How to Withdraw Cash From SBI ATM Without Debit Card – YONO
SBI வங்கியானது சமீபத்தில் ATM Card இல்லாமல் பணம் எடுக்கும் (Cardless) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி SBI YONO ATM Center-ல் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை (Cash) Withdraw செய்யலாம்.
SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் Bank Account-ல் உள்ள பணத்தை எடுப்பதற்காக ATM Card-யை அளிக்கிறது. இந்த Debit Card-யை பயன்படுத்தி எந்தவொரு ATM Center-களிலும் பணத்தை Withdraw செய்ய முடியும்.
சமீபத்தில் வாடிக்கையாளர்கள் சைபர் குற்றங்களின் மூலம் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அதாவது வாடிக்கையாளர்களின் ATM Card தகவல்களை Skimmer கருவிகளின் மூலம் திருடப்பட்ட அதை தகவறாக பயன்படுத்துகின்றனர்.
இந்த மாதிரியான ATM Card திருட்டுகளை தடுப்பதற்கு SBI வங்கியானது YONO Cash என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Table of Contents
SBI YONO Cash
YONO Cash வசதியின் மூலம் ATM Center-களில் Debit Card-களை பயன்படுத்தாமலே பணத்தை Withdraw செய்ய முடியும். அதாவது Cardless முறையில் பணம் எடுக்க அனுமதிக்கிறது.
SBI வங்கியின் இந்த புதிய வசதியின் மூலம் டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைகிறது. இதனால் வங்கி சம்மந்தப்பட்ட சைபர் குற்றங்களும் தடுக்கப்படுகின்றன.
SBI யோனோ கேஷ் ஏ.டி.ம் நிலையங்களில் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.
தற்போது இந்த சேவையானது 16500 ATM நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு மாதங்களில் 60,000 ATM நிலையங்களில் இந்த வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
How to Withdraw Cash Without ATM Card
எஸ்.பி.ஐ யோனோ ஏ.டி.ம் நிலையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Note:
- யோனோ கேஷ் Amount-யை Enter செய்யும்போது குறைந்தபட்சம் Rs.500 ரூபாயை எடுக்கலாம். மேலும் 500 மடங்குகளில் மட்டுமே எடுக்க முடியும்.
- நீங்கள் Request-யை உருவாக்கிய 2 மணி நேரத்திற்குள் பணத்தை Withdraw செய்ய வேண்டும்.
- ஒரு நாளைக்கு அதிகபட்சமாக Rs.20,000 வரை எடுக்கலாம்.
Request for YONO Cash Withdrawal
Step 1: உங்களின் மொபைலில் SBI YONO App-யை Install செய்து, அதை Open செய்ய வேண்டும்.
Step 2: யோனோ செயலியை Open செய்தவுடன் YONO Pay என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: YONO Cash என்பதை தேர்வு செய்க.
Step 4: இப்பொழுது Request பக்கம் திறக்கும். அதில் ATM என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இப்போது உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள Balance-யை காட்டும். அதற்கு கீழே நீங்கள் Withdraw செய்யும் Amount-யை Enter செய்து Next என்பதை அழுத்த வேண்டும்.
Step 6: பிறகு, ஏதேனும் 6 இலக்க PIN Number-யை உள்ளிட்டு Next என்பதை கிளிக் செய்க வேண்டும். இந்த PIN நம்பரானது நீங்கள் Withdraw செய்யும் போது பயன்படும்.
Step 7: தற்போது நீங்கள் Enter செய்த Amount மற்றும் PIN Number போன்றவைகளை சரிபார்த்து Confirm என்பதை அழுத்தவும்.
Step 8: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு Transaction Number வரும்.
Step 9: உங்களின் Request ஆனது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுவிட்டது.
Withdrawal From ATM Center
Step 1: உங்களுக்கு அருகில் இருக்கும் SBI YONO Cash ATM நிலையத்திற்கு சென்று YONO Cash என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த Transaction Number-யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்க.
Step 3: நீங்கள் Withdraw செய்யும் Amount-யை உள்ளிட்டு Yes என்பதை அழுத்தவும்.
Step 4: ஏற்கனவே உருவாக்கிய 6 இலக்க PIN Number-யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்க.
Step 5: இப்பொழுது ATM இயந்திரத்திலிருந்து வெளிவரும் பணத்தை பெற்றுக்கொள்ளவும்.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த வசதியானது பாராட்டத்தக்கது ஆகும். இந்த முறையில் பணத்தை திரும்ப பெறுவது மிகவும் பாதுகாப்பானது. மேலும் ATM அட்டை இல்லாத அவசர காலங்களில் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதியின் மூலம் குறைந்தபட்சம் 500 ரூபாயை தான் எடுக்க முடியும். அதற்கும் கீழான பணத்தை இந்த Cardless முறையில் எடுக்க முடியாது.
மேலும் படிக்க: