SBI M-Passbook
SBI வங்கியானது வங்கி சேவைகளை Online மூலமாக வழங்குவதில் முன்னனியில் வகிக்கிறது. இந்த வங்கி வழங்கும் பல்வேறு ஆன்லைன் சேவைகளில் SBI M Passbook-ம் ஒன்றாகும். இதை பற்றிய விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
ஒவ்வொரு வங்கியும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு Physical Passbook-யை வழங்குகிறது. இந்த பாஸ்புக்கில் வங்கி வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் இருக்கும். அதாவது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கின் Credit மற்றும் Debit பரிவர்த்தனைகள், பரிவர்த்தனைகள் நடந்த தேதி, தற்போதைய இருப்பு தொகை போன்ற தகவல் பாஸ்புக்கில் அச்சிடப்படும்.
Table of Contents
What is M Passbook ?
M Passbook என்பது வங்கிக் கணக்குகளுக்கான Physical Passbook-யை போன்றே இருக்கும் ஒரு டிஜிட்டல் பாஸ்புக் ஆகும். இந்த M Passbook-யை வங்கிகள் வழங்கும் Mobile Banking App மூலமாக பெறமுடியும்.
இந்த எம் பாஸ்புக் ஆனது, நேரடியாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒவ்வொரு பரிவர்த்தனையை செய்த உடனேயே, அந்த பரிவர்த்தனைகான விவரங்கள் M பாஸ்புக்கில் Update ஆகிவிடும்.
உங்கள் வங்கி கணக்கின் பரிவர்த்தனை வரலாற்றை பார்க்க விரும்பினால், அதை எம் பாஸ்புக் மூலமாகவே பார்க்கலாம். எனவே இதற்காக நீங்கள் வங்கிக்கிளைக்கு போகவேண்டியதில்லை.
How to Access SBI M Passbook
SBI-யின் எம் பாஸ்புக் வசதியானது Yono Lite SBI என்ற App மூலம் அணுகலாம். இந்த செயலியை Google Play Store (Android) மற்றும் App Store (iPhone) போன்றவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எம் பாஸ்புக்கை அணுகுவதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் முதலில் Yono Lite SBI செயலியை Download செய்து மொபைல் பேங்கிங் சேவையை பதிவு செய்ய வேண்டும்.
SBI மொபைல் பேங்கிங் சேவையை பதிவு செய்யவில்லை என்றால் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Mobile Banking சேவையை எவ்வாறு பதிவு செய்வது ?
- உங்களின் ஸ்மார்ட் மொபைலில் Yono Lite SBI என்ற App-யை PIN Number-யை கொடுத்து Login செய்யவும்.
- இப்பொழுது மொபைல் பேங்கிங்கின் Dashboard தோன்றும்.
- My Accounts என்பதை கிளிக் செய்யவும்.
- mPassbook என்பதை கிளிக் செய்க.
- பிறகு View mPassbook என்பதை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கு எண்ணின் மீது கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் வங்கிக்கணக்கின் mPassbook தோன்றுவதை காணலாம். இந்த Digital Passbook-ல் வங்கிக்கணக்கில் கடைசி 150 Transaction-களை பார்க்க முடியும்.
Benefits
SBI M Passbook-ல் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
- நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளின் வரலாற்றை எம் பாஸ்புக் மூலம் பார்க்கலாம்.
- சமீபத்தில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை புதுப்பிப்பதற்கு வங்கிக்கிளைக்கு போகவேண்டியதில்லை. Mobile Passbook-ல் உள்ள Sync-யை கிளிக் செய்வதின் மூலமே சமீபத்திய பரிவர்த்தனை வரலாற்றை புதுப்பிக்கலாம்.
- SBI-யின் எம் பாஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
- இந்த பாஸ்புக்கை பார்வையிடுவதற்கு மொபைல் பேங்கிங்கை Login செய்ய வேண்டும் என்பதால், இது பாதுகாப்பானது ஆகும்.
மொபைல் பாஸ்புக்கை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வங்கிக்கு சென்று Physical பாஸ்புக்கை அச்சிடும் நேரத்தை சேமிக்கலாம். இந்த கட்டுரையை பற்றிய கருத்துக்களை Comment பிரிவில் பதிவிடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- Open SBI Savings Account in Mobile
- How to Change Mobile Number in ATM Machine
- Apply SBI New ATM Card in Online
- How to Transfer Savings Account to Another Branch