SBI Online

How to Add Nominee in SBI Account Online: Step by Step Guide

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கிற்கு Nominee-யை Add செய்யும் வசதியை SBI வங்கி வழங்குகிறது. மேலும்  வங்கிக்கு செல்லாமல் இதை Online மூலமாக நியமனம் செய்யும் வசதியை வழங்குகிறது.

நீங்கள் உங்களின் SBI Bank Account க்கு Online மூலம் Nomination யை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுகளுக்கான முழுமையான விவரங்களை வழங்குகிறது. இதற்கான செயல்முறைகளை பற்றி தகுந்த படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Table of Contents

What is Nominee ?

Nominee என்பது வங்கிக்கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரின் கணக்கில் உள்ள பணம் யாருக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படும் மற்றொரு நபர் ஆவர். வங்கி வாடிக்கையாளர் நியமனதாரரை (Nominee) நியமிக்கும் செயலே Nomination ஆகும்.

வாடிக்கையாளர் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட நியமனதாரர்களை பரிந்துரைக்க முடியும். 

Read  How to Register & Use SBI Secure OTP App

அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களை Nomination செய்யுமாறு வலியுறுத்துகின்றன. அதாவது வங்கி கணக்கிற்கு நியமனதாரரை Add செய்யமாறு வலியுறுத்துகின்றன.

SBI Bank Account-ல் நியமனதாரரை சேர்ப்பதற்கு நீங்கள் வங்கிக்கிளைக்கு (Branch) செல்ல வேண்டிய தேவை இல்லை. SBI Internet Banking மூலம் Online-ல் வேட்பாளரை பதிவு செய்யலாம்.

Steps to Add Nominee in SBI Account Online

Step 1: முதலில் www.onlinesbi.com என்ற SBI-ன் Internet Banking Portal-க்கு செல்ல வேண்டும்.

Step 2: உங்களின் Username மற்றும் Password கொண்டு இணைய வங்கியை Login செய்ய வேண்டும்.

Login SBI Net Banking

Step 3: இப்பொழுது SBI இணைய வங்கி சேவை திறக்கும். அதில் Menu Bar-ல் உள்ள Request & Enquiries என்ற Option-யை கிளிக் செய்ய வேண்டும்.

Select Request & Enquiries

Step 4: இப்போது திரையில் பல்வேறு சேவைகள் வரும். அதில் Online Nomintaion என்பதை தேர்வு செய்க.

Select Online Nomination

Step 5: ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால் திரையில் தோன்றும். அதில் நீங்கள் எந்த கணக்கிற்கு Nominee-யை Add செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்ய வேண்டும்.

Read  SBI KYC New Update: வங்கிக்கு போகாமல் KYC சமர்ப்பிக்கலாம்

ஒரே கணக்கு இருந்தால் அது தானாகவே தேர்வாகி இருக்கும்.

கணக்கை தேர்வு செய்த பிறகு Continue என்பதை கிளிக் செய்க.

Select Account - Add SBI Nominee

Step 6: Nomination Register செய்யும் பக்கம் திறக்கும். அதில் Nominee Name, DOB of Nominee, Nominee Address மற்றும் Nominee Relationship With Depositor போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். 

Step 7: பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Enter Nominee Details

Step 8: இப்போது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அதை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்க.

Enter OTP Number - Add SBI Nominee

Step 9  : கிளிக் செய்த பிறகு, திரையில் Nomination has been successfully created என்ற செய்தி வரும்.

Nomination Register Successfully

 

முக்கிய குறிப்பு:

நீங்கள் ஏற்கனவே நியமனதாரரை பதிவு செய்திருந்தால், திரையில் இந்த கணக்கிற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.  நியமனதாரரை மாற்ற விரும்பினால், தற்போதைய Nominee-யை Cancel செய்துவிட்டு, புதிய வேட்பாளரை பதிவு செய்ய வேண்டும்.

Read  How to Deposit Cash in SBI Cash Deposit Machine (CDM)

Nomination Already Registered

கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் வேட்பாளரை நியமனம் செய்வது அவசியமாகும். வங்கிக்கணக்கை வைத்திருப்பவர் மரணமடைந்தால், கணக்கில் உள்ள இருப்புத்தொகையை கோருவதற்க்கு எந்தவொரு நபரையும் பரிந்துரைக்க உரிமையாளருக்கு அனுமதி வழங்குகிறது.

கணக்கை வைத்திருக்கும் நபர் மரணமடைந்துவிட்டால், அவரது இறப்பை நிரூபிக்க தேவையான ஆவணங்களை வங்கிகளில் வழங்குவதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வேட்பாளர் இருப்பு தொகையை கோர முடியும்.

உங்களுக்கு இணைய வங்கியை பயன்படுத்துவதற்கு தெரியவில்லை என்றால், அதற்க்கு மற்றொரு வழி உள்ளது. வங்கி கிளைக்கு சென்று அதற்கான Form-யை நிரப்பி கொடுக்க வேண்டும்.

முடிவுரை 

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கிற்கு நியமானதாரர்களை நியமிக்கும் அவசியத்தை உணர வேண்டும். அனைவரும் தங்களின் கணக்குகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இது உங்களை சார்ந்து இருப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை பெற கீழே பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.

2 thoughts on “How to Add Nominee in SBI Account Online: Step by Step Guide

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole