Post Office Saving

Post Office Senior Citizen Saving Scheme (SCSS): சேமிப்பு திட்டம்

Post Office Senior Citizen Saving Scheme (SCSS) என்பது முதியோரின் பொருளாதார பாதுகாப்பிற்க்காக கொண்டு வரப்பட்ட அரசாங்க ஆதரவு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டமானது இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறந்த திட்டமாக இதனை கருதலாம். இத்திட்டம் உயர்ந்த பாதுகாப்பு மற்றும் வரிசலுகைகளை (Tax Benefits) அளிக்கிறது. இந்த SCSS சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் ஒய்வு பெற்ற பின்னரும் வழக்கமான வருமானத்தை உறுதி செய்கிறது. 

மூத்த குடிமக்கள் திட்டத்தின் சுருக்கம்:

சேமிப்பு திட்டத்தின் பெயர் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்  (Senior Citizen Saving Scheme)
யார் முதலீடு செய்யலாம்  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 
திட்டத்தை யார் செயல்படுத்துவது மத்திய அரசு 
தற்போதையை வட்டி விகிதம் 8%
குறைந்தபட்ச முதலீடு Rs.1000
அதிகபட்ச முதலீடு Rs. 15 லட்சம் 
முதிர்வு காலம் 5 ஆண்டுகள் 
வரிவிலக்கு உண்டு 
தபால் நிலைய இணையதளம் https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx

Senior Citizen Saving Scheme Interest Rate

01-01-2023 to 31-03-2023 காலாண்டிற்கான Senior Citizen Saving Scheme-ன் வட்டிவிகிதம் (Interest Rate) ஆண்டுக்கு 8% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதங்கள் மத்திய நிதி அமைச்சகத்தால் மாற்றம் செய்யப்படலாம்.

SCSS Scheme-ல் உள்ள முதலீடு தொகைக்கான (Investment Amount) கூட்டு வட்டியை (Compounded), ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் செலுத்தப்படும். அதாவது வட்டியை March 31,June 30, September 30 மற்றும் December 31 ஆகிய தேதிகளில் செலுத்தப்படும்.

Read  How to Pay Money in Sukanya Samriddhi Account (SSA) Online

கடந்த காலாண்டுகளின் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Interest Rate of Senior Citizen Savings Scheme
Financial Year

April-June (Interest Rate %)

July – Sep (Interest Rate %)

Oct – Dec (Interest Rate %)

Jan – Mar (Interest Rate %)

2022 – 20237.47.47.6 
2021 – 20227.47.47.47.4
2020 – 20217.47.47.47.4
2019 – 20208.78.68.68.6
2018 – 20198.38.38.78.7
2017 – 20188.48.38.38.3

SCSS Scheme Investment Limit

Senior Citizen Saving Scheme (SCSS) திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் குறைந்தபட்சம் Rs.1000 கொண்டு முதலீடு செய்யலாம். இதற்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டுமென்றால் Rs.1000-த்தின் மடங்குகளில் Investment செய்யலாம்.

ஒரு தனிநபர் அதிகபட்சமாக Rs.15 Lakh  வரை Investment செய்யலாம். ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறந்துகொள்ளலாம். ஆனால் அந்த கணக்குகளின் மொத்த தொகை Rs.15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

SCSS திட்டத்தில் ரொக்கமாகவும் Deposit செய்யலாம். Rs.1 Lakh வரை மட்டுமே ரொக்கமாக Deposit  செய்ய முடியும். Rs.1 Lakh அதிகமான தொகையை Deposit செய்தால் காசோலை (Cheque) அல்லது கோரிக்கை வரைவு (Demand Draft) மூலமாக டெபாசிட் செய்வது கட்டாயமாகும்.

Premature Withdrawal of SCSS Deposit Amount (முன்கூட்டியே திரும்பப்பெறுதல்)

Senior Citizen Saving Scheme திட்டத்தில் Deposit Amount-யை முன்கூட்டியே திரும்பப்பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், முதிர்வு காலத்திற்கு முன்கூட்டியே திரும்ப பெற்றால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். 

