Post Office Monthly Income Scheme – மாத வருமான திட்டம்
தபால் அலுவலக மாத வருமான திட்டம் (POMIS – Post Office Monthly Income Scheme) என்பது இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படக்கூடிய சிறு சேமிப்பு திட்டமாகும். முதலீட்டாளர்களின் (Investors) வைப்பு தொகைக்கு (Deposit Amount) ஏற்ப மாதாந்திர அடிப்படையில் வட்டி தொகை செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு முதல் Deposit செய்யலாம்.
Table of Contents
தபால் நிலைய மாத வருமான திட்டத்தை யார் தொடங்கலாம்?
- POMIS கணக்கை தனிநபர் ஆகவோ (Individual) அல்லது Joint Account ஆகவோ Open செய்ய முடியும். Joint Account-ல் அதிகபட்சம் 3 பேர் வரை திறக்கலாம்.
- மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம்.
- 10 வயதிற்கு மேற்பட்ட மைனரின் சொந்த பெயரில் தொடங்கலாம்.
POMIS திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
- இத்திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகமாக முதலீடு செய்யும்போது Rs.1000 ரூபாயின் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
- ஒரு தனி நபர் கணக்கிற்கு அதிகபட்சமாக Rs.4,50,000 வரை முதலீடு செய்யலாம். அதுவே Joint Account ஆக இருந்தால் அதிகபட்சமாக Rs.9,00,000 வரை முதலீடு செய்யலாம்.
- Joint Account இல் உள்ள அனைத்து நபர்களுக்கும் முதலீட்டில் சம பங்கு இருக்கும்.
- ஒரு தனி நபர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறந்துக்கொள்ளலாம்.
- ஒரு தனிநபர் திறக்கும் அனைத்து POMIS கணக்குகளில் உள்ள மொத்த தொகையானது Rs.4,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது ஒரு தனி நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட MIS கணக்குகளை திறந்தாலும், அனைத்து கணக்குகளிலும் உள்ள தொகை Rs.4,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Post Office MIS Scheme Interest Rate
- மாத வருமான திட்டத்தை தொடங்கிய நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் வட்டி செலுத்தப்படும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் முதிர்வு காலம் வரை செலுத்தப்படும்.
- ஒவ்வொரு மாதத்திற்கான வட்டியானது அவரின் Post Office Savings Account இல் செலுத்தப்படும். பிறகு அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வட்டி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டியானது, வரி விதிப்பிற்கு உட்பட்டது.
2022-23 ஆம் நிதியாண்டில் நான்காம் காலாண்டு (Jan – Mar) முதல் POMIS திட்டத்தின் வட்டி விகிதம் 7.1% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய கால வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
காலம் | Post Office MIS வட்டி விகிதம் (ஆண்டுக்கு) |
2022 – 23 (Jan – Mar) | 7.1% |
2022 – 23 (July – Sep) | 6.6% |
01-04-2020 to 30-June-2022 | 6.6% |
2018 – 19 (April – June) | 7.3% |
2017 – 18 (Jan – March) | 7.3% |
2017 – 18 (Oct – Dec) | 7.5% |
2017 – 18 (July – Sep) | 7.5% |
2017 – 18 (April – June) | 7.6% |
மாத வருமான திட்டத்தில் உள்ள அம்சங்கள்
- கணக்கை திறக்கும்போது பணம் அல்லது காசோலையை பயன்படுத்தி Deposit செய்யலாம்.
- கணக்கை தனி ஒருவராக திறந்த பின்பு அதை Joint Account ஆகவும் மாற்றிக்கொள்ளலாம்.
- நியமனதாரரை (Nominee) நியமனம் செய்யும் வசதி உள்ளது. மேலும் கணக்கை திறந்த பின்னரும் நியமனதாரரை புதுப்பிக்கலாம்.
- மைனர் பெரும்பான்மை வயதை அடைந்தவுடன் தங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் 5 வருடங்கள் வரை முதலீடு வைத்திருக்க வேண்டும்.
- POMIS கணக்கை ஒரு Post Office இல் மற்றொரு Post Office க்கு மாற்றிக்கொள்ளலாம்.
- தபால் அலுவலக முதலீடுகள் (Post Office Monthly Income Scheme) அல்லது முதிர்வு தொகையில் எந்த ஒரு வரிச்சலுகையும் கிடைக்காது.
- 5 வருட முதிர்வு காலம் அடைந்த பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் (Withdraw) அல்லது மறுமுதலீடு (Reinvestment)செய்துகொள்ளலாம்.
கணக்கை முன்கூட்டியே மூடுதல் (Pre-mature closure)
தபால் நிலைய மாத வருமான திட்டத்தை முதிர்வு காலத்திற்கு முன்பே மூடுவதாக இருந்தால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூடலாம்.
- டெபாசிட் செய்த நாளில் இருந்து ஒரு வருடம் முடிவடைவதற்குள், டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியாது.
- மாத வருமான திட்ட கணக்கை தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகும், 3 வருடங்களுக்கு முன்பும் கணக்கு மூடப்பட்டால், அசல் தொகையில் இருந்து 2% கழிக்கப்படும். மீதமுள்ள தொகை கணக்குதாரருக்கு வழங்கப்படும்.
- கணக்கை தொடங்கிய 3 ஆண்டுகளுக்கு பிறகும், 5 ஆண்டுகளுக்கு முன்பும் கணக்கு மூடப்பட்டால், அசல் தொகையில் இருந்து 1% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
- போஸ்ட் ஆபிசில் Passbook உடன் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை நிரப்பி சமர்ப்பிப்பதன் மூலம் MIS கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
POMIS திட்டத்தின் முதிர்வு
- 5 வருடங்கள் நிறைவடைந்த பிறகு கணக்கு முதிர்வடையும்.
- போஸ்ட் ஆபிசில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து கணக்கை முடிக்கலாம்.
- கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன்பே இருந்துவிட்டால், கணக்கு மூடப்பட்டு நாமினிகளுக்கு தொகை திருப்பி அளிக்கப்படும்.
- ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் நாமினியை நியமிக்கவில்லை என்றால், சட்டபூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
Post Office Monthly Income Scheme Account-யை Open செய்ய தேவையான ஆவணங்கள்
- அடையாளச்சான்று (Identity Proof) : அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் போன்ற அடையாளச்சான்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.
- முகவரிச்சான்று (Address Proof) : அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச்சான்று அல்லது சமீபத்திய பயன்பாட்டு பில்கள்
- புகைப்படங்கள் (Photographs) : பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள்
இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தபால் நிலைய மாத வருமான திட்டத்தை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
இதையும் படியுங்கள்: |