.
இந்த கணக்கை செல்வமகள் சேமிப்பு கணக்கின் வாடிக்கையாளரின் பெயரில் தான் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாருடைய பெயரில் வேண்டுமானாலும் இதை திறக்கலாம்.
How to Pay Money Sukanya Samriddhi Account (SSA) in Online
நீங்கள் முதலில் மற்ற வங்கியில் இருக்கும் பணத்தை (SBI, Indian Bank போன்றவை) IPPB கணக்கிற்கு Transfer செய்ய வேண்டும்.
அதாவது மற்ற வங்கியில் இருக்கும் பணத்தை Google Pay, Phone Pe அல்லது மொபைல் பேங்கிங் மூலம் IPPB Account க்கு Transfer செய்யவும். அப்படி Transfer செய்தவுடன் பணமானது IPPB கணக்கிற்கு வந்துவிடும். பிறகு IPPB கணக்கில் இருந்து SSA கணக்கிற்கு Transfer செய்யலாம்.
ஒருவேளை ஏற்கனவே உங்களின் IPPB கணக்கில் பணம் இருந்தால், நேரிடையாக SSA கணக்கிற்கு Transfer செய்யலாம். எது எப்படியோ IPPB கணக்கில் பணம் இருக்க வேண்டும்.
இப்பொழுது பின்வரும் செயல்முறையை பின்பற்றி IPPB கணக்கில் இருந்து செல்வமகள் சேமிப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Step 1: முதலில் உங்களின் India Post Payment Bank (IPPB) செயலியை Open செய்யவும். பிறகு 4 இலக்க MPIN Number யை Enter செய்து Login செய்யவும்.
Step 2: தற்போது உங்களின் IPPB கணக்கில் இருக்கும் தொகையை காண்பீர்கள். இப்பொழுது Post Office Services என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 3: நீங்கள் காணும் பட்டியலில் Sukanya Samridhi Account என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இப்பொழுது உங்களின் பெண் குழந்தையின் SSA பாஸ்புக்கில் இருக்கும் Account Number மற்றும் Customer ID யை Enter செய்து Continue என்பதை அழுத்தவும்.
Step 5: இந்த பக்கத்தில் வாடிக்கையாளரின் பெயர், SSA கணக்கின் Status போன்ற தகவல்கள் இருக்கும். அதில் Deposit Amount என்ற இடத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை Type செய்யவும்.
பிறகு Pay என்பதை கிளிக் செய்க.
Step 6: Confirm என்ற பட்டனை அழுத்தவும்.
Step 7: இப்பொழுது உங்களின் மொபைல் நம்பருக்கு OTP Number வரும். அந்த OTP எண்ணை Enter செய்தவுடன் உங்களின் Transaction முழுமையடைந்துவிடும்.
இப்போது வெற்றிகரமாக பணத்தை செல்வமகள் சேமிப்பு கணக்கில் செலுத்திவிட்டீர்கள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான பணத்தை ஆன்லைன் மூலமாகவே டெபாசிட் செய்யலாம்.
முடிவுரை
இந்த பதிவின் மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கில் ஆன்லைன் மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கான செயல்முறையை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை போன்று பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும்போது அதற்க்கான அறிவிப்புகளை பெறுவதற்கு, கீழே உள்ள Bell பட்டனை கிளிக் செய்து Subscribe செய்துகொள்ளவும்.