தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமை சட்டம் | Thagaval Ariyum Urimai Sattam in Tamil How to Apply
RTI என்று சொல்லப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் எப்படி Apply செய்வது என்பது பற்றிய முழு தகவல்களையும் தகுந்த படங்களுடன் இந்த கட்டுரையில் காணலாம். இந்த கட்டுரையை முழுமையாக படித்த பிறகு நீங்களே RTI விண்ணப்பத்தை விண்ணப்பிப்பீர்கள்.
Table of Contents
தகவல் அறியும் உரிமை சட்டம் | Right to Information
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது இந்திய குடிமக்கள் அனைவரும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை பெரும் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இது தனிநபர்கள் அரசு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து தகவல்களைக் கோரவும் பெறவும் அனுமதிக்கிறது.
ஆர்டிஐ சட்டம் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடு, பொதுக் கொள்கைகள் மற்றும் பொது அதிகாரிகள் எடுத்த முடிவுகள் குறித்த தகவல்களைப் பெற குடிமக்கள் ஆர்டிஐயைப் பயன்படுத்தலாம். பொது அதிகாரிகளால் எந்தவொரு தகவலையும் மறுப்பதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான வசதியையும் இந்த சட்டம் வழங்குகிறது. இந்த RTI சட்டம் ஊழலுக்கு எதிரான ஆயுதமாக கருதப்படுகிறது.
தமிழக அரசு வெளியிட்ட தகவல் பெரும் உரிமை சட்டம், 2005 வழிகாட்டி கையேடு மூலம் RTI பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
How to Apply RTI Online in Tamil | Thagaval Ariyum Urimai Sattam in Tamil
எந்த ஒரு இந்திய குடிமகனும் RTI சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை கோரலாம். இதற்க்கு சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தவர்களே RTI சட்டத்தை பயன்படுத்தலாம். நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதை பற்றி தெரிந்து வைத்திருப்பது முக்கியமாகும். ஆன்லைனில் தேடினாலே தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய தமிழ் புத்தகங்கள் PDF வடிவில் இலவசமாக கிடைக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து படித்து தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் RTI விண்ணப்பத்தை கடிதம் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மிகவும் எளிதாகும். எனவே இப்பொழுது RTI விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் எப்படி Apply செய்வது என்பதை பற்றி காணலாம்.
Step 1: முதலில் தமிழ்நாட்டின் தகவல் அறியும் உரிமை சட்டம் இணையதளமான https://rtionline.tn.gov.in/index.php என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: அதில் Submit Request / கோரிக்கையை சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: தற்போது வழிகாட்டி பக்கம் திறக்கும். அதை படித்துவிட்டு கடைசியாக இருக்கும் செக் பாக்ஸை டிக் செய்து Submit செய்யவும்.
Step 4: இந்த பக்கத்தில் உங்களின் Mobile Number மற்றும் Email Id யை Type செய்து Submit / சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்க.
Step 5: இப்பொழுது புதிய RTI விண்ணப்பம் செய்ய Click here to Submit New RTI Request என்பதை அழுத்தவும்.
Online RTI Request Form/ஆன்லைன் ஆர்டிஐ கோரிக்கை படிவம்
Step 6: தற்போது Online RTI படிவம் திறக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும். அது எப்படி என்று பார்ப்போம்.
Public Authority Details /பொது அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
Step 7: நீங்கள் எந்த அலுவலகத்திற்கு RTI விண்ணப்பத்தை தாக்கல் செய்கிறீர்களோ அந்த அலுவலகத்தை தேர்வு செய்யவும். அதாவது மாநிலம், மாவட்டம், தாலுக்கா மற்றும் துறை போன்றவற்றை தேர்வு செய்யவும்.
Personal Details of RTI Applicant/ தகவல் அறியும் விண்ணப்பதாரரின் விவரங்கள்:
Step 8: இதில் RTI விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், முகவரி, இடம், கல்வியறிவு மற்றும் மொபைல் நம்பர், மின்னஞ்சலை போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
Request Details /விவரங்களைக் கோருங்கள்:
Step 9: இந்த பகுதியில் முதலில் நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் (Below Poverty Line – BPL) உள்ளவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆம் என்றால் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்தால் நீங்கள் RTI விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய Rs.10 ரூபாயை செலுத்த தேவை இல்லை. அதாவது இலவசமாக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இல்லை என்றால் No என்பதை தேர்வு செய்யவும்.
Step 10: இப்பொழுது ஆர்டிஐ கோரிக்கை விண்ணப்பத்திற்கான உரையை Type செய்யவும். அல்லது ஏற்கனவே Type செய்து தயாராக வைத்துள்ள உரையை Copy மற்றும் Past செய்யவும். உங்களின் உரை அதிகபட்சமாக 3000 சொற்கள் வரை இருக்கலாம்.
உங்களின் RTI விண்ணப்பத்திற்கு ஏதேனும் துணை ஆவணம் (Supporting document) இருந்தால், அதை PDF வடிவில் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை.
Step 11: இப்பொழுது கடைசியாக உள்ள Submit என்பதை கிளிக் செய்யவும்.
RTI Online Request Payment Form/ஆர்டிஐ ஆன்லைன் கோரிக்கை கட்டண படிவம்
Step 12: இப்பொழுது RTI Application Fee Rs.10 யை Online மூலம் Pay செய்ய வேண்டும். RTI Online Payment என்பதை தேர்வு செய்து Pay என்பதை அழுத்தவும்.
Step 13: Net Banking அல்லது ATM Card மூலம் அந்த 10 ரூபாயை செலுத்தலாம். SBI அல்லாத மற்ற வங்கிகளின் Net Banking மூலம் செலுத்தும்போது, வங்கிக்கட்டணமாக Rs.6 யை சேர்த்து செலுத்த வேண்டும்.
எனவே SBI Net Banking அல்லது SBI ATM Card மூலம் பணத்தை செலுத்துமாறு பரிந்துரை செய்கிறேன். ஒருவேளை உங்களிடம் SBI வங்கிக்கணக்கு இல்லையென்றால், மற்ற வங்கிகளின் ATM Card மூலம் செலுத்தலாம். ஆனால் மற்ற வங்கிகளில் Rupay Debit Card மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
பணத்தை செலுத்திய பிறகு உங்களின் RTI விண்ணப்பம் வெற்றிகரமாக Apply செய்யப்பட்டிருக்கும். Apply செய்த பிறகு கோரிக்கை பதிவு எண் (Request Registration No) உருவாகும். அந்த எண்ணை கொண்டு உங்களின் Thagaval Ariyum Urimai Sattam விண்ணப்பத்தின் Status யை தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் RTI விண்ணப்பித்த பிறகு உங்களின் Email Id க்கு ஒரு Notification வரும். அதில் கோரிக்கை பதிவு எண் இடம் பெற்றிருக்கும்.
How to Check RTI Status | Thagaval Ariyum Urimai Sattam in Tamil How to Apply
Step 14: View Status என்பதை கிளிக் செய்யவும். பிறகு கோரிக்கை பதிவு எண் மற்றும் Email Id யை உள்ளிட்டு Submit செய்யவும். அவ்வாறு சமர்ப்பித்தவுடன் உங்களின் RTI Application Status யை காணலாம்.
இந்த கட்டுரையில் RTI யை Online மூலம் எவ்வாறு Apply செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.