How to Apply For SBI Cheque Book Online in 5 Minutes
SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு Online வசதிகளை வழங்குகிறது. அந்த வசதிகளுள் ஒன்றுதான் ஆன்லைன் மூலம் Cheque Book யை Apply செய்வதாகும். ஒரு SBI வாடிக்கையாளர் Online மூலம் காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக சொல்லப்போகிறேன்.
நீங்கள் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நிச்சயமாக காசோலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
காசோலை என்பது ஒரு வங்கியால் வழங்கப்படும் ஆவண காகிதமாகும். இது ஒரு பயனாளிக்கு பணத்தை செலுத்த வங்கிக்கு உத்தரவிடுகிறது. ஒரு பயனாளி காசோலையின் மூலம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பணம் காசோலையை வழங்கியவரின் வங்கிக்கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இன்றைய டிஜிட்டல் உலகிலும் காசோலை பரிவர்த்தனைகள் பெருமளவில் நடைபெறுகிறது. ஏனெனில் பணமில்லா பரிவர்தனைகளில் காசோலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்களின் SBI வங்கிக்கணக்கிற்கு Cheque Book யை Apply செய்ய விரும்புகிறீர்களா?
இந்த கேள்விக்கான உங்களின் பதில் ஆம் என்றால், இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Table of Contents
How to Apply For SBI Cheque Book Online
ஒரு காசோலை புத்தகத்தை நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வங்கிக்கிளைக்கு சென்று விண்ணப்பிக்கும் போது அலைச்சலும், நேர விரயமும் ஏற்படலாம். ஆனால் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் வெறும் 5 நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம்.
SBI காசோலை புத்தகத்தை ஆன்லைன் மூலம் இரண்டு வழிகளில் (Method) விண்ணப்பிக்கலாம்.
1. SBI Internet Banking
2. YONO SBI App
Method 1: How to Apply for SBI Cheque Book Through Internet Banking
SBI காசோலை புத்தகத்தை இணைய வங்கிசேவையின் மூலம் விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை Step by Step ஆக கீழே விளக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இன்னும் நீங்கள் இணைய வங்கிசேவைக்கு பதிவு செய்யவில்லையா? கவலை வேண்டாம். கீழே உள்ள கட்டுரையில் அதற்கான செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
SBI Internet Banking சேவையை Online-ல் Open செய்வது எப்படி? |
சரி இப்போது காசோலை புத்தகத்தை விண்ணப்பிக்கும் செயல்முறைக்கு வருவோம்.
Step 1: நீங்கள் https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற லிங்கை கிளிக் செய்தால், இணைய வங்கிசேவையின் Login பக்கம் திறக்கும்.
Step 2: இதில் உங்களின் Username, Password மற்றும் Captcha போன்றவற்றை Enter செய்து Login என்ற பட்டனை அழுத்தவும்.
Step 3: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (One Time Password) வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: தற்போது SBI இணைய வங்கியின் Dashboard திறக்கும். அதில் Request & Enquiries என்ற Option யை கிளிக் செய்க.
Step 5: Cheque Book Services என்பதை அழுத்தவும்.
Step 6: தற்போது தோன்றும் Option களில் முதலாவதாக உள்ள Cheque Book Request என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இந்த பக்கத்தில் நீங்கள் எந்த கணக்கிற்கு காசோலை புத்தகத்தை விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த கணக்கை தேர்வு செய்யவும்.
நீங்கள் SBI வங்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருந்தால் அவை இந்த இடத்தில் தெரியும். ஒருவேளை ஒரே கணக்கை வைத்திருந்தால் அந்த கணக்கு மட்டும் தெரியும்.
Number of Cheque Leaves என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான காசோலை இலைகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு ஏற்கனவே 25 என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். இதில் 10/ 20/ 25/ 50 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
இவற்றில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கையை தேர்வு செய்யவும். இங்கு நான் ஏற்கனவே இருந்த 25 என்ற எண்ணிக்கையை தேர்வு செய்துள்ளேன்.
பிறகு கடைசியாக உள்ள Submit என்பதை அழுத்தவும்.
Step 8: இதில் உங்களின் Cheque Book யை Delivery செய்ய வேண்டிய Address யை தேர்வு செய்ய வேண்டும்.
- ஏற்கனவே உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த Address இல் பெற வேண்டும் என்றால் Registered Address என்பதை தேர்வு செய்யவும்.
- கடைசியாக வங்கித்தரப்பில் இருந்து உங்களுக்கு ஏதாவது (ATM Card போன்றவை) Delivery செய்யப்பட்டு இருந்தால், அதே முகவரிக்கு அனுப்ப Last Availbe Dispatched Address என்பதை தேர்வு செய்யவும்.
- புதிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றால் New Address என்பதை தேர்வு செய்யவும்.
முகவரியை தேர்வு செய்த பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 9: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை Enter செய்து Confirm என்பதை அழுத்தவும்.
Step 10: தற்போது உங்களின் Cheque Request வெற்றிகரமாக விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கான Reference Number திரையில் தெரியும்.
நீங்கள் காசோலை புத்தகத்திற்கு வெற்றிகரமாக Apply செய்த பிறகு 3 வங்கி வேலை நாட்களுக்குள், நீங்கள் தேர்வு செய்த முகவரிக்கு காசோலை புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
Method 2: How to Apply for SBI Cheque Book Through YONO SBI App
SBI இன் Mobile Banking செயலியான YONO SBI App மூலமாகவும் Cheque Book யை Apply செய்யலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:
நீங்கள் இன்னும் SBI YONO செயலியில் பதிவு செய்யவில்லை என்றால், அதில் எவ்வாறு பதிவு செய்வது என்பதை பற்றி கீழே உள்ள கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
How to Register SBI Mobile Banking Service in Online: Tamil |
Step 1: யோனா செயலியை Open செய்த பிறகு, உங்களின் 6 இலக்க MPIN அல்லது Username மற்றும் Password யை கொண்டு Login செய்யவும்.
Step 2: செயலியை திறந்தவுடன் அதை கீழிருந்து மேலே தள்ளவும். அதில் இருக்கும் Service Request என்ற Option யை அழுத்தவும்.
Step 3: இப்பொழுது பல்வேறு சேவைகள் தோன்றுவதை திரையில் காண்பீர்கள். அதில் Cheques என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இதில் காசோலை தொடர்பான சேவைகள் தெரியும். அதில் Request Cheque Book என்பதை கிளிக் செய்க.
Step 5: உங்களின் Bank Account Number யை தேர்வு செய்யவும். பிறகு உங்களுக்கு தேவையான காசோலை இலைகளின் எண்ணிக்கையை தேர்வு செய்யவும்.
Check Box யை டிக் செய்து Next என்பதை அழுத்தவும்.
Step 6: இந்த பக்கத்தில் Address யை தேர்வு செய்யவும். இதில் தேர்வு செய்யப்படும் முகவரிக்கு தான் புதிய காசோலை புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
Step 7: முகவரியை சரிபார்த்த பிறகு Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 8: கடைசியாக Review பக்கம் திறக்கும். இதில் Account Number, காசோலைகளின் எண்ணிக்கை மற்றும் முகவரி போன்ற தகவல்கள் தெரியும்.
அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பிறகு Confirm என்பதை அழுத்தவும். இப்பொழுது உங்களின் காசோலை கோரிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
சரி காசோலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்கள். அந்த காசோலையை எவ்வாறு நிரப்புவது என்பதை பற்றி தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
ஒரு காசோலையை நிரப்புவது பற்றிய விவரங்களை தகுந்த விளக்க படங்களுடன் கீழே உள்ள கட்டுரையில் விளக்கியுள்ளேன். அதை கிளிக் செய்து முழுமையான தகவலை படிக்கவும்.
How To Fill A Cheque Leaf & What Are The Types Of Cheques |
காசோலை புத்தகத்திற்கான கட்டணங்கள் (Charges For Cheque Book)
SBI வங்கியானது Cheque Book க்கு சில கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அவற்றை பற்றிய விவரங்களை காணலாம்.
SBI வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு ஒரு நிதியாண்டிற்கு 10 காசோலை இலைகளை (Cheque Leaves) இலவசமாக வழங்குகிறது. அதற்க்கு மேற்பட்ட காசோலைகளை பெற வேண்டுமானால், அதற்க்கு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
Cheque Book Charges for Savings Account | |
ஒரு நிதியாண்டிற்கு 10 Cheque Leaves | இலவசம் |
அதன் பிறகு 10 Leaves அடங்கிய ஒரு Cheque Book | Rs.40 + GST |
25 Leaves அடங்கிய Cheque Book | Rs.75 + GST |
Emergency Cheque Book (10 Cheque Leaves) | Rs.50 + GST |
மூத்த குடிமக்கள் (Senior Citizen) | இலவசம் |
Salary Package Accounts – Irrespective of QAB | இலவசம் |
சுருக்கம்:
இந்த கட்டுரையில் SBI வங்கி காசோலையை இணைய வங்கிச்சேவை மற்றும் மொபைல் வங்கிச்சேவை மூலம் எவ்வாறு Apply செய்வது என்று தெரிந்துகொண்டீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே Comment பிரிவில் பதிவிடவும்.