How to Register Dakpay UPI App of India Post Payment Bank
India Post Payment Bank ஆனது சில நாட்களுக்கு முன்பு DakPay என்ற UPI App யை அறிமுகம் செய்தது. அனைவரும் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டாக் பே UPI செயலியை பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்க்கு முதலில் Register செய்ய வேண்டும்.
நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதியவராக இருக்கலாம். அல்லது ஏற்கனவே இணைய பரிவர்த்தனைகளை மேற்கொள்பவராக இருக்கலாம்.
அனைவருக்கும் புரியும் படி மற்றும் அதற்கான விளக்கப்படங்களுடன், இந்த செயலியை எப்படி Register செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறையை இந்த கட்டுரையில் விளக்கப்போகிறேன்.
Table of Contents
What is Dakpay UPI App
நீங்கள் ஏற்கனவே Google Pay, Phone Pay, Amazon pay போன்ற செயலிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவை Unified Payment Interface (UPI) இன் அடிப்படையில் செயல்படும் பண பரிமாற்ற செயலிகளாகும். இவற்றின் மூலம் எளிதாக Money transfer செய்ய முடியும்.
வங்கிக்கணக்குகள், இந்த செயலிகளில் இணைக்கப்பட்ட பிறகு பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இந்த மாதிரியான செயலிகளை சாதாரண மக்களால் கூட எளிதாக பயன்படுத்த முடியும்.
அந்த வரிசையில் தற்போது Post Office ம் இணைந்துள்ளது. இதற்காக தான் IPPB ஆனது Dakpay என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மற்ற UPI செயலிகளில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளை போலவே டாக் பே செயலி மூலமும் செய்ய முடியும்.
How to Register Dakpay App of IPPB
நீங்கள் இந்த செயலியை Register செய்வதற்கு முன்பு சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
- உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணானது உங்களின் மொபைலில் இருக்க வேண்டும்.
- உங்களின் மொபைல் எண்ணில் குறைந்தபட்சம் Rs 1.50 ரூபாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் SMS Verification இன் போது அதற்கான கட்டணத்தை பிடிப்பார்கள்.
- இந்த செயலியை மொபைல் டேட்டா மூலமாக தான் பதிவு செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் Wifi பயன்படுத்துபவராக இருந்தால், அதை OFF செய்ய வேண்டும்.
பின்வரும் செயல்முறையை பின்பற்றி நீங்கள் பதிவு செய்யலாம்.
Step 1: முதலில் Play store அல்லது Apple இல் இருந்து Dakpay UPI by IPPB என்ற செயலியை Install செய்யவும்.
Step 2: அந்த செயலியை திறந்து அடுத்த பக்கத்திற்கு செல்வதற்கான பட்டனை அழுத்தவும்.
Step 3: இப்பொழுது தோன்றும் Popup திரையில் Allow என்பதை கிளிக் செய்க.
Step 4: தற்போது உங்களின் மொபைல் எண்ணானது தானாகவே Verify ஆகும்.
Step 5: Verify ஆகிய பின்பு Profile Creation பக்கம் திறக்கும். அதில் உங்களின் Name, Email Id, Date of Birth மற்றும் Passcode ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
இதில் Passcode ஆனது இந்த App யை Login செய்வதற்கு பயன்படும்.
கடைசியில் உள்ள Check Box யை டிக் செய்து Register என்பதை அழுத்த வேண்டும்.
Step 6: உங்களின் Primary UPI ID வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இப்பொழுது வங்கிக்கணக்கை Link செய்ய Continue என்பதை கிளிக் செய்க.
Step 7: நீங்கள் எந்த வங்கிக்கணக்கை இணைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும்.
Step 8: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கு Dakpay UPI செயலியுடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும்.
நீங்கள் ஏற்கனவே UPI PIN நம்பரை உருவாகியிருக்கி இருந்தால்:
Step 9: நீங்கள் இதற்க்கு முன்பு மற்ற UPI செயலிகளை பயன்படுத்தி இருந்தால், நிச்சயமாக UPI PIN நம்பரை உருவாக்கியிருப்பீர்கள்.
அப்படி உருவாக்கி இருந்தால் UPI PIN Exists என்ற செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.
நீங்கள் ஏற்கனவே UPI PIN நம்பரை உருவாக்கவில்லை என்றால்:
Step 10: நீங்கள் இதற்க்கு முன்பு UPI எண்ணை உருவாக்கவில்லை என்றால் UPI PIN does not Exist என்று தோன்றுவதை காண்பீர்கள். புதிய PIN யை உருவாக்க அதன் மீது கிளிக் செய்யவும்.
Step 11: உங்களின் UPI ID யை டிக் செய்து Link என்பதை அழுத்தவும்.
Step 12: Set Now என்பதை கிளிக் செய்க.
Step 13: உங்களின் ATM Card இன் தகவல்களை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 14: இப்பொழுது தங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP நம்பர், உங்களின் ATM PIN மற்றும் புதிய UPI PIN போன்றவற்றை உள்ளிட்டு கிளிக் செய்தால் புதிய பின் நம்பர் Set செய்யப்படும்.
இப்பொழுது டாக் பே செயலி பயன்படுத்துவதற்கு தயாராகிவிட்டது. நீங்கள் உங்களின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம்.
நீங்கள் இனிமேல் விற்பனைக்கடை, பெட்ரோல் பங்க், பயனாளர்கள் என அனைவருக்கும் இதன் மூலம் பணத்தை Transfer செய்யலாம். இது 24 மணி நேரமும் மற்றும் வாரத்தின் 7 நாட்களிலும் செயல்படுவதால், நீங்கள் வங்கிக்கு செல்லும் தேவை வெகுவாக குறைந்துவிடும். இதன் மூலம் பெருமளவு நேரத்தை சேமிக்கலாம்.