How to Register/Change SBI Mobile Number in ATM Machine
SBI வங்கியில் உங்களுக்கு வங்கிக்கணக்கு இருக்கிறதா ? ஆம் என்றால் பலவிதமான வங்கி சேவைகளை வங்கிக்கிளைக்கு போகாமலே பெறமுடியும். அந்த வரிசையில் வங்கியை அணுகாமல், உங்களின் வங்கிக்கணக்கில் Mobile Number-யை Register செய்யவோ அல்லது Change செய்யவோ முடியும். இவ்வாறு வங்கிக்கு போகாமல் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு பல்வேறு வழிகளை SBI வங்கி வழங்குகிறது.
வங்கிக்கணக்குகளில் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் அவசியமானது ஆகும். ஏனெனில் உங்களின் Bank Account-ல் பணத்தை Deposit செய்தல், Withdrawal செய்தல் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதற்கான Alert SMS-கள் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு வரும். மேலும் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவே அறிவிப்புகளை தெரியப்படுத்தும். எனவே வங்கியில் மொபைல் எண்ணை பதிவு செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
நீங்கள் வங்கிக்கணக்கை திறக்கும்போது மொபைல் எண்னை பதிவு செய்யவில்லையா ?
ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா ?
மேற்கண்ட வினாக்களில் ஏதேனும் ஒன்றிற்கு ஆம் என்றாலும் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
வங்கிக்கணக்கில் Mobile Number-யை மாற்றுவதற்கு SBI வங்கியானது, வெவ்வேறு வழிகளை வழங்குகிறது. அவற்றில் ஒரு வழிதான் ATM இயந்திரத்தில் மாற்றும் முறை.
SBI ATM Machine மூலம் வங்கிக்கணக்கில் Mobile Number-யை Register அல்லது Change செய்யலாம்.
Table of Contents
How to Register Mobile Number at SBI ATM Machine
நீங்கள் இன்னமும் SBI வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்யவில்லை என்றால் கீழ்காணும் செயல்முறைகளில் பதிவு செய்யலாம்.
Step 1: உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு SBI ATM Center-க்கு செல்ல வேண்டும்.
Step 2: ATM Machine-ல் உங்களின் Debit / ATM Card-யை Swipe செய்ய வேண்டும்.
Step 3: ATM திரையில் தோன்றும் Registration என்பதை தேர்வு செய்க.
Step 4: 4 இலக்க ATM PIN Number-யை உள்ளிடுக.
Step 5: இப்பொழுது திரையில் சில Option-கள் தோன்றும். அதில் Mobile Number Registration என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 6: இப்போது இரண்டு விதமான தேர்வுகள் வரும். அதில் New Registration என்பதை தேர்வு செய்க.
Step 7: New Registration என்பதை தேர்வு செய்த பின் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு Correct என்பதை கிளிக் செய்க.
Step 8: இப்போது உங்களின் புதிய மொபைல் எண்ணிற்கு Verification Code வரும். மேலும் அடுத்த 3 வேலை நாட்களுக்குள் SBI Contact Center-ல் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள்.
Step 9: Contact Center-ல் இருந்து தொடர்பு கொள்ளும் நபர், உங்களின் Request-யை Verify செய்து, புதிய மொபைல் எண்ணை Update செய்துவிடுவார்கள்.
How to Change Mobile Number at SBI ATM Machine
வங்கிக்கணக்கில் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை பின்வரும் செயல்முறைகளின் மூலம் மாற்றலாம்.
Step 1: திரையில் தோன்றும் Option-ல் Change Mobile Number என்பதை தேர்வு செய்க.
Step 2: இப்பொழுது பழைய மொபைல் எண்ணை Enter செய்து Correct என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 3: இப்போது மீண்டும் பழைய மொபைல் எண்ணை Enter செய்து Correct என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 4: இதில் புதிய மொபைல் எண்ணை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: மீண்டும் புதிய மொபைல் எண்ணை Re-Enter செய்து Correct என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும். மேலும் பழைய மற்றும் புதிய மொபைல் எண்களுக்கு OTP மற்றும் Reference Number வரும்.
Step 7: பழைய மற்றும் புதிய மொபைல் எண்களில் இருந்து கீழ்காணும் Format-ல் SMS அனுப்ப வேண்டும்.
<ACTIVATE> <OTP VALUE> <REFERENCE Number> to 567676
E.g. ACTIVATE 42748328 UM12747507340
Step 8: இரண்டு எண்களில் இருந்தும் SMS அனுப்பிய பிறகு புதிய மொபைல் எண், உங்களின் வங்கிக்கணக்கில் இணைக்கப்படும்.
குறிப்பு: பழைய மற்றும் புதிய எண்ணிற்கு வரும் OTP மற்றும் Reference Number-யை 4 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும். அவ்வாறு 4 மணி நேரத்திற்குள் அனுப்பவில்லை என்றால் அந்த SMS ஆனது காலாவதி ஆகிவிடும். பிறகு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
உங்களின் புதிய மொபைல் எண்ணை Update செய்த பிறகு, அனைத்து பரிவர்த்தனை தொடர்பான SMS-களும் அந்த புதிய மொபைல் எண்ணிற்கு மட்டுமே வரும்.
வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட Mobile Number பல வழிகளில் உதவியாக இருக்கும். வங்கியின் வெவ்வேறு வசதிகளை பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கியமானது ஆகும்.
மேலும் படிக்க – How to Open SBI Account in Online
சுருக்கம்
உங்களின் SBI வங்கிக்கணக்கில் ATM Center மூலம் எவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்வது மற்றும் மாற்றுவது என்பதை தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும்.
Thank You Very Much