SCSS திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப்பெறுவதற்கான அபராதங்கள் பின்வருமாறு:

  • 1 வருடத்திற்கு முன்னதாகவே கணக்கு மூடப்பட்டால், அதற்க்கு வட்டி எதுவும் செலுத்தப்படாது. ஒருவேளை வட்டி செலுத்தி இருந்தால் அது திரும்ப பெறப்படும். 
  • கணக்கை திறந்த தேதியிலிருந்து 1 வருடத்திற்கு பிறகு  2 வருடங்களுக்கு முன்பு, Deposit Amount-யை திரும்பப்பெற்றால் டெபாசிட் செய்த பணத்தில் 1.5%  அபராதமாக கழிக்கப்படுகிறது.
  • கணக்கு திறந்த தேதியிலிருந்து 2 வருடங்களுக்கு பிறகு 5 வருடங்களுக்கு முன்பே திரும்ப பெறப்பட்டால் 1% வைப்புத்தொகையை அபராதமாக கழிக்கப்படும்.
  • ஒருவேளை, கணக்கில் Deposit செய்தவர் இறந்துவிட்டால், கணக்கை மூடுவதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை.
Read  Post Office Bank Account - Eligibility, Features & Interest Rate

SCSS கணக்கை நீட்டிப்பு செய்தல் 

  • SCSS திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 
  • 5 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், Deposit செய்பவர் விருப்பப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ள முடியும். அதற்க்கு Form B நிரப்பி கொடுக்க வேண்டும்.
  • ஒரு முறை மட்டுமே நீட்டிப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • நீட்டிக்கப்பட்ட கணக்கை ஒரு ஆண்டு நீடிப்புக்கு பிறகு எந்த அபராதமும் இல்லாமல் Close செய்யலாம்.

Eligibility for Senior Citizens Saving Schemes

மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் சேர பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  • 60 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்ட இந்திய குடிமகன் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • இருந்தாலும், 55 வயது அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த திட்டத்தில் இணையலாம். ஆனால் அந்த நபர் Superannuation அல்லது VRS பிரிவின் கீழ் ஒய்வு பெற்றவராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கை திறந்திட வேண்டும்.
  • மேலும், அந்த நபர் முதலீடு செய்யும் தொகையானது, ஓய்வூதியத்தில் பெறவேண்டிய தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. 
  • இந்திய குடியுரிமை பெறாத இந்தியர்கள் (NRI) மற்றும் இந்திய வம்சாவளியினர் (PIO) போன்றவர்கள், இந்த SCSS திட்ட கணக்கை திறக்க முடியாது.
  • முதலீடு செய்பவர்கள் Joint Account ஆகவும் திறக்கலாம். ஆனால் துணைவருடன் (கணவன் /மனைவி) மட்டுமே Joint Account-யை திறக்க முடியும்.
  • Joint Account இல் செலுத்தப்படும் தொகைக்கு முதல் கணக்கு வைத்திருப்பவர் (First Account Holder) மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

Benefits of SCSS Account

  • இது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
  • SCSS கணக்கை திறப்பதற்கான செயல்முறை எளிமையானது. இது இந்தியாவில் உள்ள அனைத்து Post Office மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்கலாம்.
  • Fixed Deposit கணக்குகளுடன் ஒப்பிடும்போது, இதன் வட்டி விகிதம் அதிகமாகும்.
  • இந்த திட்டத்தில் Nominee Details-யை Add செய்யும் வசதியும் உள்ளது.
  • SCSS கணக்கை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • வருமான வரிச்சட்டம் பிரிவு 80C கீழ் வரிவிலக்கை பெறலாம்.
Read  போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

How to Open SCSS Account in Post Office 

  • உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் SCSS கணக்கினை Open செய்யலாம்.
  • தபால் நிலையத்தில் SCSS கணக்கை திறக்க Form-A  முறையாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் வயதுக்கான சான்று, முகவரி சான்று, அடையாளச் சான்று மற்றும் வைப்புத்தொகையின் காசோலை போன்ற ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • Passport அளவுள்ள 2 புகைப்படங்களை கொண்டு செல்ல வேண்டும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) வழங்கும் வங்கிகள்

SCSS சேமிப்பு திட்டத்தை தபால் நிலையங்கள் மட்டும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளின் மூலமாகவும் பெறலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Allahabad Bank8. Central Bank of India15. Syndicate Bank
2. Andhra bank9. Dena Ban16. UCO Bank
3. Bank of Maharashtra10. IDBI Bank17. Union Bank of India
4. Bank of Baroda11. Indian Bank18. Vijaya Bank
5. Bank of India12. Indian Overseas Bank19. ICICI Bank
6. Corporation Bank13. Punjab National Bank 
7. Canara Bank14. State Bank of India 

SCSS திட்டத்தை வழங்கும் தனியார் வங்கி ICICI Bank ஆகும். மேலே குறிப்பிட்ட பட்டியலில் இல்லாத சில வங்கிகளும் இத்திட்டத்தை வழங்கக்கூடும்.

இதையும் படியுங்கள்: 

Frequently Asked Questions (FAQ)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?

60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகன் முதலீடு செய்யலாம்.

SCSS கணக்கை எங்கு தொடங்க முடியும்?

தபால் நிலையம் மற்றும் அனுமதிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கலாம்.

SCSS முதலீடு திட்டத்தின் முதிர்வு காலம் என்ன?

திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole