Post Office Recurring Deposit (RD) Scheme, Interest Rate 2023
தபால் தொடர் வைப்பு நிதி (Post Office Recurring Deposit – RD) என்பது ஒவ்வொரு மாதமும் Post Office-ல் செலுத்தப்படும் வைப்பு தொகையாகும். இத்திட்டமானது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற ஒரு சேமிப்பு திட்டம் (Saving Scheme) ஆகும். மாத சம்பளதாரர்கள் தன்னுடைய சம்பளத்தின் சிறு பகுதியை இந்த RD திட்டத்தில் செலுத்துவதால் ஒரு லாபகரமான முதிர்வு தொகையை பெறமுடியும்.
வங்கிகளை ஒப்பிடும்போது தபால் அலுவலகங்களில் அனைத்து மக்களும் எளிமையாக முதலீடு செய்யலாம். ஏனெனில் தபால் அலுவலகங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருப்பதால் சாதாரண மக்களும் சேமிப்பு திட்டங்களில் பங்கு பெறலாம்.
தபால் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சாதாரண மக்களும் Post Office சேமிப்பு திட்டங்களில் நம்பிக்கையோடு முதலீடு செய்கின்றனர்.
நீங்கள் RD திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? கவலையை விடுங்கள். தபால் நிலையத்தில் உள்ள தொடர் வைப்பு நிதி (RD) திட்டம், அதன் வட்டி விகிதம், முதலீடு காலம் போன்ற தகவல்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Post Office Recurring Deposit Scheme
Post Office-களில் வங்கிகளில் இருப்பதை போன்று பலவிதமான சேமிப்பு திட்டங்கள் (Saving Scheme) உள்ளன. அதாவது தபால் அலுவலகங்களில் Savings Account, Recurring Deposit (RD), Fixed Deposit (FD) மற்றும் Public Provident Fund (PPF) இது போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது.
இதில் RD திட்டம் என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தபால் நிலையத்தில் செலுத்தி வரவேண்டும். இவ்வாறு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு முதிர்வு தொகையை திரும்பபெறலாம்.
இந்த திட்டத்தில் முதலீடானது Rs.100 ரூபாயில் இருந்து தொடங்குவதால், சாதாரண மக்களும் முதலீடு செய்ய முடியும்.
Post Office RD Interest Rates
Post office திட்டங்களில் அவ்வப்போது வட்டி விகிதங்கள் (Interest Rates) மாற்றியமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி தொகையானது கணக்கில் செலுத்தப்படும். இது முதிர்வு காலத்தின் போது ஒரு தொகை பெருக்கப்படுவதை உறுதி செய்கிறது.
2016 ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் Post Office RD-க்கான வட்டி விகிதங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
Financial year | April – June | July – Septem | October – Dece | January – March |
2022 – 2023 | 5.80% | 5.80% | 5.80% | 5.80% |
2021 – 2022 | 5.80% | 5.80% | 5.80% | 5.80% |
2020 – 2021 | 5.80% | 5.80% | 5.80% | 5.80% |
2019 – 2020 | 7.30% | 7.20% | ||
2018 – 2019 | 6.90% | 6.90% | 7.30% | 7.30% |
2017 – 2018 | 7.20% | 7.10% | 7.10% | 6.90% |
2016 – 2017 | 7.40% | 7.40% | 7.30% | 7.30% |
Post Office RD Calculator – Excel
Deposit தொகையின் அளவு
தொடர்ச்சியான வைப்பு தொகையானது தனிநபர்களின் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வங்கிகளில் உள்ள வைப்பு தொகைகளை போல் இல்லாமல் மிகவும் குறைந்தபட்ச தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய , நடுத்தர குடும்பங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
- RD-யில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு 100 ரூபாயில் இருந்து Deposit செய்யலாம்.
- இதில் அதிகபட்ச தொகை என்று எதுவும் இல்லை
RD திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- RD கணக்கை திறக்கும்போது பணம் அல்லது காசோலையை கொண்டு திறக்கலாம்.
- நியமனதாரரை (Nomination) நியமிக்கும் வசதியும் இதில் உள்ளது. கணக்கை திறந்த பின்னரும் நியமனதாரரை நியமிக்கலாம்.
- நீங்கள் வேறு இடத்திற்கு குடிபெயரும் போது உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு கணக்கை Transfer செய்துக்கொள்ளலாம்.
- எந்த ஒரு தபால் நிலையத்திலும் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறந்துக்கொள்ளலாம்.
- இரண்டு நபர்கள் (Adult) சேர்ந்து Joint Account ஆகவும் Open செய்யலாம்.
- Single Account-யை Joint Account ஆகவும் Convert செய்ய முடியும்.
- சிறார்கள் பெயரிலும் கணக்கை திறக்கலாம். மேலும் 10 வயதிற்கு மேல் உள்ள சிறார்கள் தாங்களே கணக்கை திறந்து அதை நிர்வகிக்க முடியும்.
தாமதமான RD வைப்பு – அபராதம் (Penalties)
ஒரு மாதம் நீங்கள் பணம் கட்ட தவறினால் அடுத்தமுறை கட்டும்போது அதற்கான அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டும். அபராத தொகையானது ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 0.05 அதாவது 5 பைசா வீதம் வசூலிக்கப்படும்.
அதேபோல் தொடர்ந்து 4 மாதங்கள் பணம் கட்டவில்லை என்றால் RD கணக்கானது Discontinue செய்யப்படும். மேலும் 2 மாதங்களுக்குள்ளாக அந்த கணக்கை புதுப்பிக்கவில்லை என்றால் கணக்கை தொடர வாய்ப்பில்லை.
முன்கூட்டியே செலுத்துதல் | Advance Deposit
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன்கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி நன்மையை பெறலாம்.
- 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன்கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும், 1 ரூபாயை தள்ளுபடியாக பெறலாம்.
- 12 மாதங்கள் மற்றும் அதற்கும் அதிகமான வைப்பு தொகை தவணைகளை முன்கூட்டியே செலுத்தும் போது ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாயை தள்ளுபடி செய்யப்படும்.
- 12 வைப்புகளுக்கு பிறகு Deposit செய்யப்படும் ஒவ்வொரு 10-க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக பெறலாம்.
- இந்த முன்கூட்டி வைப்பு தொகையானது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
Loan Facility
- 12 தவணைகள் டெபாசிட் செய்யப்பட்டு, 1 வருடத்திற்கு பிறகு கணக்கில் உள்ள தொகையில் 50% கடன் வசதியை பெறலாம்.
- கடனை ஒரே தொகையாகவோ அல்லது மாத தவணைகளாகவோ திருப்பி செலுத்தலாம்.
- RD கணக்கின் மூலம் பெறப்பட்ட கடன் தொகைக்கான வட்டி விகிதம் 2% ஆகும்.
- கடனை பெற்ற நாளில் இருந்து, அதை திருப்பி செலுத்தும் நாள் வரை வட்டி கணக்கிடப்படும்.
- ஒருவேளை நீங்கள் பெற்ற கடனை முதிர்வு காலம் வரை திருப்பி செலுத்தவில்லை என்றால், RD முதிர்வு தொகையில் இருந்து கடன் மற்றும் வட்டி கழிக்கப்படும்.
முதிர்வு காலத்துக்கு முன்பே Withdraw செய்தல்
Post Office Recurring Deposit-ல் நிபந்தனையுடன் முதிர்வு காலத்துக்கு முன்பே குறிப்பிட்ட தொகையை Withdraw செய்ய அனுமதிக்கிறது.
- RD கணக்கை தொடங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த கணக்கை முன்கூட்டியே மூட அனுமதிக்கிறது.
- முதிச்சியடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே RD கணக்கை மூடினால், RD கணக்கிற்கு குறிப்பிட்டுள்ள வட்டி விகிதம் வழங்கப்படாது. அதற்க்கு பதிலாக சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்படும்.
- ஒருவேளை நீங்கள் Advance Deposit யை செய்திருந்தால், அதற்கான காலம் முடியும் வரை கணக்கை மூட இயலாது.
Recurring Deposit Tenure (காலம்)
Recurring Deposit-ன் குறைந்தபட்ச முதலீடு காலம் 5 வருடங்கள் ஆகும். 5 வருடங்களுக்கு பிறகு மேலும் திட்டத்தில் தொடர விரும்பினால் தொடரலாம்.
முடிவுரை
இன்று நீங்கள் அஞ்சல் துறையில் உள்ள தொடர் வைப்பு நிதி திட்டம், வட்டி விகிதம், கடன் வசதி, முதிர்வு காலம் போன்றவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
இதையும் படியுங்கள்: |