Post Office Bank Account – Eligibility, Features & Interest Rate
Post Office Savings Account என்பது இந்தியா முழுவதும் அஞ்சலக அலுவலகம் சார்பில் வழங்கப்படும் சேமிப்பு கணக்கு திட்டமாகும். அஞ்சல் சேவையானது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்கள் எளிதல் அணுகும் வகையில் வளர்ந்துள்ளது.
வங்கிகளில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை போல், அஞ்சலகங்களின் மூலமாகவும் சேமிப்பு கணக்குகளை திறக்க முடியும். இந்த சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்புத்தொகைக்கு ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனிநபர் முதலீட்டாளர்கள் தங்களின் நிதிச் சொத்துக்களில், குறிப்பிட்ட பகுதியை முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான வட்டி விகிதத்தை பெற முடியும்.
Table of Contents
Eligibility for Post Office Savings Account
- 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் இந்த Post Office Saving Account -யை Open செய்யலாம்.
- அவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும்.
- மைனராக (18 வயதுக்கு குறைவாக) இருப்பவர்கள் இந்த கணக்கை திறக்க வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 10 வயதாவது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- ஒரு பாதுகாவலர்(Guardian) மைனரின் சார்பாக ஒரு கணக்கை துவக்க முடியும்.
- இரண்டு அல்லது மூன்று பேர் (Adult) சேர்ந்து Joint Account ஆகவும் கணக்கை திறக்கலாம்.
- தெளிவற்ற மனம் கொண்ட நபரும் அஞ்சலக சேமிப்பு கணக்கை திறக்கலாம்.
Features – Post Office Savings Account
- நீங்கள் எந்த நேரத்திலும் Saving Account -யை மூட முடியும்.
- குறைந்த பட்சம் 10 வயதை கொண்ட மைனர்களும் இந்த கணக்கை துவங்கலாம்.
- உங்களின் Post Office Saving Account -யை தொடர்ந்து Activate ஆக வைத்திருக்க, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது Deposit அல்லது Withdraw செய்ய வேண்டும்.
- பணத்தை பயன்படுத்தி மட்டுமே கணக்கை Open செய்ய முடியும்.
- Saving Account-யை திறக்கும்போது கட்டாயமாக Nomination யை சேர்க்க வேண்டும்.
- உங்களின் வட்டி வருமானத்திற்கு 10,000 வரை வரிவிலக்கு உண்டு.
- மைனர்கள் பெரும்பான்மை வயது அடைந்த பிறகு, கணக்கை அவர்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் Saving Account -யை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றலாம்.
- Single Account -யை Joint Account ஆகவும், நேர்மாறாகவும் Convert செய்யலாம்.
- CBS (Core Banking Solution) தபால் நிலையங்களில் Electronic முறையில் Deposit மற்றும் Withdraw செய்யலாம்.
- Post Office வங்கிக்கணக்குகளில் ATM மூலமாகவும் பரிவர்த்தனைகள்(Transaction) செய்யலாம்.
Benefits of Post Office Savings Account
அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் சில சிறப்பு நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- காசோலை வசதி (Cheque Facility) : தபால் சேமிப்பு கணக்குகளுக்கு காசோலை வசதியும் உள்ளது.
- ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களும் காசோலை வசதியை பெறலாம்.
- கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக (Minimum Balance) Rs.500 பராமரிக்க வேண்டும்.
- தபால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்கவில்லை என்றால், ஒவ்வொரு நிதியாண்டின் கடைசி வேலை நாளில் Rs.100 பராமரிப்பு கட்டணமாக கழிக்கப்படும். பராமரிப்பு கட்டணம் கழிக்கப்பட்ட பின்பு நிலுவை தொகை இல்லையெனில் கணக்கு தானாக மூடப்படும்.
- ATM / Debit Card : இதற்க்கு ATM Card வசதியும் கொடுக்கப்படுகிறது. தபால் கணக்குகளில் உள்ள பணத்தை ATM கார்டை பயன்படுத்தி எடுக்கலாம்.
- Net Banking மற்றும் Mobile Banking வசதி உள்ளது.
- IPPB (Indian Post Payment Bank) சேமிப்பு கணக்குடன் இணைக்கும் வசதியும் உள்ளது.
- 10 வயதிற்குட்பட்ட மைனர்களுக்கு அவர்களின் பெயரில் ஒரு கணக்கை திறக்க இயலும். ஆனால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அவர்கள் சார்பாக கணக்கை இயக்க உரிமை வழங்கப்படும். 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களே தங்களின் சொந்த கணக்கை இயக்க முடியும்.
- நீங்கள் உங்களின் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றினாலோ அல்லது தற்போது இருக்கும் தபால் நிலையத்தின் சேவைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, உங்கள் கணக்கை வேறு ஒரு தபால் நிலையத்திற்கு மாற்றலாம். ஒரு தபால் நிலையத்தில் ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
- கணக்கை Open செய்யும்போது நியமனதாரரை நியமிக்கும் வசதி உள்ளது. மேலும் நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நியமனதாரரை மாற்றலாம்.
Post Office Interest Rate
தபால் நிலையங்களில் நாம் முதலீடு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப வட்டி (Interest) வழங்கப்படும்.
இந்த வட்டி விகிதமானது மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதத்தை அவ்வப்போது மாற்றவும் செய்யப்படுகிறது.
தற்போது Post Office Saving Account -க்கு 4% வட்டி (interest) வழங்கப்படுகிறது. இது வங்கிகளில் வழங்கப்படுவதை விட 0.50% அதிகமாகும்.
தபால் நிலையங்களும் தற்போது மற்ற வங்கிகளில் வழங்கப்படும் ATM, Mobile Banking, Net Banking போன்ற வசதிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரையின் மூலம் Post Office சேமிப்பு கணக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதை பற்றி உங்களின் கருத்துகளை பதிவிடவும்