Ration Card

Ration Card Types in Tamil: குடும்ப அட்டைகளின் வகைகள்

Ration Card Types in Tamil: மக்கள் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு என்று சொல்லப்படும் குடும்ப அட்டை முக்கியமாகும். அந்த அட்டை இல்லாமல் உணவு பொருட்களை பெற முடியாது. பொதுவாக தமிழ்நாட்டில் பல்வேறு வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அந்த குடும்ப அட்டைகளின் வகைகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

What is Ration Card | குடும்ப அட்டை என்றால் என்ன?

ரேஷன் கார்டு என்பது மாநில அரசால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் இருந்து, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு குடும்பங்களுக்கு உரிமையளிக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். ஒரு குடும்பத்தின் நிதி நிலை மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகளை வழங்குகிறது.

ரேஷன் கார்டு ஆனது தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் (TNPDS) கீழ் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால்  வழங்கப்படுகிறது. இந்த துறை புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், ஏற்கனவே உள்ள அட்டையில் திருத்தங்களை செய்தல் மற்றும் அட்டையின் வகையை மாற்றுதல் போன்ற பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்குகிறது. 

Read  How to Change Address in Ration Card Online in Tamil

உங்களின் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய How to Change Address in Ration Card Online in Tamil என்ற கட்டுரையை படிக்கவும்.

Ration Card Types in Tamil | குடும்ப அட்டையின் வகைகள்

தமிழ்நாட்டில் 5 வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த ரேஷன் கார்டுகள் அனைத்தும் குடும்பங்களின் வருவாயை பொறுத்து மாறுபடுகின்றன. தற்போது வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளன. இருப்பினும் அதில் உள்ள குறியீடுகளை வைத்து அது எந்த வகையான ரேஷன் கார்டு என்று தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் வழங்கும் 5 வகையான ரேஷன் கார்டுகள்:

S.No Types of Ration Card Full form in English Full Form in Tamil  
1PHH Priority Householdமுன்னுரிமை குடும்ப அட்டை 
2PHH – AAY Priority Household – Antyodaya Anna Yojanaமுன்னுரிமை குடும்ப அட்டை – அந்தியோதயா அன்ன யோஜனா
3NPHH Non-Priority Householdமுன்னுரிமையற்ற குடும்ப அட்டை
4NPHH – S Non-Priority Household – Sugar முன்னுரிமையற்ற குடும்ப அட்டை – சர்க்கரை அட்டை 
5NPHH – NC Non-Priority Household – No Commoditiesமுன்னுரிமையற்ற குடும்ப அட்டை – பொருட்களில்லா அட்டை 

மேற்கண்ட தகவல்கள் https://tnpds.gov.in/pages/staticPages/family-cards.xhtml என்ற பொது விநியோக திட்ட இணையதளத்திலிருந்து  பெறப்பட்டது.

1. PHH Ration Card 

PHH-Rice-Ration-Card

  • PHH Ration Card Meaning Tamil: PHH என்பதன் பொருள் Priority Household ஆகும்.
  • PHH என்ற குறியீடு உள்ள அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
  • 31.07.2019 தேதியின் படி PHH குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 78,18,470 ஆகும்.
Read  TNPDS Mobile Number Change - Smart Ration Card

2. PHH – AAY Ration Card 

PHH-AAY-Ration-Card

  • PHH – AAY Ration Card Meaning Tamil: PHH – AAY என்பதன் பொருள் Priority Household – Antyodaya Anna Yojana ஆகும்.
  • ஸ்மார்ட் கார்டில் PHH – AAY என்ற குறியீடு உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையில் 35 கிலோ அரிசி உட்பட மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
  • வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இந்த வகையான அட்டை வழங்கப்படுகிறது.
  • 31.07.2019 தேதியின் படி அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 18,59,283 ஆகும்.

3. NPHH Ration Card 

NPHH-Ration-Card

  • NPHH Ration Card Meaning Tamil: NPHH என்பதன் பொருள் Non Priority Household ஆகும்.
  • NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அட்டைகளில் 93,34,945 குடும்ப அட்டைகள் இந்த வகையை சேர்ந்ததாகும்.

4. NPHH – S Ration Card 

NPHH-S-Smart-Ration-Card

  • NPHH – S Ration Card Meaning Tamil: NPHH -S என்பதன் பொருள் Non Priority Household – Sugar ஆகும்.
  • NPHH – S வகை குறியீடு கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
  • சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 10,16,733 ஆக உள்ளது.
Read  TNPDS Smart Card Download Online Tamil: Step by Step Guide

5. NPHH – NC Ration Card 

NPHH-NC-Smart-Ration-Card-Meaning-Tamil

  • NPHH – NC Ration Card Meaning Tamil: NPHH – NC என்பதன் பொருள் Non Priority Household – No Commodities ஆகும்.
  • NPHH – NC வகை அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடையில் எந்த பொருட்களும் வழங்கப்படாது.
  • இந்த வகையை சேர்ந்தவர்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையை ஒரு அடையாள ஆவணமாகவோ அல்லது முகவரி ஆவணமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • NPHH – NC குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 47,282 ஆகும்.

FAQ 

1. குடும்ப அட்டை என்றால் என்ன?

இந்தியாவில் வசிக்கும் குடும்பங்களுக்கு சில அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவதற்காக அரசு வழங்கும் ஆவணமே குடும்ப அட்டை அல்லது ரேஷன் அட்டை ஆகும். அதில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

2. தமிழ்நாட்டில் எத்தனை வகையான குடும்ப அட்டைகள் உள்ளன?

தமிழ்நாட்டில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC போன்ற 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.

3. குடும்ப அட்டையை பெறுவது எப்படி?

தகுந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

4. PHH – AAY குடும்ப அட்டைகள் யாருக்கு வழங்கப்படும்?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு PHH – AAY வகை அட்டை வழங்கப்படும்.

5. PHH க்கும் NPHH க்கும் என்ன வித்தியாசம்?

PHH என்பது Priority Household அல்லது முன்னுரிமை குடும்ப அட்டை ஆகும். NPHH என்பது Non Priority Household அல்லது முன்னுரிமையற்ற குடும்ப அட்டை ஆகும். இருப்பினும், இந்த இரண்டு வகையான அட்டைகளுக்கும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

6. NPHH s என்றால் என்ன?

NPHH – S என்பது Non Priority Household – Sugar ஆகும். இந்த அட்டைக்கு அரிசியை தவிர மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole