How to Apply For SBI Debit Card in Online: Step-by-step Guide
நீங்கள் SBI வங்கியில் புதிய ATM Card-க்கு விண்ணப்பிக்க போகிறீர்களா ? ஆம் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளரும் Debit Card வைத்திருப்பதை காண முடிகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை ATM Card மூலமாகத்தான் எடுக்க விரும்புகிறார்கள்.
ஏனெனில் ATM இயந்திரத்தில் விரைவாகவும், எளிமையாகவும் பணத்தை Withdraw செய்ய முடியும். ATM சேவையானது, வாரத்தின் ஏழுநாட்களிலும், 24 மணி நேரம் இயங்குவதால், நினைத்த நேரத்தில் பணத்தை எடுக்கலாம். எனவே Debit Card ஆனது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது.
உங்களின் Debit Card தொலைந்துவிட்டாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ அதை பயன்படுத்த இயலாது. இந்நிலையில் நீங்கள் புதிய ATM அட்டைக்கு விண்ணப்பிப்பது அவசியமாகும். SBI வங்கியில் New ATM Card-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றிய தகவலைகளை இந்த கட்டுரையில் கூறுகிறேன்.
Table of Contents
State Bank of India (SBI) Online Services
வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான சேவைகளை வழங்கும் வங்கிகளில் State Bank of India வங்கியும் ஒன்றாகும். SBI வங்கி தனது சேவைகளை நவீனமயமாக்கி, வாடிக்கையாளர்கள் வங்கிக்கிளைக்கு வரும் அவசியத்தை நீக்குகிறது.
அதாவது மொபைல் எண்ணை மாற்றுதல், ஆன்லைன் பரிவர்த்தனை, புதிய ATM அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆன்லைன் மூலம் ATM PIN-யை மாற்றுதல், ஆன்லைன் Demand Draft போன்ற எண்ணற்ற சேவைகளை Online இல் வழங்குகிறது.
SBI வழங்கும் அனைத்து Online சேவைகளையும் பெற வாடிக்கையாளர் Internet Banking சேவையை பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
SBI Internet Banking சேவையை எவ்வாறு Register செய்வது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
How to Register SBI Internet Banking Online
How to Apply For SBI New Debit Card in Online
SBI இல் புதிய Debit Card-க்கு Apply செய்ய வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் Internet Banking மூலம் Online வழியாகவே ATM அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
Online மூலம் SBI ATM Card-க்கு விண்ணப்பிக்க தேவையானவை:
- Internet Banking
- Register Mobile Number
பின்வரும் செயல்முறைகளை பயன்படுத்தி இணையம் வழியாக SBI இந்த புதிய ஏ.டி.ம் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
Step 1: SBI வங்கியின் Internet Banking இணையத்தில் சென்று உங்களின் Net Banking-யை Login செய்யவும்.
Step 2: இப்பொழுது SBI Net Banking இன் Dashboad திறக்கும். அதில் e-Services என்பதை தேர்வு செய்க.
Step 3: முதலாவதாக உள்ள ATM Card Services என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: தற்போது ATM Card Services என்ற பக்கம் திறக்கும். அதில் Request ATM / Debit Card என்பதை தேர்வு செய்யவும்.
Step 5: இந்த பக்கத்தில் Primary Account, Card Category, Type of Debit Card போன்றவற்றை தேர்வு செய்யவும்.
Name on the Card என்ற இடத்தில் உங்களின் பெயரை Type செய்யவும். நீங்கள் கொடுக்கும் இந்த பெயரானது Debit Card இன் மேல் Print ஆகும்.
Check Box-யை டிக் செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 6: இதில் Delivery Address-யை தேர்வு செய்ய வேண்டும்.
Registered Address என்பதை தேர்வு செய்தால், புதிய Debit Card ஆனது நீங்கள் ஏற்கனவே வங்கியில் கொடுத்த முகவரிக்கு வரும். நீங்கள் வேறு முகவரியில் இருந்தால் New Address என்பதை தேர்வு Address-யை Enter செய்யவும்.
பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
Step 7: நீங்கள் Registered Address என்பதை தேர்வு செய்யும்போது, அந்த முகவரி தெரியும். இப்பொழுது Submit என்பதை அழுத்துக.
Step 8: Using One Time Password (OTP) என்பதை கிளிக் செய்யவும்.
Step 9: இப்பொழுது உங்களின் SBI வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.
Step 10: உங்களின் Online விண்ணப்பம் வெற்றிகரமாக Submit செய்யப்பட்டுவிடும்.
நீங்கள் Apply செய்த பிறகு 7-8 வங்கி வேலை நாட்களுக்குள் புதிய Debit Card-யை பெறுவீர்கள். புதிய கார்டை பெற்றவுடன் ATM Center அல்லது Netbanking மூலமாக PIN நம்பரை Set செய்துகொள்ளலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Change Mobile Number in SBI ATM Machine
- How to Change Mobile Number in Online – SBI
- Withdraw Cash Without ATM Card – Yono Cash
- SBI Cash Deposit Machine
- How to Manage SBI Debit Card on Mobile