SBI Online

How to Reset / Forgot SBI Profile Password in Online

நீங்கள் SBI Internet Banking சேவையை பயன்படுத்தும் போது எண்ணற்ற சேவைகளை இணையம் வழியாக பெறலாம். ஆனால் சில சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது அதற்க்கு Profile Password யை பயன்படுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை உங்களின் Profile Password யை மறந்துவிட்டால், அதை எவ்வாறு Reset செய்து புதிய Password யை Set செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நீங்கள் கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கு முன்பு சுயவிவர கடவுச்சொல் (Profile Password) என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே முதலில் அதை பற்றி அறிந்துகொள்வோம்.

What is SBI Profile Password

SBI Profile Password என்பது உங்களின் Internet Banking கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் ஒரு Password ஆகும். SBI இணைய வங்கி சேவையில் உள்ள Profile Option இல் இருக்கும் சேவைகளை பெறுவதற்கு சுயவிவர கடவுச்சொல்லின் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, Mobile Number-யை மாற்றுதல், Demand Draft, Beneficiary Add செய்தல், Login Password-யை மாற்றுதல் போன்ற சேவைகளுக்கு சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

நீங்கள் சில நேரங்களில் உங்களின் சுயவிவர கடவுச்சொல்லை மறந்துவிடலாம். அவ்வாறு மறந்துவிட்டாலும் அதை எளிதாக மீட்டெடுக்க முடியும். 

Read  Tamil Nadu 12th Exam Result 2023: Check Your Result

நீங்கள் சுயவிவர கடவுச்சொல்லை மீட்டுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளீர்கள் என்றால், அதற்கான முழு தகவல்களையும் இந்த கட்டுரையில் பெறுவீர்கள்.

SBI இணைய வங்கியின் Profile Password-யை Reset செய்வதற்கு 3 விதமான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி கடவுச்சொல்லை மீட்டெடுக்கலாம்.

1. How to Reset SBI Profile Password Using Hint Question Answer

SBI வங்கியில் Internet Banking சேவையை பதிவு செய்து, அதை முதல் முறையாக Login செய்யும்போது சுயவிவர கடவுச்சொல்லை Set செய்யும் Option வரும். மேலும் அதற்கு கீழே Hint Question மற்றும் Answer போன்றவற்றை தேர்வு செய்திருப்பீர்கள். அந்த Hint Question மற்றும் Answer-யை கொண்டு Online மூலமாகவே SBI Profile Password யை Reset செய்யலாம்.

Hint Question Answer மூலம் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கான செயல்முறைகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

Step 1: முதலில் Online SBI என்ற இணைய வங்கி தளத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: உங்களின் Internet Banking-ன் Username மற்றும் Password-யை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.

Login SBI Net Banking

Step 3: My Accounts & Profile என்பதை அழுத்த வேண்டும்.

Click My Accounts & Profile

Step 4: Profile என்பதை கிளிக் செய்க.

Select Profile Option - SBI Profile Password

Step 5: My Profile என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Select My Profile - SBI Profile Password

Step 6: Forgot Profile Password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Forgot Profile Password - SBI

Step 7: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.

State Bank of India OTP

Step 8: தற்போது Password யை Reset செய்வதற்கான தேர்வுகள் தோன்றும். அதில் Using Hint Questions Answer என்பதை தேர்வு செய்யவும்.

Read  SBI Bank has Introduced OTP to Login to Internet Banking

SBI Profile Reset Options

Step 9: நீங்கள் ஏற்கனவே set செய்த Hint Question மற்றும் Answer-யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்க.

Enter Question & Answer

Step 10: இப்பொழுது உங்களின் New Profile Password-யை set செய்ய வேண்டும். மேலும் Hint Question மற்றும் அதற்கான Answer-யையும் Set செய்ய வேண்டும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Set New Profile Password in SBI

 

Step 11: நீங்கள் Submit பட்டனை அழுத்தியவுடன் உங்களின் சுயவிவர கடவுச்சொல் வெற்றிகரமாக Reset ஆகிவிடும்.

 

2. How to Reset SBI Profile Password by Visiting Branch

உங்களிடம் Hint Question Answer மற்றும் ATM Card இவை இரண்டும் இல்லையென்றால், நீங்கள் வங்கிக்கிளைக்கு சென்று Request கொடுக்க வேண்டும். அதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Step 1: இரண்டாவதாக உள்ள By Visiting Branch என்ற Option யை தேர்வு செய்யவும்.

SBI Profile Reset Options

Step 2: இப்பொழுது Forgot Hint Answer என்ற பக்கம் திறக்கும்.

Step 3: அதில் உங்களுக்கு அருகில் உள்ள SBI Branch-ன் Branch Code-யை கொடுத்து Get Branch Name என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4: தற்போது நீங்கள் கொடுத்த Branch Code-க்கு உண்டான வங்கிக்கிளையின் பெயர் தெரியும்.

Step 5: இப்போது Submit என்பதை அழுத்த வேண்டும்.

Enter Branch SBI Code

Step 6: இந்த பக்கத்தில் தோன்றும் Request Form-யை Download செய்ய வேண்டும்.

Download Form - SBI Profile Password

Step 7: Download செய்த அந்த Form-ல் உங்களின் கையெழுத்து இட்டு நீங்கள் தேர்வு செய்த வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Read  SBI Internet Banking சேவையை Online-ல் Open செய்வது எப்படி

 

3. Reset Profile Password Through ATM Debit Card

உங்களின் SBI ATM Card யை கொண்டும் சுயவிவர கடவுச்சொல்லை மீட்டெடுக்கலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: மூன்றாவதாக உள்ள Approval Through ATM Debit Card என்ற Option யை தேர்வு செய்க.

Step 2: Account Number யை தேர்வு செய்து Proceed என்பதை அழுத்தவும்.

Select SBI Account For Profile Password Reset

Step 3: Active நிலையில் உள்ள Debit Card Number யை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

SBI Debit Card

Step 4: உங்களின் Debit Card இன் Expiry Date, Card Holder Name, ATM PIN போன்றவற்றை Type செய்து Proceed என்பதை கிளிக் செய்க.

SBI ATM Card Details

Step 5: நீங்கள் சரியான தகவல்களை உள்ளிட்ட பிறகு Your debit card validation is success என்ற செய்தி தோன்றும். மேலும் இப்பொழுது சில வினாடிகளில் Password யை Set செய்யும் பக்கத்திற்கு Redirect ஆகும்.

Step 6: இந்த பக்கத்தில் புதிய கடவுச்சொல்லை Set செய்யலாம்.

இதையும் படியுங்கள் 

சுருக்கம் 

இன்று நீங்கள் SBI வங்கிக்கணக்கின் சுயவிவர கடவுச்சொல்லை Reset செய்து புதிய கடவுச்சொல்லை Set செய்யும் 3 வழிகளை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த கட்டுரையில் ஏதாவது  சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடவும்.

Frequently Asked Questions (FAQ)

Profile Password என்றால் என்ன?

உங்களின் SBI கணக்கில் உள்ள சுய விவரங்களை அணுகுவதற்கு பயன்படும் கடவுச்சொல்லே Profile Password ஆகும்.


SBI Internet Banking இல் Login Password மற்றும் Profile Password வெவேறானவையா?

ஆம். இரண்டும் வெவேறானவை ஆகும்.


Login மற்றும் Profile Password க்கு ஒரே Password யை பயன்படுத்த முடியுமா?

முடியாது. இரண்டிற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களை  பயன்படுத்த வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole