தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 | RTI Act in Tamil
தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்ற வார்த்தையை நீங்கள் செய்திகளிலோ அல்லது செய்தித்தாள்களிலோ கேள்விப்பட்டிருக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் உங்களால் அரசாங்கத்திடம் தகவல்களை கேட்டு பெற முடியும். அது எவ்வாறு மற்றும் அதற்க்கான செயல்முறைகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அதை பற்றிய முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சுருக்கம்:
சட்டத்தின் பெயர் | தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to Information) |
RTI சட்டம் அறிமுகப்படுத்திய மாதம் | 2004, டிசம்பர் |
RTI சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் | 2005, அக்டோபர், 12 |
கேட்கும் தகவலை வழங்க வேண்டிய காலம் | 30 நாட்கள் |
RTI கட்டணம் | Rs.10 |
RTI Online Portal | www.rtionline.gov.in |
RTI Online Portal For Tamilnadu | www.rtionline.tn.gov.in |
Table of Contents
RTI Full Form in Tamil
RTI என்பதன் விரிவாக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகும். RTI என்பதன் ஆங்கில விரிவாக்கம் Right to Information என்பதாகும். இந்த சட்டத்தின் கீழ் தகவல்களை உரிமையோடு கேட்டு பெறலாம்.
RTI என்றால் என்ன?
RTI அல்லது தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது, ஒரு இந்திய குடிமகன் மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் அலுவலகங்கள் மற்றும் துறைகளில் இருந்து தகவல்களை கோருவதற்கு வழிவகை செய்யும் சட்டமாகும்.
RTI மூலம் கேட்கப்படும் தகவல்களை (விலக்கு அளிக்கப்பட தகவல்களை தவிர) குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்குமாறு இந்த சட்டம் கட்டளையிடுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு 2005 ஆம் ஆண்டு மே மாதம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று 2005 அக்டோபர் 12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் படி இந்தியா முழுவதும் ஒரு இந்திய குடிமகன் / குடிமகள் மத்திய, மாநில மற்றும் அரசு உதவி பெரும் அலுவலகங்கள், துறைகளிடம் தகவலைகளை பெறலாம்.
RTI மூலம் கேட்கப்பட்ட தகவல்களை உடனடியாகவோ அல்லது 30 நாட்களுக்குள்ளாகவோ வழங்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பொதுத்தகவல் அலுவலர் நியமிக்கபடுவார்.
தகவல்களை கேட்பது என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். இந்த சட்டத்தின் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள சட்டம் ஆகும்.
தகவல் அறியும் சட்டத்தின் நோக்கம்
தகவல் அறியும் உரிமை சட்டம் பின்வரும் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
- அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுத்துறைகளின் வெளிப்படை தன்மையை அதிகரித்தல்.
- அரசு ஊழியர்களின் பொறுப்புடைமை தன்மையை மேம்படுத்துதல்.
- ஊழலை கட்டுப்படுத்துதல்
- அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு துறைகள் மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல்.
- கோரப்படும் தகவல்களை குறிப்பிட காலத்திற்குள் வழங்குதல்.
RTI இல் விலக்கு அளிக்கப்பட தகவல்கள்
தகவல் அறியும் உரிமை சட்டம் அனைத்து தகவல்களையும் பெற வழிவகை செய்தாலும், சில தகவல்களுக்கு விலக்கு அளிக்கிறது.
- இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட தகவல்களுக்கு விலக்கு அளிக்கிறது.
- நீதி மன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட தகவல்கள்.
- ஒரு தனி நபரின் உயிர் மற்றும் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள்.
- அயல் நாட்டு அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட ரகசியமான தகவல்கள்.
RTI Letter Format in Tamil PDF
RTI சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட படிவம் என்று ஏதும் இல்லை. ஒரு வெள்ளை தாளில் RTI சட்டத்தை குறிப்பிட்டு வேண்டிய தகவல்களை கூறலாம். RTI க்கான மாதிரிப்படிவம் (RTI Sample Form) கீழே கொடுத்துள்ளேன்.
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பம்
அனுப்புனர்
விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி
பெறுநர்
பொதுத்தகவல் அலுவலர்
முகவரி குறிப்பிடவும்
பொருள்: தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் படி தகவல்கள் வேண்டுதல் தொடர்பாக,
மதிப்பிற்குரிய ஐயா,
தயவுசெய்து கீழ்கண்ட தகவல்களை வழங்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தகவல் பற்றிய விவரம்:
(உங்களுக்கு வேண்டிய தகவல்களை கோரவும்)
நான் மேலே கோரிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் படி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகவல்களை வழங்க இயலாதவற்றிற்கு அதற்கான சட்ட பிரிவை முன்னிறுத்தி பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விண்ணப்பத்துடன் கட்டணமாக Rs.10 க்கு கோர்ட் ஸ்டாம்ப் ஓட்டியுள்ளேன்.
இடம்:
நாள்:
விண்ணப்பதாரரின் கையொப்பம்
RTI Letter Format in Tamil PDF:
RTI Act Guide in Tamil
தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 இன் வழிக்காட்டி கையேடை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியிட்டுள்ளது. அந்த கையேட்டில் RTI பற்றிய முழு தகவல்களும் தமிழ் மொழியில் இருக்கும்.
அதில் மொத்தம் 33 பக்கங்கள் இருக்கும்.