SBI Online

How to Lock & Unlock SBI Net Banking Access in Online

SBI வங்கியானது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, Net Banking Access யை Lock மற்றும் Unlock செய்யும் வசதியை வழங்குகிறது. SBI வழங்கும் இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது ?  இதை பயன்படுத்துவதால் என்ன பயன் ? போன்ற வினாக்களுக்கான முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் கூறுகிறேன்.

What is Net Banking?

வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு விதமான சேவைகளை, ஆன்லைன் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளன. வங்கிகள் வழங்கும் Internet Banking சேவையின் மூலம் வீட்டில் இருந்தவாறே பெரும்பாலான சேவைகளை, இணைய வழி மூலமாகவே வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.

வங்கிகள் வழங்கும் இணைய வங்கி சேவையில் Fund Transfer, Recharge, Bill Payment, ATM Card Service, RD & FD Deposit இது போன்ற மேலும் பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

இந்த இணைய வங்கி சேவையானது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஏனெனில் பெரும்பாலான வங்கி சேவைகளை பயன்படுத்த, அவர்கள் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளர்கள், எங்கிருந்தும் வங்கிப்பணிகளை முடிக்க இயலும்.

இணைய வங்கி சேவையினை Net Banking, Internet Banking மற்றும் Online Banking என பல பெயர்களில் அழைப்பார்கள். இவை அனைத்தும் வெவ்வேறானவை என்று குழப்பம் கொள்ள தேவையில்லை.

Read  How to Upgrade Access Level in SBI Internet Banking

Why SBI offers Net Banking Lock & Unlock facility

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, வங்கிகள் வழங்கும் Net Banking சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மக்கள் Internet Banking சேவையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இணைய வங்கி மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் வங்கித்தகவல்களை திருடி, அதன் மூலம் மோசடி செய்ய சில மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் வலையில் சிக்கி தங்களின் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இவற்றை தடுப்பதற்கு நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான State Bank of India ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம், ஒருவர் Net Banking சேவையை Lock செய்து, பிறகு தேவைப்படும் நேரத்தில் Unlock செய்ய முடியும். 

ஒரு நபர் இணைய வங்கி சேவையை Lock செய்யும்போது, அவரின் User Access Lock ஆகிவிடும். அவ்வாறு SBI Net Banking இன் User Access Lock ஆகிவிட்டால், அவரின் இணைய வங்கி சேவை தற்காலிகமாக முடக்கி  வைக்கப்படும்.

முடக்கிய பிறகு, அந்த நபரின் Username மற்றும் Password ஆனது மற்றவர்களுக்கு தெரிந்தாலும், அதை அவர்களால் பயன்படுத்த இயலாது. அந்த நபர் எப்பொழுது User Access யை Unlock செய்கிறாரோ, அதுவரைக்கும் இணைய வங்கி சேவையானது முடக்கி வைக்கப்பட்டிருக்கும்.

Things to Keep in Mind Before Locking Internet Banking

நீங்கள் உங்களின் இணைய வங்கி சேவையை Lock செய்வதற்க்கு முன் பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

Read  SBI Internet Banking சேவையை Online-ல் Open செய்வது எப்படி

நீங்கள் இணைய வங்கி சேவையை லாக் செய்வதற்கு முன்னர், உங்களின் Profile Password யை எங்காவது பாதுகாப்பாக எழுதி வைக்க வேண்டும்.

உங்களின் Profile Password ஆனது Login Password அல்ல. இது Login Password இல் இருந்து வேறுபட்டது.

நீங்கள் முதல்முறையாக SBI Net Banking யை Login செய்யும்போது, Profile Password யை உருவாக்கி இருப்பீர்கள்.

கடவுச்சொல்லானது உங்களுக்கு நினைவில் இல்லையென்றால், இணைய வங்கியை Login செய்து Forgot Profile Password என்ற Option-யை பயன்படுத்தி புதிய கடவுச்சொல்லை உருவாக்கிக்கொள்ளலாம்.

இணைய வங்கியை Unlock செய்ய Profile Password தேவைப்படும் என்பதை நினைவில் கொள்க.

How to Lock & Unlock SBI Net Banking

பின்வரும் செயல்முறைகளின் மூலம் SBI இணைய வங்கி சேவையை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்.

To Lock the Internet Banking

Step 1: முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் 

Step 2: இந்த பக்கத்தில் இருக்கும் Lock & Unlock User என்பதை கிளிக் செய்யவும்.

Click Lock & Unlock User Access

Step 3: இப்பொழுது ஒரு Popup திரை திறக்கும். அதில் Select Lock or Unlock User Access என்ற இடத்தில் Lock User Access என்பதை தேர்வு செய்யவும்.

பிறகு உங்களின் Username மற்றும் Account Number-யை உள்ளிட்டு Confirm என்ற பட்டனை அழுத்தவும்.

Read  How to Register Complaint in SBI Online for Bank Issues

Enter Username & Account Number

Step 4: இப்பொழுது திறக்கும் Popup திரையில் OK என்பதை கிளிக் செய்க.

Click Ok

Step 5: தற்போது உங்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்க.

Enter OTP and Click Submit

Step 6: இப்பொழுது உங்களின் Net Banking User Access வெற்றிகரமாக Lock செய்யப்பட்டது என்ற செய்தி தோன்றுவதை காணலாம்.

Now Successfully Lock User Access

To Unlock the Internet Banking

Step 1: User Access-யை Unlock செய்ய www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் 

Step 2: அங்கே இருக்கும் Lock & Unlock User என்பதை கிளிக் செய்யவும்

Click Lock & Unlock User Access

Step 3: Select Lock or Unlock User Access என்ற இடத்தில் Unlock User Access என்பதை தேர்வு செய்க.

பிறகு அதற்கு கீழே உள்ள Username மற்றும் Account Number-யை நிரப்பி Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Unlock User access and click submit

Step 4: இப்பொழுது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.

Enter OTP and Submit

Step 5: இந்த பக்கத்தில் Unlock செய்வதற்கான Option வரும். அதில் முதலாவதாக உள்ள Using Profile Password  என்பதை தேர்வு செய்யவும்.

Choose Profile Password

Step 6: இதில் உங்களின் Profile Password-யை Enter செய்து Submit செய்யவும்.

Enter Profile Password

Step 7: இப்பொழுது உங்களின் User Access வெற்றிகரமாக Unlock செய்யப்பட்டது என்ற செய்தி தோன்றும்.

உங்களின் SBI User Access-யை Unlock செய்த பிறகு இணைய வங்கி Activate ஆகிவிடும். இப்பொழுது மீண்டும் பழையபடி உங்களின் இணைய வங்கி சேவையினை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole