ATM Card ServiceSBI Online

How to Block and Unblock SBI ATM Card (Debit Card)

உங்களின் ATM Card சில நேரங்களில் Block செய்யப்படலாம். அல்லது பாதுகாப்பை கருதி நீங்களே Block செய்ய நேரிடலாம். நீங்கள் பயன்படுத்தும் Debit Card-யை எந்தெந்த காரணங்களுக்காக Block செய்யப்படலாம் ? மற்றும் அதை எவ்வாறு Unblock செய்வது போன்ற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் ATM Card-யை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமாகும். ஏனெனில் தற்போது ATM அட்டையின் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. 

உங்களின் ஏ.டி.ம் அட்டையை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் அது திருடப்பட்டு மற்றவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

ஒரு கார்டுதாரர், தன்னுடைய ஏ.டி.ம் அட்டையை தவறாக பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகிக்கும் போது, அதை Block செய்வது நல்லதாகும்.

பெரும்பாலான வங்கிகள் ஏ.டி.ம் அட்டையை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் Block செய்ய பல்வேறு வசதிகளை வழங்குகிறது. எனவே Debit Card-யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஒரு ATM அட்டையை எவ்வாறு Block மற்றும் Unblock செய்வது போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.

Reasons why your card will be blocked automatically

சில நேரங்களில் உங்களின் அட்டை தானாகவே Block செய்யப்படலாம். அதற்கான சில பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உங்களின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், நீங்கள் பல முறை PIN எண்ணை உள்ளிடுவீர்கள். அவ்வாறு 3 முறை தவறாக உள்ளிட்டால் அடுத்த 24 நேரத்திற்கு உங்களின் அட்டை தானாகவே Block செய்யப்படும்.
  • உங்களின் ATM Card காலாவதி ஆகும் முன்பு புதுப்பிக்க வேண்டும். ஒருவேளை புதுப்பிக்க தவறிவிட்டால், காலாவதியான பிறகு நிரந்தரமாக தடுக்கப்படும்.
  • ஒரே நாளில் பல முறை PIN Number-யை மாற்றும் போதும் தற்காலிகமாக தடுக்கப்படலாம்.
Read  How to Apply For SBI Cheque Book Online in 5 Minutes

How to Block SBI ATM Card

உங்களின் ATM அட்டையை பிளாக் செய்யும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.Through Customer Care: ATM Card இன் பின்புறத்தில் உள்ள Customer Care எண்ணை உங்களின் மொபைலில் சேமித்துக்கொள்ளுங்கள். மேலும் உங்களின் வங்கிக்கணக்கு எண் மற்றும் ஏ.டி.ம் நம்பர் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பது நல்லது. இது Customer Care மூலம் உங்களின் அட்டையை Block செய்ய உதவும்.

2 . Send SMS: உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து “Block (Your Debit Card Last 4 Digit)” என Type செய்து 567676 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.

3 . Nearest Bank Branch: உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக்கிளையில் கணக்கு எண் மற்றும் ATM எண்ணை கூறி பிளாக் செய்யுமாறு கோரலாம்.

4 . Block ATM Via Net Banking: SBI வங்கியின் Official Website-க்கு சென்று உங்களின் Net Banking சேவையை Login செய்ய வேண்டும். பிறகு ATM Card பகுதிக்கு சென்று அட்டையை பிளாக் செய்யலாம்.

Read  How to Add Beneficiary in SBI Internet Banking

5 . SBI Mobile App: SBI வங்கியின் மொபைல் செயலி மூலமாகவும் ஏ.டி.ம் அட்டையை தடுக்கலாம்.

How to Unblock SBI ATM Card

 1 . Automatic Unblocking: நீங்கள் மூன்று முறை தவறான PIN நம்பரை உள்ளிடும்போது 24 மணி நேரத்திற்கு பிளாக் செய்யப்படும். 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே Unlock செய்யப்படும்.

2 . Branch: அட்டைதாரர் தவறாக தடுத்திருந்தால், அருகிலுள்ள வங்கிக்கிளைக்கு சென்று எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். அதனுடன் அட்டைதாரரின் அடையாள சான்றை இணைக்க வேண்டும்.

3 . New Debit Card: அட்டையை பாதுகாப்பு காரணமாக தடுத்திருந்தால், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

4 . Replace ATM Card: ATM Card காலாவதி ஆகியிருந்தால், அது நிரந்தரமாக பிளாக் செய்யப்படும். எனவே Debit Card-யை புதுப்பித்து வழங்குமாறு வங்கியை கேட்கலாம்.

இந்த கட்டுரையானது, SBI வங்கியின் ATM அட்டையை எவ்வாறு Block மற்றும் Unblock செய்வது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் Comment இல் பதிவிடுங்கள்.

Read  How to Change Mobile Number in SBI Bank Account Online

தொடர்புடைய கட்டுரைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole