SBI Online

How to Add Beneficiary in SBI Internet Banking

நீங்கள் ஆன்லைன் வழியாக ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை எளிதாக அனுப்ப வேண்டும் என்றால், அதற்க்கு Beneficiary யை சேர்க்க வேண்டும். 

Beneficiary என்றால் என்ன? இதை எப்படி Add செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Table of Contents

Bank Beneficiary என்றால் என்ன?

ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை Transfer செய்யப்படும்போது, அந்த பணத்தை  பெரும் பயனாளரே  Beneficiary ஆகும்.

அதாவது, உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை உங்களுடைய நண்பனின்  வங்கிக்கணக்கிற்கு  அனுப்பும்போது அவர் பணத்தை பெறுபவர் ஆகிறார். எனவே அவரே Beneficiary ஆவார். ஒருவேளை  உங்கள் நண்பன் உங்களுடைய வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பும்போது அவருக்கு நீங்களே Beneficiary ஆவர்.

Beneficiary-யை Add செய்யாமல் பணத்தை Transfer செய்ய முடியுமா?

Beneficiary-யை Add செய்யாமல் உங்கள் பணத்தை ஆன்லைன் மூலமாக Transfer செய்யலாம். ஆனால் Beneficiary-யை சேர்க்காமல் Transfer செய்யும்போது அவர்களின் Name, Bank Account Number, IFSC Code, Mobile Number மற்றும் Address போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.

Read  How to Reset / Forgot SBI Profile Password in Online

இவ்வாறு ஒவ்வொரு முறை பணத்தை Transfer செய்யும் போதும் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த தகவல்களை கொண்டு ஒரு முறை Beneficiary List இல் சேர்த்துவிட்டால், பிறகு நீங்கள் எத்தனை முறை பணத்தை Transfer செய்தாலும் எந்த தகவல்களையும் கொடுக்க தேவையில்லை.

ஏனெனில், நீங்கள் ஏற்கனவே பயனாளியின் தகவல்களை Beneficiary பட்டியலில் சேர்த்துவிட்டதால், அவை அனைத்தும் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் Money Transfer செய்யும்போது, நேரடியாக Beneficiary யை தேர்வு செய்து பணத்தை Transfer செய்யலாம்.

How to Add Beneficiary in SBI Net Banking

State Bank Of India வங்கிக்கணக்கில் கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி Beneficiary-யை சேர்க்கலாம்.

Step 1: முதலில்  https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற SBI இணையதளத்திற்கு சென்று உங்கள் Internet Banking யை Login செய்யவேண்டும்.

How to Add SBI Beneficiary in Online

Step 2: இப்பொழுது உங்கள் வங்கிக்கணக்கின் இணைய சேவை  திறக்கும். அதில் Payments / Transfers  என்ற தேர்வை கிளிக் செய்யவேண்டும்.

Read  SBI Bank has Introduced OTP to Login to Internet Banking

How to Add SBI Beneficiary in Online

Step 3: பிறகு தோன்றும் இணைய பக்கத்தில் Add & Manage Beneficiary  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

How to Add SBI Beneficiary in Online

Step 4: இதில் உங்கள் Profile Password-யை Enter செய்ய வேண்டும். Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவேண்டும்.

How to Add SBI Beneficiary in Online

Step 5: நீங்கள் எந்த வகையான Beneficiary-யை Add செய்ய செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் Add செய்ய நினைக்கும் Beneficiary ஆனது SBI வங்கியாக இருந்தால் Intra-Bank Beneficiary என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

How to Add SBI Beneficiary in Online

ஒருவேளை Beneficiary மற்ற வங்கிகளாக இருந்தால் Inter- Bank Beneficiary என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Instant Money Transfer இந்த தேர்வை கிளிக் செய்தால் Beneficiary-க்கு உடனடியாக பணத்தை Transfer செய்யும் வசதி கிடைக்கும்.

Step 6: இதில் Beneficiary Name, Bank Account Number, Transfer Limit போன்றவைகளை கொடுக்கவேண்டும். இதில் உள்ள Address-ல் நீங்கள் விருப்பப்பட்டால் beneficiary-ன் Address-யை கொடுக்கலாம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம்.

Read  How to Transfer SBI Account to Another Branch Online

How to Add SBI Beneficiary in Online

பிறகு Beneficiary வங்கியின் IFSC Code-யை Enter செய்யவேண்டும். பிறகு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 7: இப்பொழுது Approve  என்பதை கிளிக் செய்க.

How to Add SBI Beneficiary in Online

Step 8: Approve Beneficiary என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

How to Add SBI Beneficiary in Online

Step 9: இதில் இரண்டு விதமான தேர்வுகள் வரும்.  Beneficiary-யை எந்த முறையில் Approve செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்யவேண்டும். பெரும்பாலும்  OTP(One Time Password)  மூலமாக Approve செய்வது எளிமையாக இருக்கும். எனவே இரண்டாவதில் உள்ள OTP-யை தேர்ந்தெடுங்கள்.

How to Add SBI Beneficiary in Online

Step 10: இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP செய்தி வரும்.

How to Add SBI Beneficiary in Online

Step 11: அதில் உள்ள எண்ணை Enter செய்து Approve என்பதை கிளிக் செய்தால் நான்கு மணி நேரத்தில் Approve ஆகிவிடும்.

How to Add SBI Beneficiary in Online

 

நீங்கள் ஒரு வங்கிக்கணக்கிற்கு வழக்கமாக பணம் அனுப்புபவராக இருந்தால், அந்த வங்கிக்கணக்கை Beneficiary ஆக Add செய்துக்கொள்ளளாம். இது உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். இவ்வாறு நீங்கள் எத்தனை Beneficiary-களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை Delete செய்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest