How to Open SBI Savings Account in SBI Yono App
நீங்கள் SBI Savings Account-யை Online மூலம் திறக்க ஆர்வமாக உள்ளீர்களா ? ஒரு ஸ்மார்ட் போன் மூலம் எளிமையாக சேமிப்பு கணக்கை Open செய்ய முடியும். SBI வங்கியின் YONO App ஆனது இந்த வசதியை வழங்குகிறது.
YONO App என்பது SBI வங்கியால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் வங்கி பயன்பாடு ஆகும். இந்த செயலியில் வங்கியின் பலதரப்பட்ட சேவைகளை பெறமுடியும். அதாவது, Savings Account-யை Open செய்தல், Loan Apply செய்தல், Online Shopping உள்ளிட்ட செயல்களை இந்த செயலியின் மூலம் செய்ய முடியும்.
Table of Contents
Features of SBI YONO App
- செயலி மூலம் உடனடியாக கணக்கை திறத்தல்
- ஒவ்வொரு மாதமும் Account Statements-யை E-Mail வழியாக பெறலாம்.
- ஆன்லைனில் Shopping செய்தல்
- காகிதமற்ற கணக்கை திறத்தல்
Needed Documents for Account Opening
- ஆதார் கார்டு (அசல் மற்றும் நகல்)
- பான் கார்டு (அசல் மற்றும் நகல்)
- Passport அளவுள்ள புகைப்படங்கள்
How to Open Savings Account in YONO App
State Bank of India (SBI) வங்கியில் யோனோ செயலி மூலம் Savings Account-யை திறப்பதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Step 1: முதலில் உங்களின் ஸ்மார்ட் போனில் YONO App-யை Download செய்ய வேண்டும் அல்லது Play Store – YONO App என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்க.
Step 2: YONO செயலியை Open செய்து New to SBI என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: Apply Now என்ற Option-யை தேர்வு செய்து Next என்பதை அழுத்த வேண்டும்.
Step 4: இப்பொழுது நீங்கள் எந்த வகையான ஆவணத்தை பயன்படுத்தி கணக்கை திறக்க வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 5: ஆதார் கார்டு மூலம் திறப்பது சிறந்த தேர்வாக இருக்கும். எனவே ஆதார் e-KYC என்பதை தேர்வு செய்து Next என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்போது கணக்கை பற்றிய சில தகவல்கள் தெரியும். அதில் கீழே உள்ள Next என்பதை கிளிக் செய்க.
OTP Verification
Step 7: உங்களின் மொபைல் எண் மற்றும் இ-மெயில் கொடுத்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும் (E-Mail கட்டாயமில்லை).
Step 8: மொபைல் எண் மற்றும் இ-மெயிலுக்கு வந்த OTP எண்ணை Enter செய்து Submit-யை கிளிக் செய்க.
PAN Number
Step 9: இந்த பக்கத்தில் PAN Number-யை உள்ளிட வேண்டும். மேலும் இரண்டு Check Box-களை டிக் செய்து Next-யை அழுத்துக.
Step 10: FATCA / CRS declaration பக்கம் தோன்றும். அதில் Next என்பதை கிளிக் செய்க.
Personal Details
Step 11: Scan AADHAAR card QR code என்பதை கிளிக் செய்தால் உங்களின் மொபைலில் கேமரா திறக்கும். அதில் உங்களின் ஆதார் கார்டில் உள்ள QR code-யை Scan செய்க.
Step 12: இப்பொழுது உங்களின் ஆதார் கார்டில் உள்ள ஆதார் எண் மற்றும் பிற தகவல்கள் தானாகவே நிரப்பிக்கொள்ளும். பிறகு Next-யை கிளிக் செய்க.
Step 13: நீங்கள் பிறந்த இடத்தின் பெயரை உள்ளிட்டு அனைத்திலும் India என்பதை தேர்வு செய்க. பிறகு Next என்பதை அழுத்துக.
Step 14: இப்போது உங்களின் Current Address தோன்றும். Check Box-யை டிக் செய்து Next என்பதை கிளிக் செய்க.
Step 15: Internet Banking-யை பயன்படுத்துவதற்காக Username மற்றும் Password-யை Set செய்து Next-யை கிளிக் செய்க.
Step 16: உங்களின் புகைப்படத்தை Selfie அல்லது ஏற்கனவே மொபைல் உள்ள புகைப்படத்தை Upload செய்ய வேண்டும்.
Additional Details
Step 17: உங்களின் ஆண்டு வருமானத்தை தேர்வு செய்க.
Step 18: கல்வி தகுதியை தேர்வு செய்க.
Step 19: உங்களின் மதத்தை தேர்வு செய்க.
Step 20: திருமண நிலையை தேர்வு செய்க.
Step 21: Father மற்றும் Mother ஆகியோரின் பெயர்களை Enter செய்க.
Step 22: வேலையின் வகையை தேர்வு செய்க.
Nominee Details
Step 23: Nominee-யின் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற தகவல்களை கொடுத்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Services
Step 24: Services என்ற இடத்தில் Full Transaction என்பதை தேர்வு செய்து Yes என்பதை தேர்வு செய்க.
Personalised Kit
Step 25: Debit Card-ன் வகையை தேர்வு செய்து உங்களின் பெயரை Enter செய்ய வேண்டும். இதில் நீங்கள் கொடுக்கும் பெயரானது உங்களின் ATM Card-ன் மேல் Print ஆகும்.
Step 26: Terms & Conditions பக்கத்தில் உள்ள Check Box-யை டிக் செய்து Next-யை கிளிக் செய்க.
Step 27: இப்பொழுது கடைசியாக உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 28: திரையில் தோன்றும் Reference Number-யை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த Reference ஆனது உங்களின் மொபைல் எண் மற்றும் இ-மெயிலிற்கு அனுப்பப்படும்.
Reference Code ஆனது 15 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த Reference-யை கொண்டு உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு SBI Branch-க்கு சென்று KYC Verification செய்ய வேண்டும்.
வங்கிக்கிளைக்கு செல்லும்போது அசல் ஆவணம் மற்றும் புகைப்படங்களை எடுத்து செல்ல வேண்டும். KYC Verification முடிந்தவுடன் உடனடியாக கணக்கு திறக்கப்படும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comments பிரிவில் பதிவிடவும்.