TNPDS Smart Card Download Online Tamil: Step by Step Guide

TNPDS Smart Card என்பது Ration Card களை மின்னணு முறையில் வழங்கும் அட்டைகளாகும். இந்த மின்னணு அட்டையின் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியும். இதற்கான பிரத்யேகமான இணையதளமும் மொபைல் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில் TNPDS Smart Card யை எவ்வாறு Online மூலம் Download செய்வது என்பதை பற்றி காணலாம்.

TNPDS Smart Card 

முந்தைய காலங்களில் ரேஷன் கார்டு என்பது காகித தாள் வடிவில் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அனைவருக்கும் மின்னணு வடிவிலான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இது கொண்டு செல்வதற்கு எளிதாகவும், போலி அட்டைகளை ஒழிக்கவும் பயனுள்ளதாக இருப்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை கட்டாயமாகும். நீங்கள் இன்னும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், உடனே Online மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPDS Website and Mobile App 

ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பை வழங்குகிறது.

TNPDS Website 

தமிழ்நாடு அரசு tnpds.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ரேஷன் அட்டை தொடர்புடைய பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும்.

பின்வரும் சேவைகளை இணையதளம் மூலம் பெறலாம்.

  • Apply New Ration Card 
  • Ration  Card Application Status 
  • Reprint Smart Card 
  • Reprint Smart Card Status 
  • Add Family Member 
  • Change of Address 
  • Family Head Member Change 
  • Remove Family Member 

இந்த இணையதளத்தில் உங்களின் ரேஷன் கணக்கை Login செய்ய Username, Password போன்றவை எதுவும் தேவையில்லை. அட்டையில்  பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர் இருந்தாலே போதுமானது ஆகும்.

Read  TNPDS Mobile Number Change 2022 - Smart Ration Card

நீங்கள் Login செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அந்த OTP Number யை உள்ளிட்டு கிளிக் செய்தாலே ஓபன் ஆகிவிடும்.

TNePDS Mobile App 

TNPDS Ration Card க்கு மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. Google Playstore இல் TNePDS Mobile App யை Download செய்து அந்த செயலியை பயன்படுத்த தொடங்கலாம். இந்த செயலியில் Register செய்த Mobile Number யை உள்ளிட்டு கிளிக் செய்தால் OTP வரும். அந்த OTP Number யை Enter செய்து கிளிக் செய்தாலே Open ஆகிவிடும்.

TNPDS Mobile App இல் பின்வரும் சேவைகளை பெறலாம் 

  • Smart Ration Card Activation 
  • Transactions 
  • Entitlement 
  • Profile Details 
  • FPS Stocks 
  • Feedback
  • Give it Up 

அதாவது மேலே குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், அட்டை செயலில் உள்ளதா, ரேஷன் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களின் இருப்பு, உங்களுக்கு வழங்க வேண்டிய பொருள்களின் அளவு, பரிவர்த்தனை தகவல்கள், அட்டை பற்றிய விவரங்கள் போன்றவற்றை மொபைல் செயலி மூலம் பார்க்க முடியும்.

Name of State Government Tamilnadu
Scheme Public Distribution System
TNPDS Full Form Tamil Nadu Public Distribution System
Service Category  TNPDS Smart Card Download
Android App Link TNPDS Mobile App
Official Website Link https://tnpds.gov.in/
SMS Code Number 9773904050
HelpLine – TollFree 1967 (or) 1800-425-5901
Email Id support@tnpds.com
Complaint Register Link https://tnpds.gov.in/pages/complaint.xhtml
TNPDS Facebook Page Link https://www.facebook.com/tnepds
TNPDS Twitter Page Link https://twitter.com/tnepds

How to TNPDS Smart Card Download Online

TNPDS ரேஷன் அட்டையை Online மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: இதில் வலது பக்க மூலையில் English மற்றும் Tamil என்ற இரண்டு மொழிகள் இருக்கும். அதில் உங்களுக்கு வேண்டிய மொழியை தேர்வு செய்க.

Smart ration Card

Step 3: முதலாவதாக உள்ள Citizen Login என்பதை கிளிக் செய்யவும்.

TNPDS Smart Card Download

Step 4: உங்களின் Smart Ration Card இல் Register செய்த Mobile Number யை Type செய்து, அதற்க்கு கீழே உள்ள Captcha Code யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.

