How to Change Mobile Number in SBI Bank Account Online
வங்கி வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக்கணக்கில் Register செய்யப்பட்ட Mobile Number-யை மாற்றுவதற்கு வங்கிக்கிளையை நாட வேண்டிய நாட்கள் முடிந்துவிட்டன. தற்போது பெரும்பாலான வங்கிச்சேவைகளை Online மூலமாகவே பெற முடியும். இணைய வங்கி சேவையை வழங்குவதில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர்கள் Internet Banking மூலம் Mobile Number-யை Change செய்ய SBI அனுமதிக்கிறது.
Table of Contents
SBI Internet Banking
SBI Internet Banking சேவையின் மூலம் பெரும்பாலான வங்கி வேலைகளை வீட்டில் இருந்தவாறே செய்யலாம். Mobile Number Change செய்தல், Online Money Transfer, New ATM Appy செய்தல், PIN Number Set செய்தல், RD மற்றும் FD கணக்குகளை தொடங்குதல் போன்ற எண்ணற்ற சேவைகளை SBI இணைய வங்கி மூலம் பெறலாம்.
Mobile Number-யை இணையவங்கி சேவையின் மூலம் மாற்றுவதற்கு, வாடிக்கையாளர்கள் Internet Banking சேவையை பதிவு செய்திருக்க வேண்டும்.
Procedure to Change Mobile Number in SBI Account Online
SBI Bank Account இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை Online மூலம் மாற்றுவதற்கான செயல்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
Step 1: முதலில் https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற SBI -ன் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: உங்களின் இணைய வங்கியின் Username மற்றும் Password-யை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது உங்களின் Internet Banking பக்கம் திறக்கும். அதில் My Accounts & Profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: பிறகு Profile என்ற Option-யை கிளிக் செய்க.
Step 5: Personal Details / Mobile என்ற பிரிவுக்கு செல்ல வேண்டும்.
Step 6: உங்களின் Profile Password-யை உள்ளிட்டு Submit என்பதை அழுத்த வேண்டும்.
Step 7: இப்பொழுது மொபைல் எண்ணை Change செய்வதற்கான Option தோன்றும்.
Step 8: Change Mobile Number-Domestic only என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 9: இந்த Page-ல் New Mobile Number மற்றும் Retype Mobile Number என்ற இடத்தில் புதிய மொபைல் எண்ணை கொடுத்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Verification Methods
இப்பொழுது மூன்று விதமான Verification முறைகள் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒரு முறையில் (Method) Verification செய்ய வேண்டும்.
Method: 1
Step 1: By OTP on both the Mobile Number என்பதை தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கு பற்றிய தகவல்கள் வரும். அதில் Proceed என்பதை அழுத்த வேண்டும்.
Step 3: இந்த பக்கத்தில் ATM Card Number-யை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: உங்களின் ATM Card குறித்த தகவல்களை (Card Number, Expiry Date, PIN, Card Holder Name) கொடுத்து Confirm என்பதை அழுத்த வேண்டும்.
Step 5: நீங்கள் கொடுக்கும் ATM Card குறித்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், இரண்டு மொபைல் எண்களுக்கும் OTP மற்றும் Reference Number வரும்.
Step 6: இரண்டு மொபைல் எண்களில் இருந்தும் பின்வரும் வடிவில் SMS அனுப்ப வேண்டும்.
ACTIVATE <8 digit OTP value> <13 digit reference number> to 567676
E.g. ACTIVATE 12345678 UM12250500243
மேற்கண்ட முறையில் SMS செய்தவுடன் உங்களின் புதிய மொபைல் நம்பர் Change ஆகிவிடும். இதை Profile பிரிவில் பார்த்துக்கொள்ளலாம்.
Method: 2
Step 1: IRATA என்பதை தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: தற்போது வங்கிக்கணக்கு பற்றிய தகவல்கள் வரும். அதில் Proceed என்பதை அழுத்த வேண்டும்.
Step 3: ATM Card Number-யை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: உங்களின் ATM Card குறித்த தகவல்களை (Card Number, Expiry Date, PIN, Card Holder Name) கொடுத்து Confirm என்பதை அழுத்த வேண்டும்.
Step 5: இப்பொழுது உங்களின் புதிய மொபைல் எண்ணிற்கு 10 இலக்க IRATA Reference Number வரும்.
Step 6: உங்களுக்கு அருகில் உள்ள SBI ATM Center-யை அணுகவும்.
Step 7: ATM Center-ல் Debit Card-யை Insert செய்து Service என்ற Option-யை தேர்வு செய்யவும்.
Step 8: PIN Number-யை உள்ளிட்டு Others > Internet Banking Request Approval என்றவாறு தேர்வு செய்யவும்.
Step 9: இப்பொழுது 10 இலக்க IRATA Reference Number-யை Enter செய்ய வேண்டும்.
Step 10: உங்களின் புதிய மொபைல் எண் Verify ஆகிவிடும். மேலும் புதிய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
Method: 3
Step 1: Approval through Contact Center என்ற தேர்வை தெரிவு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: இப்பொழுது வங்கிக்கணக்கு மற்றும் ATM Card-யை தேர்வு செய்து Confirm என்பதை அழுத்த வேண்டும்.
Step 3: உங்களின் ATM Card குறித்த தகவல்களை (Card Number, Expiry Date, PIN, Card Holder Name) கொடுத்து Confirm என்பதை கிளிக் வேண்டும்.
Step 4: இப்பொழுது உங்களின் புதிய மொபைல் எண்ணிற்கு Reference Number வரும்.
Step 5: SBI Contact Center-ல் ஒரு நபரிடமிருந்து மூன்று வேலைநாட்களுக்குள், உங்களின் புதிய மொபைல் எண்ணிற்கு அழைப்பு வரும்.
Step 6: உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன் தொடர்பு மைய நபரிடமிருந்து Reference Number-யை கேளுங்கள்.
மேற்கூறிய மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி உங்களின் SBI Bank Account இல் உள்ள Mobile Number யை Change செய்யலாம்.
இன்று நீங்கள் SBI வங்கிக்கணக்கில் மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள comment section-ல் பதிவிடவும். மேலும் புதிய பதிவுகளை வெளியிடும்போது அதற்கான அறிவிப்புகளை பெறுவதற்கு பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்
Thank you Very much