Difference Between NEFT, RTGS & IMPS Transfer: Limits, Charges
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஆன்லைன் (Internet Banking) மூலமாக பணத்தை Transfer செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் Transfer செய்கிறார். வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் Transfer செய்துகொள்ளும் வசதியினை வங்கிகள் வழங்குகின்றன.
அதாவது NEFT, RTGS, IMPS போன்ற வழிகளில் Transfer செய்யலாம். இவற்றிற்கு இடையேயான Difference-யை இந்த பதிவில் காணலாம்.
ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கணக்கிற்கு Money Transfer செய்யும் போது, வங்கிகள் பல்வேறு காரணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான தேர்வுகளை (Option) வழங்குகிறது.
தற்போது வங்கிகள் National Electronic Fund Transfer (NEFT), Real Time Gross Settlement (RTGS), Immediate Payment Service (IMPS) போன்ற 3 விதமான Transaction Types-களை வழங்குகிறது.
பண பரிவர்த்தனையின் மதிப்பு, பரிமாற்றத்தின் வேகம், சேவை வழங்கும் நேரம் மற்றும் பிற காரணிகளைக்கொண்டு Transaction வகைகள் மாறுபடுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமுள்ள பண பரிமாற்ற வகைகளின் மூலம் பணத்தை பரிமாற்றிக்கொள்கிறார்கள். மேலும் அனைத்து வங்கிகளும் நிதி பரிமாற்றத்தை எளிமைப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு சொந்த டிஜிட்டல் பணப்பைகள் (Digital Wallets) வழங்குகின்றன.
சரி இப்பொழுது NEFT, RTGS மற்றும் IMPS ஆகிய Transaction களுக்கு இடையே உள்ள வித்தியாசம், Transaction Limits, Charges, Settlement Time போன்றவற்றை பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
National Electronic Fund Transfer (NEFT)
NEFT வகை பண பரிமாற்றமானது மின்னணு முறையில் ஒரு வங்கியில் அல்லது வங்கிக்கணக்கிலிருந்து, வேறு எந்த ஒரு வங்கிக்கணக்கிற்கும் பணத்தை Transfer செய்ய முடியும்.
இவ்வகையான பரிவர்த்தனையை ஒரு நாளின் 24 மணி நேரமும் மற்றும் வாரத்தின் ஏழு நாட்களிலும் (24*7) செய்யலாம். அதாவது நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த வகையான பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
இதற்க்கு முன்பு வரை NEFT பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் இப்பொழுது அதுபோல் எந்த நேர வரம்பும் இல்லை. விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலையற்ற நாட்களிலும் இந்த வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இம்முறையில் ஒரு வங்கிக்கணக்கிற்கு பணத்தைTransfer செய்யும்போது, அந்த பரிவர்த்தனையை ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் Transfer ஆகுமாறு Schedule செய்ய முடியும்.
எடுத்துக்காட்டாக, 07-03-2022 அன்று நீங்கள் ஒரு பயனாளருக்கு பணத்தை Transfer செய்கிறீர்கள் என்றால், அந்த Transfer-யை 12-03-2022 அன்று தானாக Transfer ஆகுமாறு Set செய்யலாம். அவ்வாறு நீங்கள் Set செய்த பிறகு, அந்த நாள் வரும்போது தானாகவே நீங்கள் Set செய்த பணமானது அந்த நபருக்கு Transfer ஆகிவிடும். அதற்கான தொகையும் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இந்த NEFT முறையை பயன்படுத்திதான் நிறுவனங்கள் தங்களின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத சம்பளத்தை ஒரே நேரத்தில் வங்கிக்கணக்குகளில் செலுத்துகின்றன.
மேலும் நீங்கள் PF பணத்தை எடுக்கும்போது இந்த முறையில் தான் உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
Real-Time Gross Settlement (RTGS)
RTGS பரிவர்த்தனை முறையானது பணத்தை Transfer செய்வதற்கான மற்றொரு முறையாகும். இம்முறையில் பணத்தை Transfer செய்தால் உடனடியாக பயனாளரின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும்.
ஆனால் இதில் பெரிய அளவு தொகைகளை மட்டுமே அனுப்ப முடியும். RTGS முறையில் குறைந்தபட்சம் 2 லட்சம் தொகையையாவது அனுப்ப வேண்டும்.
இந்த வகையான பரிவர்த்தனையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் (24 X 7) செய்ய முடியும்.
இந்த வகை பரிவர்த்தனைகளை பயன்படுத்த பணத்தை அனுப்புபவர் மற்றும் பயனாளி ஆகிய இருவரும் RTGS-யை Enable செய்திருக்க வேண்டும்.
பெரிய வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை இந்த வகையான பரிமாற்றத்தை பயன்படுத்துகின்றன.
Immediate Payment Service (IMPS)
IMPS முறையும் உடனடி பண பரிமாற்ற முறையாகும். இது சாதாரண மக்களால் பெரும்பாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இந்த முறையில் தான் நடக்கிறது.
Immediate Payment Service முறையில் வாரத்தின் ஏழு நாட்களிலும் எந்த நேரத்திலும் (24 X 7) உடனடியாக பண பரிவர்த்தனை செய்ய முடிவும். விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
இந்த வகையான பரிவர்த்தனையில் குறைந்த பட்ச தொகை என்று ஏதும் இல்லை. எனவே நீங்கள் எவ்வளவு குறைவான தொகையாக இருந்தாலும் இந்த முறையில் Transfer செய்யலாம். எடுத்துத்துக்காட்டாக, 1 ரூபாய் பணத்தை கூட இதன் மூலம் Transfer செய்யலாம்.
சில வங்கிகள் பயனாளர்களுக்கு SMS அடிப்படையிலான IMPS சேவையை வழங்குகின்றன. வங்கிகளின் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் உடனடியாக பண பரிமாற்றம் இந்த முறையில் தான் நடைபெறுகிறது.
Difference Between NEFT, RTGS & IMPS: Limits, Charges in Table
NEFT, RTGS, IMPS இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை எளிதாக புரிந்துகொள்வதற்கு கீழே அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள Transction Charge ஆனது RBI ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணங்களுக்குள் தான் வங்கிகள் பரிவர்தனைகளுக்கான Charges யை வசூலிக்க வேண்டும்.
வங்கிகள் RBI நிர்ணயித்த கட்டணங்களுக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் வசூலித்துக்கொள்ளலாம் என்பதால், ஒவ்வொரு வங்கியிலும் இதற்கான கட்டணங்கள் மாறுபடும்.
Comparison Category | NEFT | RTGS | IMPS |
Settlement Time | 5 Hours | Immediately | Immediately |
Transaction Charges (Subject to change according to banks) | Up to Rs.10,000 is Rs.2.50 + GST Rs.10,000 – Rs.1 lakh is Rs.5 + GST Rs.1 lakh – Rs.2 lakh is Rs.15 + GST Rs.2 lakh and above is Rs.25 + GST | Rs.2 lakh – Rs.5 lakh is Rs.24.50 + GST Above Rs.5 lakh is Rs.49.50 + GST | Up to Rs.10,000 – Rs.2 + GST From Rs.10,000 up to Rs.1 lakh – Rs.4 + GST From Rs.1 lakh up to Rs.2 lakh – Rs.12 + GST From Rs. 2 lakh up to Rs. 5 lakh – Rs. 20 + GST |
Service Time | 24 X 7 X 365 | 24 X 7 X 365 | 24 X 7 X 365 |
Payment Option | Online and Offline | Online and Offline | Online |
Minimum Transfer Limit | Rs.1 | Rs.2 Lakh | Rs.1 |
Maximum Transfer Limit | No Limit | No Limit | Rs.5 Lakh (Recently Increased 2 Lakhs to 5 Lakhs) |
Managed by | Reserve Bank of India (RBI) | Reserve Bank of India (RBI) | National Payments Corporation of India (NPCI) |
இந்த பதிவின் மூலம் நீங்கள் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Change SBI Registered Mobile Number Online
- How to Reset SBI Net Banking Password
- Reset SBI Profile Password
- SBI Cash Deposit Machine