Read  TNPDS Mobile Number Change 2022 - Smart Ration Card

TNPDS Portal

Step 5: இப்பொழுது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க OTP Number வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.

TNPDS Ration Card Login

Step 6: தற்போது உங்களின் ஸ்மார்ட் கார்டு குறித்த அனைத்து தகவல்களும் தெரிவதை காண்பீர்கள். அதில் கீழே உள்ள Smart Card PDF Download என்பதை அழுத்தவும்.

Smart Card PDF Download

Step 7: அதை அழுத்தியவுடன் ஒரு PDF File Download ஆகும். அதை Open செய்து பார்க்கும்போது மின்னணு அட்டை குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த TNPDS Smart Card PDF யை Print எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க – Patta Chitta Download 

Reprint TNPDS Smart Card 

நீங்கள் வைத்திருக்கும் மின்னணு குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ புதிய அட்டைக்கு கோரிக்கை விடுக்கலாம். அதற்கான வசதியும் இணையதளத்தில் உள்ளது. அதை பற்றிய விவரங்களை காணலாம்.

நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க நேரிடலாம். அதாவது நீங்கள் உங்களின் குடும்ப அட்டையை தவறவிட்டிருக்கலாம், Smart Ration Card இல் உள்ள QR Code தேய்ந்திருக்கலாம், அட்டையை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து இருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களால் நீங்கள் புதிய Smart Ration Card க்கு Apply செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்படி விண்ணப்பிக்க பின்வரும் செயல்முறையை பின்பற்றவும்.

புதிய மின்னணு அட்டை கோரிக்கை விடுப்பதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: TNPDS இணையதளத்தில் உங்களின் ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை கொண்டு Login செய்யவும்.

Step 2: My Profile என்பதற்கு கீழே உள்ள Reprint Smart Card என்பதை கிளிக் செய்யவும்.

Reprint Smart Card

Step 3: New Request என்பதை அழுத்தவும்.

TNPDS New Request

Step 4: Reprint Request Type என்ற இடத்தில் கோரிக்கை வகையை தெரிவு செய்யவும். அதற்க்கு பக்கத்தில் உள்ள Reason என்ற பெட்டியில் காரணத்தை Type செய்து Check Box யை டிக் செய்யவும்.

Read  TNPDS Mobile Number Change 2022 - Smart Ration Card

Reprint Request for TNPDS Smart Card

Step 5: பிறகு கடைசியாக உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தவும்.

Step 6: இப்பொழுது உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு Reference Number தோன்றும். அந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும் உங்களின் மொபைல் எண்ணிற்கும் SMS வழியாக Reference Number யை பெறுவீர்கள்.

How to Check Status For Reprint Smart Card

நீங்கள் கோரிக்கை விடுத்த பிறகு அதன் Status யை இரண்டு வழிகளில் தெரிந்துகொள்ள முடியும்.

Method 1:

Step 1: உங்களின் TNPDS கணக்கை திறந்து Reprint Smart Card என்பதை கிளிக் செய்க. 

Reprint Smart Card

Step 2: இப்பொழுது Serial Number, Reference Number, Status போன்ற தகவல்கள் தெரிவதை காணலாம்.

Reprint Smart Card Status

Method 2:

Step 1: நீங்கள் Login செய்வதற்கு முன்பு Home Page இல் இருக்கும் Reprint Smart Card என்பதற்கு கீழே உள்ள Reprint Smart Card Status என்பதை கிளிக் செய்யவும்.

Reprint Smart Card - TNPDS Download

Step 2: இதில் நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்திருக்கும் Reference Number உள்ளிட்டு Submit செய்தால், அந்த கோரிக்கையின் Status வருவதை காண்பீர்கள்.

Reprint Smart Card Status Check

முக்கிய குறிப்பு:

உங்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட பிறகு நீங்கள் மண்டல / வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று 20 ரூபாயை ரொக்கமாக செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அட்டை பிறழ்வுகள் (Car Mutations) வகை கோரிக்கை தேர்வு செய்திருந்தால், பழைய ஸ்மார்ட் கார்டை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் படிக்க – Deepavali Wishes 

முடிவுரை 

இந்த பதிவில் TNPDS Smart Card Download மற்றும் Reprint க்கு கோரிக்கை விடுப்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். ரேஷன் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது ஆன்லைன் மூலமாகவே கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்க்கலாம்.

உங்களால் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 

இதை பற்றிய கருத்துகளை கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *