How to Change Address in Ration Card Online in Tamil

நீங்கள் உங்களின் Ration Card இல் Address Change செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். நீங்கள் முகவரியை மாற்ற எங்கேயும் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்ற முடியும். அதற்க்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, ஆன்லைன் மூலம் எப்படி முகவரி மாற்றம் செய்வது போன்றவை குறித்த முழு தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

இந்த கட்டுரையை நீங்கள் முழுமையாக படித்து முடித்த பிறகு, நீங்களே ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் அளவுக்கு தெளிவை பெற்றிருப்பீர்கள். சரி வாருங்கள் ஆரம்பிக்கலாம்.

TNPDS Ration Card Correction 

இதற்க்கு முன்பு ரேஷன் அட்டையில் ஒரு மாற்றம் செய்ய வேண்டுமென்றால், போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. தற்போது நீங்கள் Ration Card இல் எதை மாற்ற வேண்டும் என்றாலும் அதை ஆன்லைன் மூலமாகவே மாற்றலாம். 

Read  TNPDS Smart Card Download Online Tamil: Step by Step Guide

தற்போது Ration Card இல் Mobile Number Change செய்வது மற்றும் Name Correction செய்வது ஆகிய இரண்டை தவிர மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெற முடியும்.  இவ்வாறு திருத்தம் செய்ய உங்களுக்கு அருகில் இருக்கும் இ சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது நீங்களே இணையம் வழியே விண்ணப்பிக்கலாம். அந்த வரிசையில் இந்த பதிவில் ரேஷன் அட்டையில் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வது என்று பார்க்கலாம்.

Required Documents for Address Change in Ration Card 

நீங்கள் Ration Card இல் Address Change செய்ய விண்ணப்பிக்கும் முன்பு கீழ்காணும் ஏதாவது ஒரு ஆவணத்தை Scan செய்து Upload செய்ய தயாராக வைத்திருக்க வேண்டும். Scan செய்த ஆவணத்தின் அளவு 1MB க்குள் இருக்க வேண்டும். மேலும் ஆவணம் JPEG, PNG, GIF மற்றும் PDF ஆகிய வடிவங்களில் இருக்கலாம்.

முகவரி மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஆதார் அட்டை (Aadhaar Card)
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)
  • எரிவாயு நுகர்வோர் அட்டை (Gas Book)
  • மின்சார ரசீது (EB Bill)
  • வங்கிக்கணக்கு புத்தகம் (Bank Passbook)
  • பாஸ்போர்ட் (Passport)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  •  பான் அட்டை (Pan Card)
Read  Ration Card Types in Tamil: குடும்ப அட்டைகளின் வகைகள்

மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை முகவரி மாற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

How to Change Address in Ration Card Online

முகவரி மாற்றம் செய்வதற்கான ஆவணத்தை Scan செய்த பிறகு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி முகவரி மாற்றம் செய்யலாம். 

Step 1: முதலில் தமிழ்நாடு குடும்ப அட்டை இணையதளமான https://www.tnpds.gov.in/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

Step 2: அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதற்கு கீழ் உள்ள முகவரி மாற்றம் செய்ய என்பதை கிளிக் செய்யவும்.

Change Address in Ration Card

Step 3: உங்களின் Ration Card இல் பதிவு செய்யப்பட்டுள்ள Mobile Number யை Enter செய்து, அதற்க்கு கீழே உள்ள கேப்ட்சா குறியீடை Type செய்யவும். பிறகு பதிவு செய் என்பதை அழுத்தவும்.

Login TNPDS Ration Card Online

Step 4: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு பதிவு செய்ய என்பதை அழுத்தவும்.

PDS-PORTAL-LOGIN

Step 5: தற்போது உங்களின் குடும்ப அட்டை திறக்கும். அதில் ஏற்கனவே இருக்கும் முகவரி ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும்.

Read  TNPDS Mobile Number Change - Smart Ration Card

Address Change Option - Smart Ration Card

Step 6: புதிய முகவரி விவரங்கள் என்ற இடத்தில் உங்களின் புதிய முகவரியை Enter செய்யவும். அதாவது, வீட்டு எண், தெரு பெயர், கிராமம், தாலுக்கா, மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளிடவும். முதலில் ஆங்கிலத்தில் உள்ளிட்ட பிறகு, தமிழில் உள்ளிட வேண்டும்.

Enter New Address in Ration Card

Step 7: New Address யை Type செய்த பிறகு ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்பதை கிளிக் செய்து, நீங்கள் Upload செய்ய விரும்பும் ஆவணத்தை தேர்வு செய்யவும்.

பிறகு Choose File என்பதை கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே Scan செய்து வைத்துள்ள ஆவணத்தை பதிவேற்றவும். பிறகு பதிவேற்று என்பதை அழுத்தவும். 

Upload Document for Address Change in Ration Card

Step 8: கடைசியாக உள்ள உறுதிப்படுத்துதல் பெட்டியை டிக் செய்து பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக Address Change க்கு விண்ணப்பித்துவிட்டீர்கள். 

Submit Address Change Application in Ration Card

இப்பொழுது உங்களுக்கு ஒரு Reference Number வரும் அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் நிலையை (Status) அறியலாம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest