ATM Card Service

How to Apply For SBI New ATM Card in Online and Offline

உங்களின் SBI ATM Card தொலைந்துவிட்டதா? அல்லது சேதம் அடைந்துவிட்டதா? கவலையை விடுங்கள். SBI வங்கியில் Online அல்லது Offline மூலம் New ATM Card யை எப்படி Apply செய்வது என்பதை பற்றி இங்கு காணலாம்.

பொதுவாக ஒரு Saving Bank Account இல் உள்ள பணத்தை Withdraw செய்ய இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக வங்கியில் சென்று அங்கு பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். இரண்டாவதாக ATM சேவையின் மூலம் பணம் எடுக்கலாம்.

வங்கிக்கணக்கை பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய ATM Card-யை பயன்படுத்தியே பணம் எடுக்க விரும்புகிறார்கள். ஏனெனில், வங்கியில் சென்று பணம் எடுக்கும்போது தங்கள் வேலையை விட்டு வங்கிக்கு வரவேண்டும்.  இவ்வாறு பணம்  எடுக்க நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். மேலும் வங்கி வேலை நாட்களில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

ஆனால் ATM சேவை மூலம் பயனாளர்கள் எந்த நேரத்திலும் பணம் எடுக்க முடியும். மேலும் சில நிமிடங்களுக்குள் பணத்தை எடுத்துவிடலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ATM Card-யை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில் நீங்கள் புதிய ATM Card-யை பெறுவதற்கு Online அல்லது Offline மூலமாக Apply செய்யலாம். இதற்கான செயல்முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 

Name of the Bank State Bank of India 
Service Category Apply for New ATM Card 
Apply Mode Online & Offline
Official Website https://retail.onlinesbi.sbi/
Toll-Free Number 1800 1234
Email customercare@sbi.co.in

SBI புதிய ATM Card க்கு ஆன்லைன் மூலம் Apply செய்வது எப்படி?

நீங்கள் Online மூலமாக ATM Card-க்கு Apply  செய்ய வேண்டுமென்றால் அதற்கு SBI Internet Banking சேவையை பெற்றிருக்க வேண்டும்.

Read  How to Generate / Change SBI Debit Card PIN Number Online

Net Banking Login:

Step 1: முதலில் SBI-ன் இணைய வங்கிசேவை தளமான https://retail.onlinesbi.com/retail/login.htm  செல்ல வேண்டும்.

SBI New ATM Card Apply (1)

Step 2: இணைய சேவை தளத்திற்கு சென்றவுடன் உங்களின் Username மற்றும் Password-யை Enter செய்து, உங்களின் இணைய வங்கிச்சேவையை திறக்க வேண்டும். இப்பொழுது உங்களின் Internet Banking சேவை திறக்கும்.SBI New ATM Card Apply 2

 

New ATM Card Request: 

Step 3: அதில் e-services என்ற இடத்தில் சுட்டியை வைக்கும்போது பல தேர்வுகள் வரும். அவற்றில் இரண்டாவதாக உள்ள ATM Card Services என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.SBI New ATM Card Apply 3

 

Step 4: அடுத்து வரும் பக்கத்தில் Request ATM/Debit Card என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

SBI New ATM Card Apply 4

Step 5: பிறகு உங்களின் வங்கிக்கணக்கின்  தகவல்கள் வரும். ஒருவேளை நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருந்தால் அதாவது Recurring Deposit, Fixed Deposit போன்ற ஏதாவது வைத்திருந்தால், அந்த கணக்குகளின் தகவல்களும் இதில் வரும்.SBI New ATM Card Apply 5

Step 6: இந்த பக்கத்தில் Card Category என்ற இடத்தில் Debit Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். Name on the Card என்ற இடத்தில் உங்களின் பெயரை Type செய்ய வேண்டும். நீங்கள் இதில் என்ன பெயர் Type செய்கிறீர்களோ அந்த பெயர் தான் உங்களின் புதிய Debit Card-ல் வரும்.

SBI New ATM Card Apply 6

 

Debit Card வகையை தேர்வு செய்தல்: 

Step 7: Select Type of the Card என்ற இடத்தில், உங்களுக்கு எந்த வகை Debit Card வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும். இங்கு SBI Global International Debit Card (Visa) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Read  How to Apply For SBI Debit Card in Online: Step-by-step Guide

Step 8: அடுத்து I Accept the Disclaimer என்ற இடத்தில் Tick செய்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 9: இந்த பக்கத்தில் நீங்கள் Type செய்த Name மற்றும் தேர்வு செய்த Debit Card-ன் வகை போன்ற தகவல்கள் வரும்.

