How to Apply For SBI Savings Account in Online
நீங்கள் SBI வங்கியில் Savings Account-யை Open செய்ய ஆர்வமாக உள்ளீர்களா ? மேலும் அலைச்சல்கள் இல்லாமல் ஒரே நாளில் Bank Account -யை திறக்க வேண்டுமா ? இதற்க்கு உங்களின் பதில் ஆம் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். SBI வங்கியில் Online மூலம் Savings Account-யை Open செய்வதற்கான செயல்முறைகளை பற்றி இங்கு விரிவாக காணலாம்.
நம்முடைய பணத்தை சேமிக்க ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது. அந்த பாதுகாப்பான இடம் வங்கிகள் (Banks) என்று சொல்லலாம்.
வங்கிகளில் பணமானது பாதுகாப்பாகவும், மேலும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை எளிதில் எடுக்கும் வகையிலும் உள்ளது. வங்கிகள் பணத்தை டிஜிட்டல் வடிவில் சேமிப்பதால் நாம் எங்கு சென்றாலும் பணத்தை கையில் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை.
வங்கிகளில் பணத்தை சேமிக்க ஒரு Bank Account தேவைப்படுகிறது. பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வதால் பாதுகாப்பாக இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கிடைக்கிறது. எனவே, வங்கிகள் என்பது மக்களின் வாழ்க்கையில், ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
சில வங்கிகள் வங்கிக்கணக்குகளை திறப்பதற்கு Online மூலம் விண்ணப்பிக்கும் வசதிகளை வழங்குகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி ஒரே நாளில் வங்கிக்கணக்கை திறக்க முடியும்.
SBI வங்கியில் ஆன்லைன் மூலம் சேமிப்பு கணக்கை திறக்கும் செயல்முறையை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
SBI Savings Account in Online
பொதுவாக வங்கிகளில் Saving Bank Account -யை Open செய்ய வேண்டுமென்றால் வங்கிக்கிளைக்கு சென்று Application-யை நிரப்பி கொடுக்க வேண்டும். பிறகு சில நாட்கள் கழித்து வருமாறு கூறுவார்கள். அப்படி சில நாட்கள் கழித்து வந்தாலும் வங்கிக்கணக்கை Open செய்திருந்தால் பரவாயில்லை, ஒரு வேலை Open செய்திருக்கவில்லை என்றால் மறுபடியும் இன்னொரு நாளில் வருமாறு சொல்வார்கள்.
ஆனால், வங்கிக்கணக்கை Online மூலம் Apply செய்யும்போது ஒரே நாளில் Open செய்துவிடலாம். அதாவது நீங்கள் Online-ல் Apply செய்து முடித்தவுடன், கடைசியாக நீங்கள் Apply செய்த Form-யை Download செய்ய வேண்டும். பிறகு அதை வங்கியில் கொடுத்தால் உடனே KYC Verification செய்து Bank Passbook-யையும் கொடுத்துவிடுவார்கள்.
இதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் வங்கி சேமிப்பு கணக்கை திறக்க முடியும்.
Required Documents
வங்கிக்கணக்கை திறக்க பின்வரும் ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.
- Aadhaar Card
- PAN Card
- 2 Passport Size Photos
How to Apply For SBI Savings Account Online
கீழ்கண்ட செயல்முறையை பயன்படுத்தி Online மூலமாக SBI Saving Account-யை Open செய்யலாம்.
Step 1: நீங்கள் முதலில் https://oaa.onlinesbi.com/sao/onlineaccapp.htm என்ற SBI-ன் Official இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் கடைசியில் உள்ள Start என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: Start என்பதை கிளிக் செய்தவுடன் அதன் கீழ் உள்ள Fill new Customer Information Form என்பதை கிளிக் செய்யவேண்டும்.
Customer Information Section:
Step 3: இந்த பக்கத்தில் உங்களின் Name, Father Name மற்றும் Address போன்ற இதர தகவல்களை நிரப்ப வேண்டும்.
Step 4: பிறகு PAN எண்ணை குறிப்பிட வேண்டும். உங்களிடம் PAN Card இல்லையென்றால் அதற்க்கு கீழ் உள்ள Form 60/61 என்பதை தெரிவு செய்து அதை நிரப்ப வேண்டும்.
Step 5: KYC Document என்ற இடத்தில் Yes என்பதை கிளிக் செய்க. பிறகு ID Type என்ற இடத்தில் ஏதாவது ஒரு Document -யை தேர்வு செய்யவும்.
Step 6: தேர்வு செய்த Document -ன் நம்பர், ஆவணம் யாரால் வழங்கப்பட்டது (Issued by) மற்றும் வழங்கப்பட்ட தேதி (Issued date) போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step 7: நீங்கள் தெரிவு செய்யும் ஆவணத்தில் உள்ள முகவரியும், மேலே நிரப்பிய முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் ஆதார் என்பதை தெரிவு செய்துள்ளேன்.
