How to Transfer Money from SBI Account to IPPB Account Online
இந்திய தபால் துறையானது, சமீபத்தில் Indian Post Payment Bank என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் தபால் சேமிப்பு கணக்கை Online மூலம் செயல்படுத்த முடியும். மேலும் தபால் துறையின் IPPB செயலி மூலம் Money Transfer, Mobile Recharge, DTH Recharge மற்றும் QR Code Payment போன்ற பரிவர்த்தனைகளை வீட்டில் இருந்தவாறே செய்யலாம்.
IPPB என்ற Online பண பரிமாற்ற சேவை உங்களின் நேரத்தை பெருமளவு சேமிக்கிறது. நீங்கள் ஒரு நபருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் அதற்காக தபால் நிலையத்தில் காசோலையை நிரப்பி எடுக்க வேண்டிய தேவை இல்லை. அப்படியே ஆன்லைன் மூலமாக Transfer செய்துவிடலாம்.
பொதுவாக நீங்கள் Net Banking அல்லது Mobile Banking மூலம் ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பணத்தை Transfer செய்திருப்பீர்கள். ஆனால் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து Indian Post Payment Bank கணக்கிற்கு Transfer செய்வது உங்களுக்கு புதிதாக இருக்கலாம்.
இந்த கட்டுரையில் SBI Bank Account இல் இருந்து, IPPB கணக்கிற்கு எவ்வாறு பணத்தை Transfer செய்வது என்பதை பற்றிய விளக்கத்தை உரிய புகைப்படங்களுடன் விளக்குகிறேன்.
How to Transfer Money SBI to IPPB Account Online
உங்களின் SBI Saving Account இல் இருந்து IPPB கணக்கிற்கு Money Transfer செய்ய இரண்டு வழிகளை பயன்படுத்தலாம்.
அவை:
- Mobile Banking
- Net Banking
மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளில் Mobile Banking சேவையை பயன்படுத்தி எப்படி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று தான் விளக்கப்போகிறேன். ஏனெனில் Net Banking யை விட மொபைல் பேங்கிங் ஆனது, பயன்படுத்துவதற்கு எளிதானது ஆகும்.
நீங்கள் நிச்சயமாக SBI வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். எனவே அதை பயன்படுத்தி பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறைகளை காணலாம்.
Step 1: உங்களின் SBI Mobile Banking செயலியை Open செய்யவும்.
Step 2: Fund Transfer என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: Quick Transfer என்பதை தேர்வு செய்க.
Step 4: Send Money Using Account Details என்ற Option யை கிளிக் செய்க.
Step 5: இதில் உங்களின் Name, IPPB Account Number மற்றும் IPPB IFSC Code போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
IFSC Code என்ற இடத்தில் தற்போதைக்கு IPOS0000001 என்று Type செய்யவும்.
Step 6: நீங்கள் Enter செய்த தகவல்களை சரிபார்த்தபிறகு Confirm என்பதை அழுத்தவும்.
Step 7: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 8: தற்போது உங்களின் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது என்ற செய்தி தோன்றுவதை காணலாம்.
பரிவர்த்தனை முடிந்த பிறகு உங்களின் IPPB செயலியை Open செய்து பார்க்கும்போது, நீங்கள் அனுப்பிய பணம் இதில் வந்திருப்பதை காண்பீர்கள்.
நீங்கள் மற்ற வங்கி செயலிகளை பயன்படுத்துவது போன்று இந்த செயலியையும் பயன்படுத்தலாம்.