TNPDS Mobile Number Change – Smart Ration Card
TNPDS Mobile Number Change: உங்களின் Smart Ration Card இல் மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? அதற்கான செயல்முறைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம். ஸ்மார்ட் கார்டில் மொபைல் நம்பரை மாற்ற நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நியாய விலை கடைகளின் மூலம் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காகிதத்தால் ஆன ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Ration Card களையும் Smart Card வடிவில் வழங்கப்பட்டன. இவை தமிழ்நாடு பொது விநியோக அமைப்பால் (Tamil Nadu Public Distribution System – TNPDS) செயல்படுத்தப்படுகிறது.
Smart Card வழங்கப்பட்டவுடன் அதனுடன் Aadhaar Card மற்றும் Mobile Number யை இணைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் அந்த Smart Ration Card க்கு உணவு பொருட்கள் வழங்கப்படும்.
Table of Contents
TN Ration Card Update / Correction Services
பல காரணங்களுக்காக உங்களின் ரேஷன் அட்டையில் Update / Correction செய்ய வேண்டியதிருக்கலாம். அவ்வாறு திருத்தங்களை செய்வதற்கான வசதிகளை TNPDS ஆனது Online மூலமாகவே வழங்குகிறது.
TNPDS இணையதளத்தில் Smart Ration Card இல் Correction செய்வதற்கு வழங்கப்படும் சேவைகள்:
- உறுப்பினரை சேர்த்தல்
- ஸ்மார்ட் அட்டையில் முகவரி மாற்றம் செய்தல்
- குடும்பத்தலைவரை மாற்றம் செய்தல்
- குடும்ப உறுப்பினரை நீக்குதல்
- அட்டை தொடர்பான சேவை நிலையை அறிதல்
மேற்கண்ட சேவைகளை TNPDS இணையதளத்தின் மூலம் பெறமுடியும். இதை பயன்படுத்தி நீங்கள் வீட்டில் இருந்து Online மூலமாகவே திருத்தங்களை செய்யலாம்.
Service | Smart Ration Card |
Department | Tamil Nadu Public Distribution System |
Government | State Government of Tamilnadu |
Type of Update | Mobile Number Update in Smart Ration Card |
Official Website | www.tnpds.gov.in |
TNPDS Toll-Free Number | 1967 ( OR ) 1800-425-5901 |
Email ID | support@tnpds.com |
Steps to Change Mobile Number In TNPDS Smart Ration Card
இப்பொழுது உங்களின் ஸ்மார்ட் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறையை பற்றி காண்போம்.
இதற்க்கு முன்பு ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமென்றால் 1967 ( OR ) 1800-425-5901 என்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து மாற்றம் செய்துவிடலாம்.
ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது. அதாவது தற்போது Online மூலமாக மொபைல் எண்ணை மாற்ற முடியாது.
நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் மாற்ற முடியும்.
சரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
Documents for Mobile Number Change in TNPDS Smart Ration Card
நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
- Smart Ration Card
- ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத்தலைவரின் ஆதார் கார்டு
- புதியதாக Update செய்யும் மொபைல் நம்பர்
மேலே கூறியுள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு ரேஷன் அட்டையில் மொபைல் நம்பர் மாற்ற வேண்டும் என்று கூறினால், அதற்கான படிவத்தை வழங்குவார்கள். அந்த படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல் ஆகியவற்றை இணைத்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
பிறகு சில நாட்களுக்கு உங்களின் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் மொபைல் எண் Update செய்யப்படும்.
முடிவுரை
மொபைல் எண்ணை மாற்றம் செய்வதை தவிர மற்ற அனைத்து சேவைகளும் TNPDS இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். எதிர்காலத்தில் மொபைல் எண்ணை மாற்றும் வசதியை இணையத்தில் கொண்டு வந்தால் அந்த சேவையையும் ஆன்லைன் மூலமாக பெற முடியும்.
ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை Comment பிரிவில் பதிவிடவும்.