Step 8: பிறகு Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 9: இப்பொழுது SCRN என்ற எண் Generate ஆகும். இந்த எண்ணை குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு Save and Proceed என்பதை கிளிக் செய்க.
Step 10: கிளிக் செய்தவுடன் Proceed பட்டனுக்கு மேலே Yes மற்றும் No என்ற Option இருக்கும்.
Step 11: நீங்கள் Single Account (நீங்கள் மட்டும் தனியாக) Open செய்கிறீர்கள் என்றால் No என்பதை தெரிவு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Account Information Section:
Step 12: இந்த பக்கத்தில் Account Information Section வரும். இதில் உங்கள் வங்கிக்கணக்கு சம்மந்தப்பட்ட தகவல்களை தெரிவு செய்ய வேண்டும்.
Step 13: முதலில் Details of Applicants என்ற பிரிவில் ஏற்கனவே நீங்கள் சேமித்து வைத்திருக்கும் SCRN எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். இந்த இரண்டையும் கொடுத்தவுடன் Select First Holder Name என்னும் இடத்தில் உங்கள் பெயர் தானாக வருவதை காணலாம்.
Step 14: அடுத்த பிரிவில் நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கை எந்த Branch-ல் Open செய்யபோகிறீர்களோ அந்த Branch-ன் IFSC Code-ல் கடைசி ஐந்து எண்களை மட்டும் கொடுத்து Get Branch Name என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 15: கிளிக் செய்தவுடன் நீங்கள் கொடுத்த IFSC Code-டிற்கு உண்டான Branch Name உங்களுக்கு கீழே தெரியும்.
Step 16: Additional Details என்ற பிரிவில் உங்களுக்கு எந்தெந்த வசதிகள் வேண்டுமோ அதில் Yes என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 17: அதாவது Debit Card, Mobile Banking, Internet Banking போன்ற சேவைகளில் உங்களுக்கு தேவையானவற்றில் Yes என்பதனை தெரிவு செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையில்லாத வசதிகளில் No என்பதை தெரிவு செய்க.
Step 18: பிறகு Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 19: இப்பொழுது SARN எண் Generate ஆகும். இதையும் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு Save and Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 20: இப்பொழுது மேலே ஒரு PopUp Window தோன்றும். அதில் Ok என்பதை அழுத்த வேண்டும்.
Step 21: இப்போது மறுபடியும் முதல் பக்கத்தில் வந்து நிற்கும். இதில் Print Account Opening Form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 22: இதில் அங்கு காட்டப்பட்டுள்ள Image Code, SARN நம்பர் மற்றும் உங்களின் Date of Birth ஆகிய தகவல்களை கொடுத்து Proceed என்பதை கிளிக் செய்தால், ஒரு படிவம் (Form) Download ஆகும்.
Step 23: Download செய்த Form-யை Print எடுத்துக்கொண்டு அதனுடன் Aadhaar Card, PAN Card மற்றும் இரண்டு புகைப்படங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வங்கிக்கு செல்ல வேண்டும்.
Step 24: அவற்றையெல்லாம் வங்கியில் கொடுத்த பிறகு உங்கள் வங்கிக்கணக்கு Open செய்து Passbook-யையும் கொடுத்துவிடுவார்கள்.
குறிப்பு:
நீங்கள் Online-ல் Apply செய்த பிறகு, அந்த Form-யை Download செய்து ஒரு மாதத்திற்குள் வங்கியில் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை Apply செய்த ஒரு மாதத்திற்குள் வங்கியில் Submit செய்யவில்லை என்றால் அது காலாவதி ஆகிவிடும். பிறகு மீண்டும் புதியதாக Apply செய்ய வேண்டும்.
வங்கிக்கு செல்லும்போது Aadhaar Card, PAN Card போன்ற ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு செல்ல வேண்டும்.
முடிவுரை
இன்றைய காலத்தில் வங்கிக்கணக்கை திறக்க மிகவும் சிரமப்பட தேவையில்லை. ஏனெனில் தற்போது கணினி அல்லது ஸ்மார்ட் போன் மூலமாகவே சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த வசதியை பயன்படுவதன் மூலம் நீங்கள் உங்களின் நேரத்தை பெருமளவு சேமிக்கலாம். மேற்கண்ட கட்டுரையில் SBI Saving Account -யை Online மூலம் திறப்பதற்கான செயல்முறையை பற்றி எளிமையாக விளக்கினேன்.
மேற்கண்ட கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பதை பற்றி உங்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். மேலும் இந்த தளத்தை மேம்படுத்த உங்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
Thank you very much sir