SBI New ATM Card Apply

 

ATM Card Delivery Address: 

Step 10: அதற்க்கு கீழே Delivery Address-யை தேர்வு செய்ய வேண்டும். இதில்  Registered Address மற்றும் New Address என்ற இரண்டு தேர்வு இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

SBI New ATM Card Apply 7

 

Step 11: Registered Address என்பதை தேர்வு செய்தால், ஏற்கனவே நீங்கள் வங்கியில் என்ன முகவரி கொடுத்திருக்கிறீர்களோ அந்த முகவரிக்கு புதிய Debit Card வரும். New Address என்பதை தேர்வு செய்தால், நீங்கள் Type செய்யும் முகவரிக்கு புதிய Debit Card ஆனது வரும். உங்களுக்கு வேண்டிய தேர்வை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 12: இதில் நீங்கள் தேர்வு செய்த முழு முகவரியும் தெரியும். அடுத்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

 

  • SBI New ATM Card Apply 8

 

Step 13: Using One Time Password (OTP) மற்றும் Using Profile Password இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Valid செய்ய வேண்டும். இங்கு OTP என்ற தேர்வு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

SBI New ATM Card Apply 9

 

Step 14: இப்பொழுது வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP (One Time Password) வரும். அதை இதில் Enter செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள Submit என்பதை கிளிக் செய்தவுடன், உங்களின் Request வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிடும்.

Read  How to Deposit Cash in SBI Cash Deposit Machine (CDM)

SBI New ATM Card Apply 10

ATM Card-யை Apply செய்யும்போது கவனிக்க வேண்டியவை 

  • நீங்கள் SBI Internet Banking சேவை மூலம் புதிய Debit Card-க்கு Apply செய்யும்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே Apply செய்ய முடியும்.
  • நீங்கள் வெற்றிகரமாக Apply செய்த பின்னர் 7-8 வங்கி வேலை நாட்களில் உங்களின் முகவரிக்கு வந்துவிடும்.
  • பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு புதிய ATM Card-யை அனுப்பும்போது, அந்த முகவரியில் யாரும் இல்லாத பட்சத்திலோ அல்லது நீங்கள் கொடுத்த முகவரி தவறாக இருந்தோலோ, அந்த ATM Card-யை மறுபடியும் வங்கிக்கு அனுப்பிவிடுவார்கள்.
  • எனவே நீங்கள் ATM Card-க்கு Apply செய்த பின்னர், இரு வாரங்களுக்கு மேலாக வரவில்லை எனில் வங்கியில் சென்று கேட்கலாம்.

Offline மூலம் புதிய ATM Card-க்கு Apply செய்தல்

நீங்கள் Internet Banking சேவையை பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் வங்கிக்கிளைக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வங்கியில் கொடுக்கலாம். 

அதற்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

how to fill form for sbi new atm card offline tamil 

Step 1: SBI ATM படிவத்தில் Date மற்றும் Branch ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

Step 2: பிறகு உங்களுக்கு தேவையான ATM Card-ன் வகை மற்றும் Network ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய தேர்வின் பக்கத்தில் Tick செய்ய வேண்டும்.

Step 3: அடுத்து உங்களின் முழு முகவரியை நிரப்ப வேண்டும். மேலும் மொபைல் நம்பர், வங்கிக்கணக்கு எண், கணக்கு வகை ஆகியவற்றை நிரப்பி கடைசியாக இடம் மற்றும் உங்களின் கையெழுத்தை இட வேண்டும்.

Step 4: பிறகு இந்த படிவத்தை வங்கியில் கொடுத்துவிட வேண்டும். பின் உங்கள் முகவரிக்கு SBI இன் New ATM Card ஆனது Post மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

முடிவுரை 

இன்று SBI வங்கியில் New ATM Card க்கு Online மற்றும் Offline வழியே எவ்வாறு Apply செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துகளை கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.

8 thoughts on “How to Apply For SBI New ATM Card in Online and Offline

  • Thanks for your Valuable comment

    Reply
  • Thank you for your valuable comment

    Reply
  • Santos Deman

    If you are going for finest contents like I do, just pay a quick visit this website all the time because it provides feature contents, thanks|

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole